Published:Updated:

அகிம்சையின் நாயகன்!

அகிம்சையின் நாயகன்!


08-07-09
அகிம்சையின் நாயகன்!
அகிம்சையின் நாயகன்!
அகிம்சையின் நாயகன்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
அகிம்சையின் நாயகன்!
அகிம்சையின் நாயகன்!
அகிம்சையின் நாயகன்!

'தலாய்லாமா' என்றால் 'அறிவுக் கடல்' என்று அர்த்தம். இந்தியாவில், இமயமலை அடி வாரத்தில் தஞ்சம் புகுந்து வாழும் தலாய்லாமா வெறும் அறிவுக் கடல் மட்டுமல்ல, அமைதிக் கடலும்கூட! அமைதிக்காக நோபல் பரிசு பெற்றிருக்கும் இவர், துறவி யாக வாழும் மன்னர். இந்தத் துறவி மன்னரின் ராஜ்யம் திபெத். இந்த ராஜ்யம் இப்போது இவர் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால், உலகெங்கும் வசிக்கும் 60 லட்சம் திபெத் இன மக்களுக்கும் இவர் தான் இன்று மன்னர், மதகுரு, தலைவர் எல்லாம்.

1935-ம் ஆண்டு திபெத் நாட்டின் மன்னராக இருந்த 13-வது தலாய் லாமா இறந்தபோது, அவர் இடத்துக்கு ஒரு புதிய துறவியை மன்னராகத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு நாட்டின் இரண்டாம் மட்டத்தில் இருந்த மதகுருமார்களின் தோளில் விழுந்தது.

இறந்துபோன 13-வது தலாய் லாமா சடலமாகக் கிடத்தப்பட்டு அவருக்கு இறுதிச் சடங்குகளை நடத்திக்கொண்டிருந்தபோதே, இறந்த தங்கள் மன்னரின் மறுபிறவியைத் தேடுவதில் அவர்கள் தீவிரமாக இறங்கினார்கள். இறந்துபோன தங்கள் மன்னர் மறுபிறவி எடுத்து மீண்டும் தங்களை ஆள வருவார் என்பது அவர்களின் நம்பிக்கை.

அப்போது, உயிரற்றுச் சடலமாக வீழ்ந்து கிடந்த அந்தத் துறவி மன்னர் ஓர் ஆச்சரியத்தை நிகழ்த்தினார். அவரின் உடல் திடீர் என்று தானாக கிழக்குத் திசை நோக்கித் திரும்பியது. சடலத்தைப் பழையபடி திருப்பி வைக்க, மீண்டும் ஒருமுறை இந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. உடனே, வருவதை முன்கூட்டியே எடுத்துச் சொல்லும் தங்களின் புனித ஏரியை நோக்கி ஓடினார்கள் மதகுருமார்கள். அந்த ஏரியில் ஓடுபோட்ட வீடு ஒன்றின் பிம்பம் தோன்றியது. அந்த வீட்டில்தான் இறந்துபோன தங்கள் மன்னர் குழந்தையாகப் பிறந்திருக்கிறார் என்பது மதகுருமார்களுக்குப் புரிந்தது. ஆனால், அந்த வீடு உலகின் எந்தப் பகுதியில், எந்த நாட்டில், எந்தக் கிராமத்தில் இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரிய வில்லை. என்றாலும் இறந்து போன மன்னரின் சடலம் கொடுத்த குறிப்பை வைத்துக்கொண்டு மத குருமார்கள் கிழக்குத் திசை நோக்கிப் பயணமானார்கள்.

சுமார் இரண்டு வருடத் தேடலுக்குப் பின், புனித ஏரியில் தெரிந்த அந்த ஓட்டுவீட்டை மாறுவேடத்தில் சென்ற மதகுருமார்கள் கண்டு பிடித்தார்கள். அது ஒரு ஏழை விவசாயியின் வீடு. மதகுருமார்கள் அந்த வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தபோதே, அவர்கள் கையில் இருந்த ருத்திராட்சமாலையை (அது மறைந்த மன்னருடையது) பார்த்துவிட்டு, "இது என்னுடைய ஜபமாலை'' என்று குரல் கொடுத்தான் இரண்டு வயது நிரம்பிய சிறுவன் ஒருவன். முன்பின் தெரியாத அவர்களை ஒரு தெய்வீகச் சிரிப்போடு பெயர் சொல்லி அழைத்தான் அவன்.

அகிம்சையின் நாயகன்!

"இதோ எங்களின் தலாய்லாமா'' என்று மதகுருமார்கள் ஓடிச் சென்று அவனைத் தூக்கிக்கொண்டு வந்து, நாட்டின் மன்னராகப் பட்டாபிஷேகம் செய்ய, அந்தச் சிறுவன் நாட்டின் மன்னன் ஆனான். அந்த மன்னர்தான் 'அமைதியின் தூதர்' என்ற பட்டத்தோடு இப்போது உலகெங்கும் ஓடி ஓடி, தமது நாட்டு மக்களின் சுதந்திரத்துக்காகப் போராடி வரும் 14-வது தலாய்லாமா.

இவரின் கைகளைவிட்டு திபெத் நழுவியது எப்படி?

தலாய்லாமாவின் 15-வது வயதில், அதாவது 1950-ம் ஆண்டு மா சே துங் தலைமையிலான சீனா பெரும் படையோடு வந்து திபெத் நாட்டை ஆக்கிரமித்தது. துறவி களுக்கும் துப்பாக்கிகளுக்கும் இடையே நடந்த அந்த யுத்தத்தில், சுமார் பத்து லட்சம் திபெத் நாட்டவர் பரிதாபமாக உயிர் இழந்தார்கள். அதையடுத்து லட்சக்கணக்கான திபெத் மக்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா என்று உலகத்தின் ஒவ்வொரு மூலைக்கும் அடைக்கலம் தேடி ஓடினர். கடைசியில் 1959-ம் ஆண்டு வேறு வழி ஏதும் இல்லாமல் தலாய்லாமா இமயமலை அடிவாரத்தில் உள்ள இந்தியப் பகுதிக்குள் தஞ்சம் புகவேண்டிய நிர்பந்தம். அப்போது சுமார் 80,000 பேர் தலாய்லாமாவோடு வர, இந்தியா அத்தனை பேரையும் அரவணைத்து அடைக்கலம் கொடுத்தது.

சுமார் 40 ஆண்டு காலம் தன் நாட்டின் சுதந்திரத்துக்காக அகிம்சை வழியில் நின்று போராடும் தலாய்லாமாவுக்கு 'அமைதியின் காவலர்', 'அகிம்சையின் நாயகன்' போன்ற பட்டங்கள் தொடங்கி 1988-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நோபல் பரிசு வரை உலக நாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பட்டத்தைக் கொடுத்து கௌரவித்தன. ஆனால், தன் நாட்டு மக்களுக்காக தலாய்லாமா கேட்கும் சுதந்திர திபெத் நாட்டை மட்டும் சீனா இன்றுவரை கொடுக்கவில்லை. சீனாவின் இந்த அடக்குமுறை 64 வயதாகும் தலாய்லாமாவைச் சற்றும் தளரச் செய்யவில்லை. தொடர்ந்து போராடி வருகிறார்!

 
அகிம்சையின் நாயகன்!
- வேல்ஸ்
அகிம்சையின் நாயகன்!