Published:Updated:

வாங்க, பழகலாம்! - எம்.எஸ்.உதயமூர்த்தி

வாங்க, பழகலாம்! - எம்.எஸ்.உதயமூர்த்தி


08-07-09
வாங்க, பழகலாம்!
வாங்க, பழகலாம்! - எம்.எஸ்.உதயமூர்த்தி
வாங்க, பழகலாம்! - எம்.எஸ்.உதயமூர்த்தி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
எம்.எஸ். உதயமூர்த்தி
வாங்க, பழகலாம்! - எம்.எஸ்.உதயமூர்த்தி

பிறரது நலனில், பிறரது வளர்ச்சியில், பிறரது லட்சியங்களில் நாம் காட்டும் உண்மையான அக்கறைதான் உறவுகளின் ஆணிவேர். வயது வந்தோரிடம் நாம் காட்டும் ஆர்வம், நம்மை ஓர் உதவுபவனாக, பெருந்தன்மையும் நல்லெண்ணமும் கொண்ட மனிதனாக உயர்த்திக் காட்டுகிறது.

அடுத்து, நன்றி பாராட்டுவது! உறவின் மிக முக்கியமான அம்சமாக இதைக் குறிப்பிட வேண்டும். நன்றி என்பது ஆத்மார்த்தமான செயல்; உறவுகளின் அடிப்படை. அதை உணர்ந்துதான் 'நன்றி மறப்பது நன்றன்று' என்று தெளிவாகவும் கண்டிப்பாகவும் வள்ளுவர் அன்றே எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்.

யோகி மிலா ரப்பா என்ற திபெத்திய புத்த ஞானி, குகைகளிலே அமர்ந்து தவம் செய்கிறார். சாப்பிட ஒன்றுமில்லை. அருகிலுள்ள மலைகளில் வளரும் முள்செடிகளின் இலைகளைப் பறித்துத் தண்ணீரில் கொதிக்கவைத்து உண்கிறார். சரியான ஆகார மின்றி உடல் மெலிந்து எலும்புக்கூடாகிறது. அங்கே திருடர்கள் வருகிறார்கள். அவரைக் கண்டு பிசாசு என்று முதலில் பயப்படுகிறார்கள். பிறகு அவர் யோகி என்பதை உணர்ந்து, தங்களிடமிருந்த உணவை அவருக்கு அளிக்கிறார்கள்.

அப்போது யோகி மிலா ரப்பா, "நண்பர்களே! நீங்கள் கொடுத்த உணவின் அளவும் பெறுமானமும் சாதாரணமாயிருக்கலாம். ஆனால், நீங்கள் என் உயிரைக் காப்பாற்றினீர்கள். நீங்கள் செய்த உதவி மகத்தானது. எல்லா ஜென்மங்களிலும் நீங்கள் நலமுடன் இருப்பீர்கள்!'' என்று ஆசி கூறுகிறார். கவனியுங்கள். ஒரு யோகி - முற்றும் துறந்த முனிவர் - நன்றி பாராட்டுகிறார். ஒரு கவளத்து உணவுக்கு அப்படி நன்றி கூறுகிறார்.

இதைத்தான் வள்ளுவர், உதவி என்பது யாருக்குச் செய்கிறோமோ அவர்களின் தன்மை யைப் பொறுத்தது என்று கூறுகிறார். பெரியவர்கள் சிறு உதவியைக்கூடப் பெரிதாகப் போற்றுவார்கள் என்று எழுதுகிறார்.

வாங்க, பழகலாம்! - எம்.எஸ்.உதயமூர்த்தி

வாலஸ் டி. வாட்டில்ஸ் என்ற தத்துவஞானி, "நன்றி தெரிவிக்குபோது நமக்கே ஒரு நிறைவு ஏற்படுகிறது. மனத்தில் ஓர் அசாதாரணமான அன்பு பொங்கிப் பிரவகிக்கிறது. மேலும், பற்பல நன்மைகள் நம் வழியில் வருமாறு ஒரு நீரோட்டத்தைத் துவக்கிவிடுகிறது'' என்று எழுதுகிறார். ஆகவே, மேலும் நீங்கள் நன்மை பெற, நன்றி பாராட்டுங்கள்!

நன்றி பாராட்டும்போது, நம் மனம் ஆத் மார்த்தமான ஒரு பூரணத்துவ நிலையில் இருக்கிறது. அப்போது அங்கே வஞ்சம், பொறாமை, காமம் போன்ற தீய எண்ணங்கள் நிலவுவதில்லை. நமது மனத்தின் ஜன்னல்கள் எல்லாப் பக்கங்களிலும் திறந்து விடப்பட் டிருக்கின்றன. அந்தத் திறப்புகளின் வழியே பெரியவர்களது வாழ்த்துக்களும், ஞானிகளது ஆசியும் வெள்ளமாக நம் மனத்தில் புகுந்து உடலில் இறங்கி, வாழ்வில் பரவ வழி பிறக் கிறது.

உதவி செய்வதன் மூலமும், உதவி பெறும்போது நன்றி பாராட்டுவதன் மூலமும் நாம் நம்மைச் சூழ்ந்துள்ள உலகை இனிமை நிறைந்த உலகமாக மாற்றுகிறோம். நன்மைகளுடன் நேர் தொடர்பு கொள்கிறோம்

 
வாங்க, பழகலாம்! - எம்.எஸ்.உதயமூர்த்தி
-(இன்னும் வரும்)
வாங்க, பழகலாம்! - எம்.எஸ்.உதயமூர்த்தி