Published:Updated:

ஆர்ட் படத்துக்கு மார்க்கெட் கிடையாது!

ஆர்ட் படத்துக்கு மார்க்கெட் கிடையாது!

ஆர்ட் படத்துக்கு மார்க்கெட் கிடையாது!
விகடன் பொக்கிஷம்.
ஆர்ட் படத்துக்கு மார்க்கெட் கிடையாது!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆர்ட் படத்துக்கு மார்க்கெட் கிடையாது!
ஆர்ட் படத்துக்கு மார்க்கெட் கிடையாது!
ஆர்ட் படத்துக்கு மார்க்கெட் கிடையாது!
ஆர்ட் படத்துக்கு மார்க்கெட் கிடையாது!
ஆர்ட் படத்துக்கு மார்க்கெட் கிடையாது!

ண்மையில் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களில், இந்தி நடிகரான நஸிருதீன் ஷாவும் ஒருவர். இளமையான வயதிலேயே இந்த விருது இவரைத் தேடி வந்தது இவரது திறமைக்குக் கிடைத்த பரிசு!

ஆர்ட் படத்துக்கு மார்க்கெட் கிடையாது!

''நான் உத்தரப் பிரதேச மாநி லத்தில் பிறந்தேன். எங்களுடைய குடும்பம் நடுத்தரக் குடும்பம். என் தந்தை அரசாங்க அதிகாரியாக இருந்தவர். இதனால் அவ ருக்கு அடிக்கடி ஊர் ஊராக மாற்றல் வரும். இந்தச் சாக்கில் நிறைய ஊர்களில் என்னுடைய குழந்தைப் பருவத்தைச் செலவிட் டது இன்னமும் என் நினைவு களில் ஊறியிருக்கிறது. சிறு வயதிலிருந்தே எனக்கு நடிப்பில் ஒரு மோகம். இருந்தாலும், என் பெற்றோரின் ஆசைக்காக, அலி கார் யுனிவர்ஸிடியில் சேர்ந்து, 1970-ம் ஆண்டு பி.ஏ. பாஸ் செய் தேன். பிறகு, 'நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா'வில் மூன்று வருடம் பயிற்சி பெற்றேன். பிறகு பூனா பிலிம் இன்ஸ்டிடியூட்டில் 'ஆக்டிங் கோர்ஸில்' சேர்ந்தேன். அங்கே இன்ஸ்டிடியூட்டின் பிரின்சிபாலாக இருந்த கிரீஷ் கர்னாட், ஷியாம் பெனகலிடம் எனக்குப் படங்களில் வாய்ப்பு தர சிபாரிசு செய்தார்.''

''நீங்கள் நடித்த முதல் படம் எது?''

''என் முதல் படம் 'நிஷாந்த்.' அதில் ஷபனா ஆஸ்மியும், ஸ்மிதா பாட்டீலும் என்னோடு நடித்தார்கள். இந்தப் படம் வெற்றியடையும் என்று நான் அப்போது எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், இந்த மாதிரி 'ஆர்ட்' படத்துக்கு அப்போது மார்க்கெட் கிடையாது. இருந் தாலும் இப்படத்தில், அதுவும் முதல் படத்தில் நான் நடித்ததில் எனக்கு முழுத் திருப்தி. படமும் பெரிய வெற்றியைப் பெற்றது!''

''சமீபத்தில் நீங்கள் நடித்த 'பார்' படத்துக்கு, வெனிஸ் திரைப் பட விழாவில் பரிசு கிடைத்தது. அதில் நீங்கள் ஏற்றிருக்கும் ஏழை அரிஜன் ரோலில் அந்த கேரக்ட ராகவே மாறி உயிர் கொடுத் திருக்கிறீர்கள் என்று கேள்விப்பட் டோம். அதில் உங்கள் நடிப்பைப் பார்க்க மிகவும் ஆவலாக இருக் கிறோம். இன்னும் அந்தப் படம் ரிலீஸாகவில்லையே?''

''நான் என்ன செய்யட்டும்? இந்தப் படத்தை வாங்க டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் முன்வரவில்லை.இந்த மாதிரி படம் பாக்ஸ் ஆபீஸில் ஹிட் ஆகாது என்பது அவர்கள் கருத்து.''

'' 'ஸ்பார்ஷ்' படத்தில் நீங்கள் நடித்ததைக் குழந்தையிலிருந்து பெரியவர் வரை நன்றாக ரசித் தார்கள். அதே போல கதா, மாசூம், ஆக்ரோஷ் போன்ற ஒவ் வொரு படத்திலும் வித்தியாச மான நஸீரை நாங்கள் பார்க்க முடிந்தது. அது எப்படி உங்களுக் குச் சாத்தியமாகிறது?''

''மக்களின் விதவிதமான கேரக்டர்களை 'அப்ஸர்வ்' செய்து அவற்றை என் மனத்தில் போட்டுப் பூட்டி வைக்கிறவன் நான். தேவைப்படும்போதெல் லாம் அவற்றை உபயோகித்துக் கொள்வேன். தவிர தியேட்டர், இன்ஸ்டிடியூட் அனுபவங்களும் எனக்குக் கை கொடுக்கின்றன!''

''நீங்கள் எத்தனை மொழிகளில் நடிக்கிறீர்கள் நஸீர்?''

''இந்தி, குஜராத்தி, கன்னடம், பெங்காலி.''

 
ஆர்ட் படத்துக்கு மார்க்கெட் கிடையாது!
-பேட்டி: சுகந்தா ஐயர்
ஆர்ட் படத்துக்கு மார்க்கெட் கிடையாது!