விகடன் பொக்கிஷம்

சினிமா விமர்சனம்:

புதிய பாதை

மினி:

அனுபவமுள்ளவர்களையே கொஞ்சம் பயப்பட வைக்கிற 'ரிஸ்க்'கான சப்ஜெக்ட்! புதியவ ரான டைரக்டர் பார்த்திபன் தைரியமாக எடுத்துக் கையாண்டிருக்கிறார். இதைத்தான் 'இளங் கன்று பயமறியாது' என்பார் களோ!

மாக்ஸி:

எரிந்துகொண்டிருக்கிற ஒரு குடிசையில் பீடியைப் பற்ற வைத்துக்கொள்கிற முரட்டுத்தன மான ஆள்தான் கதையின் நாய கன் (பார்த்திபன்). குப்பைத்தொட்டியில் அநாதையாகப் பிறந்து, பசியும் பட்டினியுமாக எப்படியெல்லாமோ வளர்ந்து பேட்டை ரௌடி ஆனவன் - 'யாரைப் பற்றியும் இவனுக்குக் கவலையில்லே' என்கிறது டைட் டில் பாட்டு.

சமுதாயத்தினால் பழிக்கப்பட்ட அவன் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நெருப்புத் துண்டங்கள்!

இடிந்து போன ஒரு கட்ட டத்தைத் தன் மாளிகையாகக் கொண்டு வாழும் அந்த அடி யாள்-கம்-பேட்டை ரௌடியை எதிர்த்து 'அமைதிக் கொடி' தூக்குகிறார் பணக்கார வீட்டுப் பெண்ணான சீதா. மோசமான அந்தப் பேட்டைக்கு சீதா ஏன் வந்திருக்கிறார்... என்ன செய்யப் போகிறார் போன்ற வினாக்களுக்கெல்லாம் தெளிவான விடைகளையும் உடனுக்குடன் தந்திருக்கிறார் இயக்குநர் பார்த் திபன்.

'கற்பழித்தவனையே கல்யாணம் செய்துகொள்வேன்' என்று நாயகனின் அராஜக ஏரியாவுக்குள் வந்து, அவன் வீட்டுக்கு எதிரிலேயே 'எதிர்வீட்டு ஜன் னல்' என்ற பட்டப்பெயருடன் தங்கி... அடி மேல் அடி வைத்து அம்மியை நகர்த்துகிறார் சீதா.

'அநாவசியத் திணிப்பு' என்ற சொல்லுக்கே இடமில்லாமல் முன்னுக்கும் பின்னுக்குமாக ஒரு கனெக்ஷன் வைத்துக் காட்சிகளை அமைத்திருக்கும் பார்த்திபனின் பாங்கான நடிப்பும் - டைரக்ஷனும் பலே!

ராத்திரி பத்து மணிக்கு மேல் லுங்கியை வழித்துக்கொண்டு ஃபுல் தண்ணியில் மிதந்தபடி நம் வீட்டு அருகில் ரகளை பண்ணும் ஒரு காரெக்டரை அச்சாக அப்ப டியே கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.

பார்த்திபன் ஓடுகிற ஓட்டத்துக்கு மூச்சு வாங்காமல் ஈடுகொடுக்கிறார் சீதா. பார்த்திபனைச் சீண்டி வெறுப்பேற்றுகிற அதே சமயம், 'கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்' என்பது போல், கருப்பனைக் (சீதாவுக்குப் பிடித்த பெயர்!) கொஞ்சம் கொஞ்சமாகக் கரைக்கிறார்.

திருமண நாளன்று கற்பிழந்து கதறுகின்ற அந்த நிலையிலும் சீதாவை மனைவியாக ஏற்றுக்கொள்ள முன்வரும் மாப்பிள்ளை டாக்டர் ஸ்ரீதர்...

முரட்டுப் பேர்வழி என்று தெரிந்தும் கூடவே இருந்து சின்னச் சின்ன எடுபிடி வேலைகள் செய்துகொண்டு, அவ்வப்போது உதைகளையும் வாங்கிக் கட்டிக்கொள்ளும் அந்தப் பொடி யன்... - இப்படிச் சின்னச் சின்ன விஷயங்களில்கூட டைரக்டரின் கைவண்ணம் 'பளிச்'!

சீதாவுக்கு கொள்ளி வைக்கும் காட்சியின்போதே, 'இன்னும் ஐந்து நிமிடங்கள் திரைப்படம் தொடரும்' என்று புத்திசாலித்தன மாக 'கார்டு' போடும் டைரக்டர், கடைசியில் நாசரை ஒரு லாரி விபத்தில் சாகடித்து விடுகிறார். இத்தனை யதார்த்தமாய்ப் படம் பண்ணிவிட்டு, கடைசியில் மட் டும் 'கெட்டவன் அழிவான்' என்ற சினிமா சென்டிமென்ட்டில் சிக்கியிருக்க வேண்டுமா?

திரைப்படவுலகுக்கு 'புதிய பாதை'யின் மூலமாகப் பயணம் செய்யத் துவங்கியிருக்கும் பார்த்திபனுக்கு மேளதாளத்தோடு தாராளமாகத் தரலாம் -

சிவப்புக் கம்பள வரவேற்பு!