சில சமயங்களில் பட்டமும் பதவியும் 'வேண்டும், வேண்டும்' என்று அலைகிறவர்களுக்கு அது கிடைப்பதில்லை. 'வேண்டாம், வேண்டாம்' என்று அலறுகிறவர்களை அவை தேடி வருகின்றன. அப்படி தேடி வரப்பட்டவர்களில் இங்கே படத்தில் காணப்படுகிறவரும் ஒருவர். பத்து வருஷங்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற ஹரிஜன மாநாடு ஒன்றில், "ஹரிஜன் ஒருவரை மந்திரியாக நியமிக்க வேண்டும்'' என்ற தீர்மானம் வந்தபோது, அதை இவர் எதிர்த்தார். "சாதி அடிப்படையில் பதவி கோருவது முறையல்ல'' என்றார். இன்று மந்திரிகள் மீது மேற்பார்வை செய்யும் மாகாண காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருக்கிறார்.
அவர் - ஸ்ரீ கக்கன்.
பிறந்த ஊர் மதுரை ஜில்லா, மேலூர் தாலுகா, தும்பைப்பட்டி. அந்தக் கிராமத்தின் சேரிக்கு இவருடைய தகப்பனார் பூசாரி கக்கன் தலைவர். அந்தத் தலைமைப் பத விக்கு 'சாம்பான்' என்று பெயர். (வேறு பல ஊர்களில் 'நாட்டாண்மைக்காரர்' என்றும் அழைப்பார்கள்.) அவரின் மகன் கக்கன், ஆரம்பப் பாடசாலையில் படித்த காலத்தில், தினசரி காலையிலும் மாலையிலும் ஸ்னானம் செய்து, வீரகாளி கோவிலுக்குச் சென்று, அதை நன்றாகப் பெருக்கி, சுத்தம் செய்வதுண்டு. இதயபூர்வமாக தெய்வ பக்தி உள்ளவர்.
மேல் படிப்புக்காக மானாமதுரை சென்ற சிறுவன் கக்கன், அங்கே அமெரிக்க மிஷன் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தான். மூன்று மாதங்கள் கழிந்தன. மேற்கொண்டு சம்பளம் கட்ட கையில் பணமில்லை. ஆகவே படிப்பு நின்றது.
இரண்டாவது ஃபாரத்திலிருந்து எஸ்.எஸ்.ஸி. வரை பசுமலையில் படித்தார் கக்கன். அமெரிக்க மிஷன் வருஷத்திற்கு ரூ.18 'ஸ்காலர்ஷிப்' தந்தது. இந்த சகாயத்திற்காக கக்கன் தினசரி காலையில் கற்களைப் பொறுக்கி, முட்களை வெட்டி அப் புறப்படுத்த வேண்டும். மிஷனுக்குச் சொந்தமான நிலங்களில் அறுவடை காலத்தில் வேலையும் செய்ய வேண்டும். இவ்வளவு கஷ்டப்பட்டுப் படித்தும் 'செலக்ஷன்' பரீட்சையில் தேறவில்லை. பள்ளிக்கூடம் மாறினார். திருமங்கலம் சென்று, நாடார் ஹைஸ்கூலில் படித்து, 'செலக்ஷன்' ஆனார். ஹாஸ்டலில் சாப்பாடு. ஹெட்மாஸ்டர் கிருஷ்ணய்யரின் உதவியால் பள்ளிக்கூடத்திலேயே கக்கன் வசித்து வந்தார்.
கள்ளுக்கடை மறியல் காலம் அது. மறியல் செய்த தொண்டர்கள் பகலில் கைது செய்யப்பட்டு, இர வில் விடுவிக்கப்படுவார்கள். அவர் கள் படுப்பதற்காக இந்தப் பள்ளிக்கூட வராந்தாவை நாடுவதுண்டு. அங்கே படுத்திருந்த கக்கனுக்கும் தொண்டர்களுக்கும் நீண்ட நேரம் சம்பாஷண நடக்கும். கக்கனின் கஷ்டத்தை உணர்ந்து, அவர்கள் அவரை 'புலி' மீனாட்சி சுந்தரத்தி டம் அழைத்துச் சென்றனர். 'புலி', கக்கனை மதுரை ஸ்ரீ ஏ.வைத்திய நாத அய்யரிடம் அழைத்துச் சென் றார். அய்யர் ஹரிஜன சேவா சங் கம் மூலமாக காந்திஜி ஹரிஜனநிதி யிலிருந்து கக்கனுக்கு 'ஸ்காலர்ஷிப்' கிடைக்க ஏற்பாடு செய்தார்.
கக்கன் மேலூரில் ஹரிஜன ஹாஸ்டல் வார்டனாக இருந்தார். தாலூகா காங்கிரஸ், ஜில்லா காங் கிரஸ், மாகாண காங்கிரஸ் கமிட்டி களில் இருந்தார். 1942-ம் வருஷம் விடுதலைப் போரில் கலந்து, 1944 வரை சிறையில் இருந்திருக்கிறார். 1945-ல் சென்னை அசெம்பிளி மெம்பரானார். பிறகு அரசியல் நிர்ணய சபையில் அங்கத்தினர் ஆனார். இப்போது பார்லிமென்ட் மெம்பர்; மாகாண காங்கிரஸ் தலைவர்.
நம்பிக்கையான பதவிகள் அளிக் கப்பட்டால், பொறுப்பு உணர்ச்சி யுடனும், நாணயத்தோடும் சேவை செய்ய ஹரிஜனப் பிரமுகர்கள் எந்த விதத்திலும் தகுதி குறைந்தவர் கள் அல்ல என்பதற்கு ஸ்ரீ கக்கன் ஓர் உதாரணம்!
|