Published:Updated:

டூயட் நன்றி + ஆடு, பசு, யானை... கொரில்லா?!

டூயட் நன்றி + ஆடு, பசு, யானை... கொரில்லா?!

டூயட் நன்றி + ஆடு, பசு, யானை... கொரில்லா?!
விகடன் பொக்கிஷம்...
டூயட் நன்றி + ஆடு, பசு, யானை... கொரில்லா?!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
டூயட் நன்றி + ஆடு, பசு, யானை... கொரில்லா?!
 
டூயட் நன்றி + ஆடு, பசு, யானை... கொரில்லா?!
டூயட் நன்றி + ஆடு, பசு, யானை... கொரில்லா?!
டூயட் நன்றி + ஆடு, பசு, யானை... கொரில்லா?!
டூயட் நன்றி + ஆடு, பசு, யானை... கொரில்லா?!

''மதிப்புக்குரிய மாற்றுக்கட்சித் தோழர், கடந்த ஐந்தாண்டுகளில் மக்கள் சபையில் சாதித்தது என்ன? அவர் ஒரு முறையாவது சபாநாயகரை எதிர்த்து வாதாடியது உண்டா? மாறாக நான் இருபது முறை வெளி நடப்பு செய்திருக்கிறேன்.. ஓயாமல் கூச்சல் போட்டு சபை நடவடிக்கையையே நிறுத்தி வைத்திருக்கிறேன்... மொத்தம் ஆறு மாதங்கள் சபை நடவடிக்கைகளிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறேன்....''

(2-5-65)


டூயட் நன்றி + ஆடு, பசு, யானை... கொரில்லா?!
ஆடு, பசு, யானை... கொரில்லா?!

'கொரில்லா'வை வைத்து ஒரு படம் எடுக்க விரும்பினாராம் தேவர்.அதற்காக இரு கொரில்லா குரங்குகளை லண்டனிலிருந்து தருவிக்க, தற்போது டில்லியிலிருக்கும் தமிழக அரசின் தனிப் பிரதிநிதியாக இருக்கும் கே.ராஜாராமை அணுகியிருக்கிறார்.

ராஜாராமும் லண்டனில் உள்ள தனது நண்பர் தங்கராஜ் என்பவரின் உதவியுடன் ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த தருணத்தில், சின்னப்பா தேவர் மறைந்து விட்டார். இதனால் 'கொரில்லா' நடிக்கும் படம் தயாரிக்க முடியாமலே போய்விட்டது.

(8-4-79)


டூயட் நன்றி + ஆடு, பசு, யானை... கொரில்லா?!
சினிமா நடிகைகளுக்கு ஒரு சுலோகம்!

ரு சமயம் நாடகத் தந்தை சம்பந்த முதலியார் அவர்கள் சிவகெங்கையில் ஒரு வயோதிகரைச் சந்தித்தார். அவருக்கு சுமார் 90 வயது இருக்கும் என்று முதலியார் அவர்கள் தீர்மானித்து, சற்று தயக்கத்தோடு அவரிடம், ''உங்களுக்கு என்ன வயதாகிறது?'' என்று கேட்டார்.

உடனே அவர் ''ஒருவன் தன் வயதை வெளியில் சொல்லக் கூடாது என்று சாஸ்திரத்தில் இருக்கிறது..'' எனச் சொல்லி, அப்படி இருக்கும் அந்த வடமொழி சுலோகத்தையும் சொன்னார்.

இச்சம்பவம் நடந்த பிறகு, சம்பந்த முதலியார் அவர்கள் ''அந்த வடமொழி சுலோகத்தை நான் அவரிடம் சரியாகக் கேட்டு மனப்பாடம் செய்து கொள்ளாமல் போய்விட்டேன்... தற்போது தங்கள் வயதைச் சொல்லிக் கொள்ளத் தயங்கும் சினிமா நடிகைகளுக்கும், நடிகர்களுக்கும் அந்த சுலோகத்தைச் சொல்லிக் கொடுத்திருப்பேனே!'' என வருந்தினாராம்.

(21-2-65)


டூயட் நன்றி + ஆடு, பசு, யானை... கொரில்லா?!
டூயட் நன்றி

த்மஸ்ரீ விருது வாங்கியதற்காக சிவாஜி கணேசனுக்கும், பானுமதிக்கும் சமீபத்தில் பிலிம் வர்த்தக சபையில் விருந்து ஒன்று அளிக்கப்பட்டது.

நன்றி தெரிவிக்க, இருவரும் சேர்ந்து எழுந்து வந்து 'மைக்' அருகில் நின்றனர்.

சிவாஜி ஆரம்பித்தார்... ''சகோதர சகோதரிகளே...!''

பானுமதி தொடர்ந்தார்... ''சோதரி.... சோதருலாரா....''

''உங்கள் அனைவருக்கும்...' என்று சிவாஜி கூறியதும், ''மீரு அந்தருகி...!'' என்றார் பானுமதி.

''என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...!''

''நாயக்க வந்தனமுலு சமர்பிஞ்சுகுண்டானு...''

இவ்வாறு சிவாஜி சொன்னதையே தெலுங்கில் பானுமதி மொழி பெயர்த்துக் கூற, இப்படி இருவரும் சேர்ந்து நன்றி தெரிவித்தது கூட்டத்தினருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. கூட்டத்தோடு சேர்ந்து இவர்களும் சிரித்துவிட்டனர்.

(27-2-66)


உஷ்! பேசாதே!

ணக்கம். 21-2-65 இதழ் ஆனந்த விகடனில் 'பட உலகில்' பகுதியில் நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார் அவர்களைப் பற்றிய சிறு குறிப்பைப் படித்தேன். அவர் அறிந்து கொள்ள முடியாமல் போன சுலோகத்தை நான் எழுதி அனுப்பியிருக்கிறேன். இதை நான் எனது 85 வயதான தாத்தாவிடமிருந்து தெரிந்துகொண்டு அனுப்புவதால், சரியாகவே இருக்குமென்று நினைக்கிறேன்.

அந்த சுலோகம்

டூயட் நன்றி + ஆடு, பசு, யானை... கொரில்லா?!

ஆயுர்விருத்தம், க்ருஹசித்ரம், மந்த்ரமௌஷதமைதுனே
தானம் மானாபமாநௌ ச நவ கோப்யானி காரவேத்.

இந்த சுலோகத்தின் கருத்தாவது: தனது வயது, சொத்து, வீட்டில் நடந்த சண்டை, சிறந்த மந்திரம், நல்ல மருந்து, கணவன் மனைவியின் பிரியம், தானம், தனக்கேற்பட்ட புகழ், அவமானம் ஆகிய இந்த ஒன்பது விஷயங்களையும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒருவரிடமும் கூறக்கூடாது என்பதாம்.

(சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்ற புத்தகத்திலிருந்து)

-வி.கே.கௌஸல்யா, சின்ன காஞ்சீபுரம்.

(7-3-65)


நிரந்தரமான இடம்!

ரு சமயம் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு அவர் பிறந்த ஊராகிய நாகர்கோவிலில், நகர சபை சார்பாக ஒரு பிரமாத வரவேற்பு அளிக்கப்பட்டது.

குறிப்பிட்ட நேரத்தில் கலைவாணர் தவறாது வந்து, அங்கே தரையில் அமர்ந்திருந்த தம் பழைய நண்பர் ஒருவரின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். இதைக் கண்ட

டூயட் நன்றி + ஆடு, பசு, யானை... கொரில்லா?!

நண்பர் வியப்படைந்தார். ''என்ன நீங்க, இங்கே வந்து இப்படி உட்கார்ந்திட்டீங்க...? மேடையிலுள்ள ஆசனத்தில் போய் அமருங்க'' என்று வேண்டிக் கொண்டார்.

அதற்குக் கலைவாணர் ''அதெல்லாம் நிலையான இடமில்லை. (தரையைக் காட்டியபடி) இதுதான் நிரந்தரமான இடம். கடைசியில் இதில்தான் வந்து சேர வேண்டும்'' என்று மறுமொழி கூறினார்.

இந்தப் பதிலைக் கேட்டு நண்பர் மெய்சிலிர்த்துப் போனார்.

(2-5-65)


டூயட் நன்றி + ஆடு, பசு, யானை... கொரில்லா?!
அவர்கள் கதை!

ஜெயகாந்தனின் முதல் நாவல், 'வாழ்க்கை அழைக்கிறது' வெளி வந்தது. அது ஓரளவு அவருடைய சுயசரிதைதான். அகிலனின் முதல் கதை, 'அவன் ஒரு ஏழை.' அது அவருடைய சுயசரிதைதான்.

(5-11-78)

 
டூயட் நன்றி + ஆடு, பசு, யானை... கொரில்லா?!
டூயட் நன்றி + ஆடு, பசு, யானை... கொரில்லா?!