Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்
விகடன் பொக்கிஷம்  
தலையங்கம் .

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்
பணமிருந்தால் இடமுண்டு!
தலையங்கம்
.
தலையங்கம்

''ஏன் பிறந்தாய் மகனே, ஏன் பிறந் தாயோ'' என்று ஒரு படத்தில் ஒரு தந்தை தாலாட்டுப் பாடினார். இன்று அதே பரிதாபப் பாட்டை ஒவ்வொரு ஏழைத் தந்தையும் தாயும் பாடுவதைப் பார்க்கிறோம். பஞ்சத்தில் அடிபட்டுப் பாடவில்லை அவர்கள். பள்ளி களில் தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பதற்குப் படும் அவதியில்தான் பாடுகிறார்கள்!

'வெகுமதி கொடுத்தால்தான் அனுமதி கிடைக்கும்' என்ற வெட்கக்கேடான ஒரு நிலை, அண்மையில் சில பள்ளிகளில் தலைதூக்கி இருக்கிறது. இது மிகவும் வருந் தத்தக்கது.

''இதோ பாருங்கள், கூரை ஒழுகுகிறது, ஓடு சரிந்து தலையில் விழும்போல் இருக் கிறது. விழுந்தால் உங்கள் குழந்தைக்குதானே ஆபத்து? இரண்டு குழந்தைகளைச் சேர்க்க வேண்டுமா? இருநூறு ரூபாய் பள்ளிக்கு நன்கொடை கொடுங்கள்'' என்கிறார் ஒரு பள்ளிக்கூட நிர்வாகி.

எடுத்துக் கொடுத்தால் இடம் கிடைக்கும். 'பார்க்கிறேன்' என்றாலோ, பையனை வீட்டைப் பார்க்க அனுப்பிவிடுவார்கள். இது ஒருமுறை, இன்னொன்று... 'கட்டட நிதி' 'ஏழை மாணவர் உதவி நிதி' என்ற பெயரில் ஏதோ ஒரு கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, ரூபாய் 500, 200 என்று டிக்கெட் டுகளை அச்சடித்து வைத்துக்கொண்டு, 'அட்மிஷன்' கேட்கப் போகிறவர்களிடம் ஒரு புத்தகத்தை எடுத்து நீட்டுகிறார்கள். டிக்கெட் வாங்கினால் இடம் தருவார்கள், இல்லை யென்றால் வாயிலில் தொங்கும் 'அட்மிஷன் தீர்ந்துவிட்டது' என்ற பலகையைச் சுட்டிக் காட்டிவிடுவார்கள்!

'க... கா' கல்விக்கே இந்த நிலை என்றால், கல்லூரிகளைப் பற்றிக் கேட்கவா வேண்டும்!

தேர்வில் அதிக மார்க்குகள் வாங்கிய மாணவன் தெருவில் நிற்கிறான்.எம்.எல்.ஏ சிபாரிசு கிடைத்தவன் அவனைப் பார்த்துச் சிரிக்கிறான். சில கல்லூரிகளில் 'டொனேஷன்' கொடுத்து இடம்பெறலாம்; சில கல்லூரிகளில் குமாஸ்தாவுக்கு லஞ்சம் கொடுத்து இடம் பெற வேண்டியிருக்கிறது. இவ்வாறு, 'பணம் இல்லாதவர்களுக்குப் படிப்பும் கிடையாது' என்ற பரிதாப நிலை வந்துவிடுகிறது.

கல்வி வளர்ச்சிக்காக அரசாங்கம் எவ்வளவோ செய்கிறது. ஏழைக்கும் அது எளிதில் கிடைக்க வேண்டுமென்பதற்காகப் பல சலுகைகள் அளித்து வருகிறது. ஆனால், சில கல்வி ஸ்தாபனங்கள் இடத்துக்குப் பணம் கேட்டு, இந்த நோக்கத்தையே தகர்த்து விடுகின்றன.

பள்ளிக்கூடங்களில் இடத்துக்காகப் பணம் கேட்கும் அவக் கேடான நிலை உடனே மாற வேண்டும். ஏழைக்குக் கல்வி கிடைக்கவே கிடைக்காது என்ற அவச் சொல் நீங்க வேண்டும். இடத்துக்குப் பணம் கேட்கும் இந்தத் தீய வழக்கத்தைத் தடுக்க, அரசாங்கம் உடனே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
தலையங்கம்
தலையங்கம்