Published:Updated:

காலப் பெட்டகம்

காலப் பெட்டகம்

காலப் பெட்டகம்
விகடன் பொக்கிஷம்..
காலப் பெட்டகம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்

விகடத்தின் பயன்

விகடம் என்பது மனச்சந்துஷ்டியைத் தரும் சொல். பண்டைக்கால அரசர்கள் தங்கள் மனத்தை அரசியல் விஷயத்தில் செலுத்தித் தளர்ந்து அயர்ச்சியாயிருக்குந் தருணத்தில் மனம் குதூகலமடைய, விகட கவிகளை அருகில் வைத்துக்கொண்டு வினோதமாகக் காலங்கழிப்பது வழக்கம். விகடம் என்றால் எத்தன்மையாளரும் சந்தோஷப்படுவார்கள். விகடம் என்றால், நாடக மேடைகளில் கோமாளிகள் பேசும் கூற்றை யத்ததல்ல. விகடம் என்பது அறிவாளிகள், மன்னர்கள், மகான்கள் முதலிய யாவரும் மெச்சத்தக்கதாயிருத்தல் வேண்டும். விகடம் பேசு பவர்கள் நன்றாய் வாசித்தவர்களாயிருத்தல் வேண்டும். சிலேடையாகப் பொருள்படுத்துந் தன்மையர்களே விகடம் பேச வல்லார். எத்துணை மனவருத்தமும் வியாதியும் ஒருவனுக்கு உண்டாயிருப்பினும் விகடத் தைக் கேட்பானேல், அவன் மனம் சந்தோஷிக்கும். விகடன் இப் பத்திரிகை மூலமாக நன்னடக்கைகளைச் சொல்லாமற் சொல்லி நற்போதம் புகட்டுகிற முறையில் போதிக்க முன்வந்துள்ளான். நமது விகடனால் உலகில் மாறுதல் கொண்ட குணத்தினர்களான பலர் நற்குணமடைவார்கள்.

- ஆனந்த விகடன் முதல் இதழிலிருந்து (1926 பிப்ரவரி)


விகடச்சிற்றுரை

மடபதியின் கல்வி

ல்வி விஷயத்தில் சிறிதும் தலையிடாது வீண் ஆடம்பரங்களிலும் மாதர் விஷயங்களிலும் கவனத்தைச் செலுத்தி, சதா சிற்றின்பப் பிரியராயிருந்த காவி பூண்ட ஒரு பணக்கார மடாதிபதியை ஒருவன் பார்த்து, ''சுவாமி! தங்களுடைய செல்வத்தையும் சித்தத்தையும் ஏன் இப்படிக் கழிக்கிறீர்கள்? சத் விஷயத்தில் கழிக்கப்படாதா?'வென்று கேட்டான். அதற்கு மடாதிபதி, ''அப்பா! என் குரு இறந்துபோகுந் தருணத்தில் எனக்கு ஒரு நல்ல வாக்கி யத்தை ஒரு சீட்டில் எழுதிக் கொடுத்தார். 'சீடா! உன் வாழ்நாளைக் கல்வி விஷயத்தில் செலவிடு' என்று எழுதும்போது, அவசரத்தில் கல்வி யென்கிற பதத்தின் நடுவெழுத்தில் புள்ளி போட மறந்துவிட்டார். அது எனக்குக் கலவி என்று தோன்றிற்று அதன்படியே நடந்து வருகிறேன்'' என்றாராம்.

காலப் பெட்டகம்

ஓட்டுக்கொடுப்பாரும் கேட்டுக்கொள்வாரும்

விகடன் ஜில் ஜில் பாடல் பாடிக்கொண்டு, கடற்கரையோரத்தில் மணல் மெத்தையில் சயனித்திருக்கையில், ஒரு பரதேசி ஓடி வந்து, ''ஐயா, விகடரே! இச்சமயம் காக்க வேணும்'' என்று கூவினான். ''ஏனையா பரதேசி, இப்படி அலறிக்கொண்டு வந்தீர்?'' என்று விகடன் கேட்க, அதற்கு அந்தப் பரதேசி, ''ஐயா! நான் வீதியே வந்து கொண்டிருக்கையில் சிலர் என் பின்னே வந்து, 'ஐயா, தயைசெய்து தங்கள் ஓட்டைக் கொடுங்கள்' என்று கேட் கிறார்கள். நான் வைத்திருக்கும் இவ்வோடு என் குருவால் தரப்பட்டது. இதைத் தவிர எனக்கு வேறு பாத்திரம் கிடையாது. இதை அவர்களுக்கு எப்படித் தருவேன்?'' என்றான். இதைக் கேட்ட விகடன், யார் அப்படிக் கேட்பது என்று எழுந்து பார்க்கையில் தாரை, தப்பட்டை, பூரி, திருச்சின்னம், மேளம், தாளம், டமா, டவுல் முதலிய வாத்தியங்கள் ஒலிக்க, கொடி, தோரணம் இவைகளைப் பறக்கவிட்டுக் கொண்டு சுமார் நூறு நூறு பேர், கூட்டமாய் ''எங்கள் தலைவரான டம்டம் என்பவருக்கே ஓட்டைக் கொடுங்கள்'' என்று கூவிக்கொண்டு வந்தார்கள்.

ஓட் கொடுக்கும் சுதந்தரத்தைப் பூண்டிலகும் பிரஜைகளே! தற்காலம் தங்களிடம் வந்து அபேட்சகர்களும், அவர்களின் பிரதிநிதிகளும் செய்யும் ஜால்ஜுல்களுக்கும், பணம், பலகாரம், முகமன், தாட்சண்யம், நேசம், பந்து, முதலியவற்றிற்கும் மகிழ்ந்து, உங்கள் ஓட்டுரிமைச் சீரைத் தீய வழியில் செலுத்தாதீர்கள். நீங்கள் ஓட் தர யாரைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்றால், அபேட்சகர்களில் இதுவரையில் நமக்காகப் பாடுபட்டவர்கள் யார், சட்ட சபையிலும் மற்றச் சபையிலும் அஞ்சாது நம்மவர்களின் குறைகளைப் பற்றிப் பேசியவர்கள் யார் என்பதனை நன்றாய் அறிந்து உத்தமர்களைத் தேர்ந்தெடுங்கள்.


விகட சம்பாஷணைகள்

காலப் பெட்டகம்

முத்தண்ணா: அப்பா சுப்பண்ணா, ஊரில் என்ன விசேஷம்?

சுப்பண்ணா: ஓர் ஆச்சரியம் உண்டு. அதாவது, இறந்துபோனவர்கள் மறுபடி திரும்பி வருகிறார்கள்.

முத்தண்ணா: எப்போ! எப்போ!! எங்கே?

சுப்பண்ணா: ஓட் போடும் போலிங் ஸ்டேஷனில்தான்!

*******************

ஓர் ஓட்டர்:| அண்ணா! உமது ஓட்டை யாருக்குக் கொடுக்கப் போகிறீர்?

மற்றொரு ஓட்டர்:| எந்தக் கட்சி சில்லறை வெட்டுகிறதோ அதற்குத்தான்.

*******************

காலப் பெட்டகம்

எஜமானன்: அடே சுப்பா, என்னை கலெக்டர் தேடிவந்தால், நான் அவரை நாளை வந்து பார்ப்பதாகச் சொல்.

வேலைக்காரன்: தேடி வராவிட்டால் என்ன சொல்ல?

*******************

கணவன்: அடீ கண்ணே, உனக்கு என் மேல் உண்மையாய் ஆசையுண்டோ?

மனைவி: அடடா, நான் எத்தனையோ பேரைப் பார்த்திருப்பேன். உங்களைப் போல சந்தேகப் பேர்வழி யாரும் இல்லை.பற்பல சேதி

காலப் பெட்டகம்

மர்டர் கார்!

யந்திரத்தால் இயங்கும் ஒரு வகை வண்டியை 'மோட்டார் கார்' என்று இதுவரையில் அழைத்தோம். அவ்வண்டிகள், உலகத்தில் தினம் நூற்றுக் கணக்கான பிராணிகளைக் கொலை செய்வதால், இதுமுதல் அவ்வண்டிகட்கு 'மர்டர் கார்' (கொலைவண்டி) என்று பெயர் கொடுத்திருக்கிறான் விகடன்.

காலப் பெட்டகம்

மறு மணம்

குவாலியர் நாட்டு சரஸ்வதிபாய் என்னும் பாலியத்தில் விதந்துவாகி விட்ட ஒரு பெண்மணியை காசி, அச்.பத்திராதிபர் மணந்து கொண்டாராம். இஃது தற்கால ஸ்திரீகளின் முன்னேற்றத்திற்கு ஆதரவானதாகும். மற்றும் பலரும் இதைக் கையாளல் நன்கு.

புகைப் பழக்கம்!

புகைப் பழக்கம் என்பது பீடி, சிகரெட், சுருட்டு, கஞ்சா முதலியனவற்றைப் பிடிப்பதைக் குறிக்கும். ஷெ பழக்கம் தற்காலம் நமது நாட்டில் மிகுதியும் பரவி வருகின்றது. அதை அனுஷ்டிப்பதால் சிறிதும் பிரதி பிரயோசனம் உள்ளதாகத் தோன்றவில்லை. யாரைப் பார்த்தாலும் பீடி, சிகரெட் இல்லாமல் இல்லை. அநேகமாக நூற்றுக்கு எழுபத்தைந்து பேர் புகைப் பிடிக்கும் வழக்கத்தைக் கையாளுகின்றனர். சிகரெட் என்பது குளிர் மிகுந்த மேனாட்டார் தாங்கள் உண்ணும் மாமிச உணவுகள் ஜீரணமாகும் என்கிற எண்ணத்தினாலும், குளிர் சற்றுத் தணியும் என்கிற எண்ணத்தினாலும் பிடித்து வந்தனர். அதைக் கண்ட நம்மவர்களும் பிடிக்கத் துவங்கிவிட்டனர். மேனாட்டாரின் நடைநொடி பாவனைகளைக் கையாள்வது பெருமை என்பது நம்மவரின் கொள்கை. அட பாவமே! இது ஒரு கொள்கையா?

காலப் பெட்டகம்

உபமானமாக, மேனாடு மிகக் குளிரும் பனியும் உள்ளதால் தேகத்தில் எந்த பாகத்தைத் திறந்திருந்தாலும் குளிரும் என்கிற காரணத்தால், மேல் சட்டை, கால் சட்டை, மேஜோடு, பூட்சு இவைகளை அணிந்தும், கழுத்தின் துவாரத்தில் காற்று நுழையாவண்ணம் காலர், டை இவைகளை அணிந்து மிருந்தார்கள். அவ்வழக்கம் அன்னார்க்கு சிறு குழந்தை முதல் பழக்கமானது. அதைக் கண்ட நம்மவர்களும் யூனிபாரம் டிரஸ் செய்து கொள்ளுவதும் வியப்பே! இவ்விதம் பல உள. அவைகள் தற்காலம் நாம் எடுத்துக்கொண்ட தலையங்கத்திற்கு ஏற்றதல்லவாதலான் விடுப்பாம்.

புகைப் பழக்கம் நம் நாட்டில் மிகுந்துள்ளதால் யாது பிரயோசனம்? சிறிதும் பயனில்லை. கேடுகள் பல உள. பீடி, சிகரெட்டை வாயில் வைத்து பிகுவாய் உள்ளுக்கிழுக்கும்போது புகை உள்ளே சென்று பல மிருதுவாகிய அவயவங்களிற்றாக்கி பின்னப்படுத்துகின்றது. புகை பிடிப்பவர்களின் இரண்டு கன்னங்களும் குழிந்து, ஏதோ ஒன்றைப்போல் தோன்றுகின்றது. பவளம் போன்றதென வருணிக்கும் தன்மையான உதடுகளோ கருகி கன்றிய வாழைப்பழம் போல வெடிப்புகள் தோன்றிக் காணப்படுகின்றது. பற்களின் இடையிலுள்ள சதைகளும் கறுத்துவிடுகின்றது. வெகு சீக்கிரத்தில் கண் கெடும். ஈரல் நைந்துவிடும். இரத்தம் முறியும். இந்திரியம் நீர்க்கும். நாக்கு உருசி தெரியாதுபோம்! இதனோடா போச்சு? சிலர் பீடி, சிகரெட் பிடிக்கிற காலத்தில் அவ்வழக்கத்தை அனுஷ்டிக்காதவர்களின் அருகிலிருந்து புகையை பக்கு பக்கென்று இழுத்து, கபீர் கபீர் என்று சுடுகாட்டுப் புகை மாதிரி விடுவதால், அருகிலுள்ளவர்கட்கு எவ்வளவு அருவருப்பாயிருக்கும் என்பதை எண்ணுங்கள்.

இங்ஙனம்,
ஸ்வாமிநாத தேசிகர்.


காலப் பெட்டகம்
வியாசம் அனுப்புவோருக்கு விஞ்ஞாபனம்

மது விகடப் பத்திரிகைக்கு வியாசங்களோ, வர்த்தமானங்களோ, விகடங்களோ, அனுப்ப எண்ணங்கொள்ளும் நேயர்கள் ஷெ வியாசங்கள் முதலியன இதற்குமுன் வேறு பத்திரிகைகளில் பிரசுரிக்காதனவைகளாய் இருப்பதோடு, அன்னியர்களால் எழுதப்பட்ட வியாசங்களின் பகுதிகளாயும், ஒரு மதத்தையோ அல்லது ஜாதியையோ தழுவியதாயும் இல்லாதிருத்தல் வேண்டும். வர்த்தமானங்கள் மட்டில் வேறு பத்திரிகைகளில் இருந்து பொறுக்கலாம். அவ்வாறன்றி ஒரே வியாசத்தைப் பல பத்திரிகைகளில் தந்தால், பிரசுரிப்பவர்கட்குப் பெருங் குறைவைத் தருகின்றதென்பதை நேயர்கள் கவனிப்பார்களாக!

 
காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்