Published:Updated:

நடிகர் திலகத்தின் நன்கொடை!

நடிகர் திலகத்தின் நன்கொடை!

நடிகர் திலகத்தின் நன்கொடை!
விகடன் பொக்கிஷம்  
நடிகர் திலகத்தின் நன்கொடை! .

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நடிகர் திலகத்தின் நன்கொடை!
நடிகர் திலகத்தின் நன்கொடை!
நடிகர் திலகத்தின் நன்கொடை!
யாருக்கு யார் விசிறி?
நடிகர் திலகத்தின் நன்கொடை!
.
நடிகர் திலகத்தின் நன்கொடை!
நடிகர் திலகத்தின் நன்கொடை!

நானும் நண்பர்களும் பம்பாய் சென்றிருந்தபோது, பிருதிவி ராஜ் கபூரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரோடு உரையாடும்போது 'நடிப்புத் திறமை' பற்றிப் பேச்சு வந்தது. அப்போது அவர் கூறினார்...

''சினிமாவைப் பொறுத்தவரை சிறந்த நடிகனாவது சுலபம். நடை, உடை, பாவனைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏற்ற பாத்திரத்தின் உணர்ச்சிகளை முகபாவத்தில் காட்டி, அலட்டிக் கொள்ளாமல் அநாயாசமாக நடித்துப் பெயர் வாங்கிவிடலாம். மேலை நாட்டு நடிகர்களும் இப்படித்தான் செய்கிறார்கள். நடை, உடை, பேச்சு முதலியன நிஜ வாழ்வில் எப்படியோ அப்படியேதான் இருக்கும். முகபாவம் மட்டும் பாத்திரத்தின் தன்மையைக் காட்டும். ஆனால், நமது சிவாஜி இருக்கிறாரே, அவர் தனது ஒவ்வொரு அங்க அசைவிலும் பாத்திரத்தின் தன்மையைக் காட்டிவிட வேண்டும் என்று பாடுபட்டு நடிக்கிறார். அந்த முயற்சியில் வெற்றியும் பெறுகிறார். அவரைப் பெற்ற நாம் பாக்கியசாலிகள்! மற்ற நடிகர்கள் அவரிடமிருந்து கற்க

வேண்டிய நுணுக்கங்கள் பல உள்ளன. எந்த நாட்டில் பிறந்திருந்தாலும், 'சிறந்த நடிகர்' என்ற பாராட்டைப் பெறக்கூடிய திறமை அவரிடம் உள்ளது. பம்பாயில் இவரது நாடகங்கள் நடந்தால், உடல்நலத்தைக்கூடப் பொருட்படுத்தாமல் போய்ப் பார்த்துவிடுவேன். நான் ஒரு சிவாஜி ரசிகன்.''

வட இந்திய திரையுலகத் தந்தை எனப் போற்றப்படும் பிருத்விராஜ் கபூரைப் பற்றி சிவாஜி முன்பொருதரம் கூறியதென்ன தெரியுமா?

''அவரா? அவர் எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாயிற்றே! இந்தியாவில் சிறந்த நடிகர்கள் மட்டுமல்ல, மேல் நாட்டு நடிகர்களுக்கும் ஈடு கொடுக்கும் நடிகர்கள்கூட இங்கு இருக்கிறார்கள் என்பதை நிரூபித்தவராயிற்றே!அவரிடமிருந்து கற்க வேண்டியது எவ்வளவோ! அதற்கு நீண்ட ஆயுள் வேண்டும். அவர் ஒரு நடிப்புக் கடல். அவர் காலில் விழுந்து கும்பிட்டதன் பலன்தான் இன்று நான் உயர்ந்த நிலையில் இருக்கிறேன்! இந்திய நடிகர்களின் தந்தை அவர்!''

- பி.ஆர்.விசுவநாதன்.

.
நடிகர் திலகத்தின் நன்கொடை!

ண்டைத் தமிழ்நாட்டிலே அரசர்களும், பிரபுக்களும் கலைஞர்களுக்கு வாரி வழங்கு வதுதான் வழக்கமாக இருந்தது. இப்போது காலம் மாறிவிட்டது. மக்கள் மன்னர்களாக மாறிவிட்டனர்! அதனால், கலைஞர்கள் வள்ளல்களாக மாற முடிந்திருக்கிறது.

சென்ற வாரம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நகரத்தில் ஏழைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச உணவளிக்கும் திட்டத் துக்கு இதுவரை யாருமே கொடுத்தறியாத பெருந் தொகையாக ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க முன் வந்துள்ளார். கட்டபொம்மன் நாடகத்தின் நூறாவது தின விழாக் கொண் டாட்டத்தை ஒட்டி, இந்த நூறாயிரம் ரூபாய் இப் பெரும் பணிக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய செயலைக் கண்டு வீரபாண்டிய கட்டபொம்மனின் ஆன்மா ஆனந்தமடைகிறது.

நடிகர் திலகத்தின் நன்கொடை!

தமிழ்நாட்டில் இத்தகைய ஈகையுள்ளம் படைத்த கலைஞர்கள் இருக்கிறார்கள் என்பது நமது பாரதப் பிரதமருக்குத் தெரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு, நமது முதன்மந்திரி, சமீபத்தில் சென்னைக்கு விஜயம் செய்யவிருக்கும் பிரதம மந்திரி நேருஜி கையாலேயே அதை நகரசபைக்கு அளிக்கவேண்டும் என்று யோசனை கூறினார்.

நல்ல காரியங்களுக்கு உதவி புரிவதில் எப்போதுமே முன்னணியில் நின்று வருகி றார்கள் நம் தமிழ்நாட்டு நட்சத்திரங்கள். புயலடித்தாலும், வெள்ளம் வந்தாலும் அவர்கள் நெஞ்சம் நெகிழ்ந்துவிடும். ஏழை மாணவர்களுக்கு இலவச உணவு அளிக்கும் அரிய லட்சியத்துக்கு லட்சம் ரூபாய் கொடுத்த சிவாஜி கணேசன் அவர்களைக் குழந்தைகள் கொண்டாடும்; தெய்வம் வாழ்த்தும்; தமிழ்த் தாய் பெருமைப் படுவாள்!

 
நடிகர் திலகத்தின் நன்கொடை!
நடிகர் திலகத்தின் நன்கொடை!