விகடன் பொக்கிஷம்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

மணிமொழி, நீ என்னை மறந்துவிடு! - தமிழ்வாணன்

மணிமொழி, நீ என்னை மறந்துவிடு! - தமிழ்வாணன்

மணிமொழி, நீ என்னை மறந்துவிடு! - தமிழ்வாணன்
விகடன் பொக்கிஷம்.
மணிமொழி, நீ என்னை மறந்துவிடு! - தமிழ்வாணன்
மணிமொழி, நீ என்னை மறந்துவிடு! - தமிழ்வாணன்
தமிழ்வாணன்
மணிமொழி, நீ என்னை மறந்துவிடு! - தமிழ்வாணன்
மணிமொழி, நீ என்னை மறந்துவிடு!
மணிமொழி, நீ என்னை மறந்துவிடு! - தமிழ்வாணன்
மணிமொழி, நீ என்னை மறந்துவிடு! - தமிழ்வாணன்

ணிமொழியின் மாமனார்தான், தன் நினைவை இழந்து மயக்கமடைந்து படுக்கையில் கிடந்தார்.

மணிமொழி அவர் அருகில் சென்று பார்த்தாள். டாக்டர் எழுந்து நின்று, மணிமொழியின் மாமியாரிடம், ''ரத்தக் கொதிப்பு! நல்ல ஓய்வு வேண்டும். நல்ல உணவு வேண்டும். அவர் மனம் மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துக் கொள் ளுங்கள். நான் போய் மருந்து அனுப்புகிறேன்'' என்றார். மாமியார் அழுதுகொண்டே தலையை அசைத்தார்.

டாக்டர் புறப்பட்டார். முத்தழகு டாக்டரின் பையைக் கையில் எடுத்துக்கொண்டு பின்னால் சென்றான். வெளியே கார் புறப்படும் ஓசை கேட்டது.

மணிமொழி மெல்ல நடந்து, வெளியே தோட்டத்திற்கு வந்து, மரத்தடியில் புல் தரையில் உட்கார்ந்து, அண்ணாந்து பார்த்தாள்.

ஒரு பறவை வானத்தில் வட்டமிட்டுக்கொண்டு இருந்தது. மணிமொழியைப் போல அதற்கும் எங்கே போவது, என்ன செய்வது என்று தெரிய வில்லையா?

பறவை, வானத்தைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்ட தைப் போல, மணிமொழியின் மனமும் இரண்டு பேரைச் சுற்றி வட்டமிட்டது. அவர்கள்...

அப்பா; முத்தழகு.

'அப்பாவைப் பிரிந்து வந்தது போல முத்த ழகையும் பிரிந்து நாம் எங்காவது சென்று விடுவதுதான் நல்லது. அவர் அண்ணி, அண்ணி என்றழைக்கும்போதெல்லாம் இதயமே பிளந்து விடுவதுபோல இருக்கிறது. ஒரு நாளைக்கு உண்மை தெரிந்த பிறகு, நாம் எப்படி மற்றவர்கள் முகத்தில் விழிப்பது? எந்தக் காலத்திலும், எந்தக் காரணத்தைக் கொண்டும் நாம் இந்த வீட்டில் தங்கியிருக்க முடியாது. இன்றைக்கே இந்த வீட்டை விட்டுப் போய்விட்டால் என்ன? இன் றைக்கேவா? மாமனார் மனம் மறந்து கிடக்கிற இந்த நேரத்தில் நாம் வெளியேறலாமா?'

- இப்படிக் கண்டதையெல்லாம் நினைத்து மணிமொழியின் மனம் கலங்கி நின்றது.

வெயில் மெல்ல மெல்ல ஏறிக் கொண்டிருந்தது. மணிமொழி எழுந்து குளிக்கச் சென்றாள்.

மணிமொழி, உடலைக் கழுவத் தண்ணீர் இருக்கிறது. உள்ளத்தைக் கழுவக் கண்ணீர் இருக்கிறது. அப்பாவை நினைக்கும்போதெல் லாம் அழும் நீ, முத்தழகை நினைக்கும்போதெல் லாம் ஆனந்தப்படுகிறாயே! நீ எங்கே சென்றா லும், எங்கே ஓடி ஒளிந்து கொண்டாலும், உன் அப்பாவும் முத்தழகும் உன் மனத்தை விட்டுப் போக மாட்டார்கள்!

12.சொல்லிவிட்டு ஓடிவிடலாம்!

ரு வாரத்திற்குப் பிறகு, ஒரு நாள்... இருட்டிவிட்ட வேளை. மாமனாரையும் மணிமொழியை யும் தவிர, வேறு எவரும் வீட்டில் இல்லை. மாமனார் நலம் பெறுவ தற்காகக் கோயிலுக்குப் போய் வழிபாடு செய்யக் குழந்தை இளங்கோவோடு போய்விட் டார் மாமியார். துணைக்குப் பாவையும் போயிருந்தாள். முத்த ழகு மருந்து வாங்கக் கடைக்குப் போயிருந்தான். தோட்டக்காரன் வீட்டிற்குப் போய்விட்டான்.

'மாமனார் அவர் அறையில் படுத்துக்கொண்டு இருக்கிறார். அவருக்கும் உடல் நன்றாகக் குணம் பெற்றுவிட்டது. அவர் மட்டும் தனியாக இருக்கும் இந்த நேரத்தில், அவரிடம் சொல்லிவிட்டு எல்லாரும் வருவதற்குள் வீட்டை விட்டு வெளியேறிவிட் டால் என்ன? நல்லதொரு வாய்ப்பு இது!' என்று மணிமொழியின் மனம் திடீரென முடிவு செய்தது.

படுத்துக் கிடந்த மணிமொழி உடனே எழுந்து சேலையைச் சரிப்படுத்திக்கொண்டு கூடத்திற்கு வந்தாள்.

இருட்டு! சமையலறைக்குப் போனாள். இருட்டு! மாமனார் படுத்துக் கிடந்த அறைக்குப் போனாள். இருட்டு!

ஐயம் கொண்ட மணிமொழி, தனக்குப் பக்கத்தில் சுவரில் இருந்த சுவிட்சைப் போட்டுப் பார்த்தாள். விளக்கு எரிய வில்லை.

'மின்சாரமே இல்லை, அத னால்தான் வீடு முழுவதும் இருண்டு கிடக்கிறது! மின்சாரம் பழுதுபட்டிருக்கும். கொஞ்ச நேர மானால் மின்சாரம் வந்துவிடும்' என்று தன்னைத் தேற்றிக் கொண்டே மணிமொழி, மாம னார் படுத்துக் கிடந்த அறைக் கதவை இன்னும் கொஞ்சம் நன்றாகத் திறந்து பார்த்தாள்.

மாமனார், அந்தப் பக்கம் சன்னலைப் பார்த்தபடி படுத்துக் கிடப்பது, சன்னல் வழியாக வந்த நிலவின் மங்கிய வெளிச்சத் தில் தெரிந்தது.

மாமனார் சும்மா படுத்துக் கிடக்கிறாரா, தூங்கிக் கொண்டு இருக்கிறாரா, தெரியவில்லை!

'மாமனாருக்குப் பக்கத்தில் போய்ப் பார்த்து, மாமா என்று அழைப்போமே' என்று எண்ணிய மணிமொழி, ஒரு காலை எடுத்து முன்னால் வைத்தாள். அப்போது, டங் என்று அடுத்த அறையில் ஓசை கேட்டது!

மணிமொழி அப்படியே நின்று விட்டாள்!

எப்போதும் பூட்டிக் கிடக்கும் அடுத்த அறையில் ஓசையா? எப்படி வரும்?

அடுத்த அறை, மாமனாரின் அறை. அந்த அறையில்தான் பெட்டகம் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் குடும்பத்தின் பல சொத்துக்கள் அந்த அறை யில் இருக்கின்றன. அந்த அறை யில் ஓசையா? வீட்டில் வெளிச் சம் இல்லாத இந்த நேரத்தில் - மணிமொழி பரபரப்புடன் அடுத்த அறைக்கு ஓடினாள்.

எப்பொழுதும் பூட்டிக் கிடக் கும் அந்த அறையின் கதவிலே பூட்டைக் காணோம். ஒரு கதவு கொஞ்சம் திறந்திருந்தது!

மணிமொழி மனம் படபடக்க அந்தக் கதவைக் கொஞ்சம் திறந்து பார்த்தாள்.

இருட்டு!

மணிமொழி, சுவரில் தடவிச் சுவிட்சு இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து சுவிட்சைப் போட் டாள். விளக்கு எரியவில்லை!

மணிமொழி திரும்பினாள். தன் அறைக்கு ஓடிப்போய் பாட் டரி லைட்டை எடுத்துக்கொண்டு வந்தாள். அவளுக்குப் பெருமூச்சு வாங்கியது. முகமெல்லாம் வியர்த்துவிட்டது!

மணிமொழி, நீ என்னை மறந்துவிடு! - தமிழ்வாணன்

அவள் அந்த அறைக்கதவைத் திறந்து பாட்டரி லைட்டை நேராகப் பிடித்துக்கொண்டு, சுவிட்சை அழுத்தப் போனாள். அப்போது...
அவளுக்கருகில் அவளுக்குத் தெரியாமல் கதவோரத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவன், பளிச்சென்று அவள் கையிலிருந்த பாட்டரி லைட்டைப் பறித்துக் கொண்டு, அவளை பிடித்து உள்ளே தள்ளினான். அடுத்த விநாடி கதவைச் சாத்திவிட்டு வெளியே ஓடிவிட்டான்!

கீழே தரையில் விழுந்த மணி மொழிக்குக் கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு எழுந்து வெளியே ஓடி வந்தாள்.

வெளியே நல்ல வெளிச்சம் இருந்தது. வெளி விளக்குகளெல் லாம் நன்றாக எரிந்துகொண்டு இருந்தன. வீட்டிலுள்ள விளக்குகள் மட்டும் எரியாததற்குக் காரணம் என்ன? மணிமொழிக்கு விளங்கிவிட்டது!

மணிமொழி, தெருவில் இறங்கி விரைந்து நடந்தாள். தெரு மூலைக்கு வந்ததும், அங்கே நின்றுகொண்டிருந்த ஒரு வாடகைக் காரில் ஏறிக் கொண்டாள். கார் பறந்தது!

மணிமொழி, தன்னந்தனியா கப் போகிறாயே! பாதுகாப்பிற்கு கையில் ஒரு துப்பாக்கிகூட இல்லாமல் போகிறாயே, அம்மா! நீ போகுமிடம் துணையோடோ, அல்லது துப்பாக்கியோடோ போகவேண்டிய இடமாயிற்றே!

13. அந்தப் பையில் என்ன இருக்கிறது?

ணிமொழி சென்றுகொண்டு இருந்த வாடகைக் கார், சாந் தோம் கடற்கரை ஓரமாக ஓரிடத் தில் நின்றது.

''அதோ பார், அந்த நான்காவது வீடுதான்! அங்கே கொண்டு காரை நிறுத்து!'' என்றாள் மணி மொழி.

''எந்த வீடம்மா?''

''அதோ ஒரு கார் நிற்கிறதே, அந்த வீடுதான்! அந்தக் காரைத்தானே நாம் பின்பற்றி வந்து கொண்டிருக்கிறோம்! நாம் புறப் பட்ட நுங்கம்பாக்கத்திலிருந்து தான் அந்தக் காரும் புறப்பட்டது. அதை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்று நினைத்தேன். பிடித்துவிட்டேன்! போ, அந்தக் காருக்குப் பின்னால் போய் நம் காரை நிறுத்து!'' என்றாள் மணிமொழி.
கார் புறப்பட்டது. காரோட்டி அந்தக் காருக்குப் பின்னால் போய்க் காரை நிறுத்தினான்.

கார் நின்றதும், மணிமொழி கீழே இறங்கி, ''கொஞ்சம் இரு, இதோ வந்துவிடுகிறேன்'' என்று சொல்லிவிட்டுத் தலையில் கிடந்த சேலையைச் சரிப்படுத்திக் கொண்டு, அந்த வீட்டு வாயிற்படி களில் ஏறிக் கதவைத் தட்டி னாள்.

கதவு திறந்தது. திறந்தவள் ஒரு கிழவி. இருட்டில், தனக்கு எதிரே நிற்பது ஒரு பெண் என்பது மட் டுமே அந்தக் கிழவிக்குத் தெரிந் தது.
''ஐயா இருக்கிறார்களா?'' என்று கிழவியைப் பார்த்துக் கேட்டாள் மணிமொழி.

''மேலே மாடியில் இருக்கிறார்!''

''உங்களைப் பார்க்க உங்களுடன் படித்த தோழி ஒருத்தி வந்திருக்கிறாள் என்று போய் ஐயாவிடம் சொல்லுங்கள். வாட கைக் கார் காத்திருக்கிறது. நான் ஐயாவைப் பார்த்துவிட்டு உடனே போக வேண்டும்.''

''என்னடி பெண்ணே, நீ என்னைப் போய் மாடியில் ஏறச் சொல்லுகிறாயே? இந்த வயதிலே என்னாலே மாடி ஏற முடியுமா? மேலே ஐயா மட்டும்தான் இருக் கிறார். நீயே போய்ப் பார்!''

''வழி..?''

''அதோ, அடுத்த கட்டில் இருக்கிறது.''

''சரி'' என்று சொல்லிவிட்டு மணிமொழி உள்ளே போனாள். மணிமொழி உள்ளே போனதும், கிழவி கதவைச் சாத்தித் தாழிட் டாள்.

மணிமொழி மாடிப் படிகளில் ஏறி மேலே வந்து பார்த்தபோது, அவன், இருட்டில் திறந்த வெளி யில் கடலைப் பார்த்து நின்று கொண்டிருந்தான்.

மணிமொழியும் கொஞ்ச நேரத்திற்கு இருளிலேயே நின்று கொண்டு கடலையே பார்த்துக் கொண்டிருக்கும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். நிலவு நேரமாதலால் வெளிச்சம் இருந்தது.

மௌனமாக நின்றுகொண்டு இருந்த மணிமொழி, ஒரு முடி வுக்கு வந்து, சுவரிலிருந்த சுவிட்சைப் போட்டாள். எங்கும் வெளிச்சம்!

விளக்கைப் போட்டதும் பளிச்சென்று அவன் தன் பையி லிருந்த துப்பாக்கியை எடுத்து நீட்டிப் பிடித்துக்கொண்டு திரும்பிப் பார்த்தான்.

மணிமொழி சோகத்தோடு நின்றுகொண்டிருந்தாள், பதுமை மாதிரி.

''மணிமொழி, நீயா?'' என்று கேட்டுக்கொண்டே துப்பாக்கியைப் பைக்குள் போட்டுக் கொண்டு, மணிமொழிக்கு அருகில் வந்தான் அவன்.

''ஆமாம், தங்கதுரை! உங்கள் சகோதரி மணிமொழிதான் வந்திருக்கிறேன்!''

''மணிமொழி, உனக்கு நான் என்ன செய்யவேண்டும்? சொல்லு, எதுவானாலும் செய்கிறேன்'' என்றான் தங்கதுரை.
''அப்படியானால், என் மாமனாரின் பெட்டகத்திலிருந்து நீங்கள் எடுத்துக்கொண்டு வந்தீர்களே தோல் பை, அதைத் தாருங் கள்'' என்றாள் மணிமொழி.

''மணிமொழி!'' என்று கத்தினான் தங்கதுரை.

''நான் பையை எடுத்துக் கொண்டு வந்தது உனக்கு எப்படித் தெரியும்?''

''தங்கதுரை, நீங்கள் நினைப்பது போல அவ்வளவு அசடு அல்ல நான்!''

''உனக்கு எப்படித் தெரியும் நான்தான் பையை எடுத்துக் கொண்டு வந்தேன் என்று? சொல் மணிமொழி?''

''வீட்டில் நானும் மாமனாரும் மட்டுமே இருக்கும் வேளை பார்த்து நீங்கள் வந்து, கரண்ட் டைக் கட் செய்துவிட்டு, மாமா வின் பெட்டகத்தை உடைத்துப் பையை எடுத்துக்கொண்டு என்னை தள்ளிவிட்டு ஓடினீர் கள்! இருட்டாக இருந்ததால் அதுவரை நீங்கள் யார் என்பது எனக்குத் தெரியாது. வெளியே ஓடி வந்து பார்த்தேன். அப்போது தெரு ஓரத்தில் மரத்தடியில் இருளில் நின்றுகொண்டிருந்த காரில் நீங்கள் ஏறினீர்கள். கார் கதவை நீங்கள் திறந்த போது, காருக்குள் விளக்கு எரிந்தது. அந்த வெளிச்சத்தில் உங்களையும் உங்கள் கையிலிருந்த பையையும் நான் நன்றாகப் பார்த்துவிட்டேன்.'' என்றாள் மணிமொழி.

''மணிமொழி, நீ கெட்டிக்காரி!'' என்றான் தங்கதுரை.

''இல்லை தங்கதுரை, நான் கெட்டிக்காரியாக இருந்திருந்தால் என் அப்பாவைத் தவிக்க விட்டுச் சென்னைக்குத் தனியாக வந்திருக்க மாட்டேன்!''

''தவறு மணிமொழி, தவறு! பம்பாயில் உன் அப்பாவோடு இருந்திருந்தால் நீ கைது செய்யப் பட்டிருப்பாய். இங்கு வந்ததால் தான் தப்பித்திருக்கிறாய்'' என்று சொல்லிவிட்டுத் திரும்பி நடந்து சென்று, முன்பு நின்ற இடத்தி லேயே போய் நின்றுகொண்டு மௌனமாக கடலைப் பார்த்துக் கொண்டிருந்தான் தங்கதுரை.

மணிமொழியும் மெல்ல நடந்து அவனுக்கருகில் போய் நின்று, ''கொடுங்கள் பையை! வாடகைக் கார் காத்துக்கொண்டு இருக்கிறது. நான் போக வேண் டும்'' என்றாள்.

''அந்தப் பையைத் தர முடியாது, மணிமொழி!''

''அந்தப் பை இல்லாமல் நான் இந்த வீட்டை விட்டுப் போக மாட்டேன்!'' என்றாள் மணி மொழி.

''அந்தப் பையில் என்ன இருக்கிறது என்பது உனக்குத் தெரியுமா? அத்தனையும் வைர நகைகள்! லட்சத்திற்கு மேல் பெறுமானமுள்ள இந்த நகை களைக் கொண்டு வருவதற்காக நான் எத்தனை நாள் திட்டமிட்டேன், தெரியுமா? ஆமாம், இந்தப் பையை வாங்கிக்கொண்டு செல்வதில் உனக்கு ஏன் இவ்வ ளவு அக்கறை?''

''சில நாட்களாக நான் அவர் களுடைய சோற்றைத்தானே தின்று வருகிறேன்?''

''நன்றியுணர்ச்சியா?''

''பெண்களுக்கு வேண்டியது கற்புக்கு அடுத்தபடியாக அது தானே?''

''ஒப்புக்கொள்கிறேன். நன்றி யோடு நடந்துகொள்ள வேண்டு மென்ற ஒரே காரணத்திற்காகத் தான் இந்தப் பையை நீ கேட் கிறாயா?''

''கொஞ்சம் சுயநலமும் உண்டு!''

''உனக்கா மணிமொழி? உனக்கா சுயநலம்?''

''ஆமாம் தங்கதுரை! எனக்கும் சுயநலம் உண்டு. சுயநலமற்ற வர்கள் இங்கே யார் இருக்கிறார் கள்?''

''சரி, உன் சுயநலமென்ன இதிலே?''

''சொல்லத்தான் வேண்டுமா தங்கதுரை?''

''சொல்லவேண்டிய நிலைக்கு நீ வந்துவிட்டாய் மணிமொழி!''

''உண்மைதான் தங்கதுரை, நீங்கள் சொல்வது உண்மைதான். என் சுயநலத்தை நான் உங்களி டம் சொல்லவேண்டிய நிலைக்கு வந்துவிட்டது உண்மைதான்! கேட்டுக்கொள்ளுங்கள் என் சுயநலத்தை. நகைப் பையைக் காணோம் என்றதும் என்னைத் தான் எல்லாரும் சந்தேகப்படு வார்கள். அப்புறம், அவர்கள் பார்வையில் நான் திருடியாகி விடுவேன்! திருடி என்ற பெய ரோடு என்னால் வாழ முடியாது தங்கதுரை!'' என்று சொல்லி விட்டு மணிமொழி அழுதாள்.

தங்கதுரை நிமிர்ந்து வானத் தைப் பார்த்தான். மழை வரும் போலிருந்தது.

 
மணிமொழி, நீ என்னை மறந்துவிடு! - தமிழ்வாணன்
- தொடரும்
மணிமொழி, நீ என்னை மறந்துவிடு! - தமிழ்வாணன்