விகடன் பொக்கிஷம்
தொடர்கள்
Published:Updated:

உங்களுக்கு தெரியுமா?

உங்களுக்கு தெரியுமா?


08-07-09
உங்களுக்குத் தெரியுமா?
உங்களுக்கு தெரியுமா?
உங்களுக்கு தெரியுமா?
 
உங்களுக்கு தெரியுமா?
உங்களுக்கு தெரியுமா?
உங்களுக்கு தெரியுமா?

சேது சமுத்திரத் திட்டத்துக்கு முதலிடம் கொடுத்து, இத் திட்ட காலத்திலேயே நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசாங்கம் இந்திய சர்க்காரிடம் வற்புறுத்தியிருக்கிறது. இத் திட்டம் நிறைவேறினால், கப்பல்கள் இலங்கையைச் சுற்றிக்கொண்டு போக அவ சியமிராது. பாக் ஜலசந்தி வழியாகவே செல்லலாம்.

1955-ம் ஆண்டில், இந்திய அரசாங்கம் இத் திட்டம் பற்றி பரிசீலனை செய்ய, டாக்டர் ஏ.ராமசாமி முதலியார் தலைமையில் ஒரு கமிட்டியை நியமித்தது. இதன் யோசனையின் பேரில் சில சர்வேக்கள் மேற்கொள்ளப் பட்டன. ரூ.22.14 லட்சம் இதற்காக மூன்றாவது திட்டத்தில் ஒதுக்கப்பட்டது.

இத்திட்டம் பற்றி சென்ற 30 ஆண்டுக் காலமாகவே சிந்திக்கப்பட்டு வந்திருக்கிறது என்பது சிலருக்குத் தெரிந் திராது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றினால், தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஆபத்து ஏற்படும் என்று கருதப்பட்டது. இந்தத் திட்டத்தை எதிர்த்தவர்கள், அப்போது கவர்னராக இருந்த லார்ட் வெலிங்டனிடம் முறையிட்டு, இத்திட்டத்தைக் கைவிடச் செய்தனர்.

இத் திட்டத்தினால் தூத்துக்குடி துறைமுகத்தின் முக்கியத்துவம் அதிகரிக்குமே ஒழிய, ஆபத்து எதுவும் ஏற்ப டாது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்த பின், இத் திட்டம் பற்றி மீண்டும் சுறுசுறுப்பு காணப்பட்டது. அப் போது இத்திட்டத்திற்கு 'ராமேஸ்வரம் கால்வாய்த் திட்டம்' என்று பெயர். இத்திட்டம் நிறைவேறினால் கடலோரக் கப்பல் வர்த்தகம் அதிகரிக்கும் என்றும், இப் புதுக் கால் வாய் வழியாகச் செல்லும் கப்பல்கள் அதன் எடை டன் ஒன்றுக்கு ரூ.1 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் முதலியார் கமிட்டி சிபாரிசு செய்துள்ளது. சென்னை அரசாங்கம் இக் கட்டணத்தை ரூ.1-50 ஆக உயர்த்த வேண்டும் என்று கோருகிறது.

இந்தப் பகுதியிலுள்ள திட்டுகள், ராமபிரான் இலங்கை செல்ல அன்று பாலம் கட்டினதன் இடிபாடுகளா, அல்லது முத்து, பவழப் பூச்சிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள பவழச் சுவர்களா என்று தெரியவில்லை. அவற்றை அகற்றி ஆழமாகச் செய்யமுடியும் என்பது நிபுணர்கள் கருத்து.

 
உங்களுக்கு தெரியுமா?
- 'நஜன்'
உங்களுக்கு தெரியுமா?