08-07-09

மணிமொழி, நீ என்னை மறந்து விடு!

தமிழ்வாணன்

மணிமொழிக்கு உடலெல்லாம் சில்லிட்டுவிட்டது! அவள் தன் உணர்வை இழந்து மயக்கம் கொள்ளும் நிலையில் இருந்தாள். அவள் இதயம், அமைதியான இரவில் கடிகாரம் ஓசையிடுவதைப் போல் ஓசையிட்டது.

போலீஸ் இன்ஸ்பெக்டர், அந்தப் பெட்டியை வாங்கித் பார்த்தார். அதில் -

ஒரு நைலான் சட்டை இருந்தது. ஆமாம், பெட்டியில் ஒரு குழந்தைக் கான சின்ன நைலான் சட்டை இருந்தது. வேறு எதுவுமே இல்லை அந்தப் பெட்டியில்.

திருமுகம் இன்ஸ்பெக்டரைப் பார்த்து மெல்லச் சிரித்தார். மணி மொழியும் தன்னைச் சற்று சமாளித் துக் கொண்டு இன்ஸ்பெக்டரைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

"பொறுத்துக்கொள்ள வேண்டும்! உங்கள் இருவரையும் தவறாகப் புரிந்து கொண்டதற்கு நீங்கள் என் னைப் பொறுத்துக்கொள்ள வேண் டும்'' என்றார் இன்ஸ்பெக்டர்.

"அதனாலென்ன, உங்கள் கடமையை நீங்கள் செய்கிறீர்கள். பொதுமக்களாகிய நாங்கள், உங்கள் விருப்பப்படி நடந்துகொண்டால் தானே எங்களுக்கும் நலன் உண்டாகும்'' என்றார் திருமுகம்.

"ஒரு பெண், இந்தப் பெண்ணைப் போலத் தலையில் தலைப்புச் சேலையைப் போட்டுக்கொண்டு எங்களை எல்லாம் ஏமாற்றி வருகிறாள். ஆகையால் தலையில் தலைப்புச் சேலையைப் போட்டுக்கொண்டு போகிற இவர் களைப் போன்றவர்களுக்கெல்லாம் துன்பம் ஏற்படுகிறது'' என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் போலீஸ் இன்ஸ்பெக்டர்.

"அதனாலென்ன, உங்களுக்கு வெற்றி கிடைக்காமல் போய்விட் டதே என்பதை நினைக்கும்போது தான் எனக்குத் துன்பம் ஏற்படு கிறது!'' என்றார் திருமுகம்.

இதைக் கேட்டதும் கொஞ்சம் குறிப்போடு திருமுகத்தைப் பார்த்த போலீஸ் இன்ஸ்பெக்டர், "எப்படி இருந்தாலும் இறுதியில் வெற்றி பெற்றே தீருவேன்!'' என்றார்.

இதைக் கேட்டு மணிமொழியும் திருமுகமும் சிரித்தார்கள். அந்தச் சிரிப்பில் போலீஸ் இன்ஸ்பெக்டரும் கலந்துகொண்டார்.

சிரிப்பு அடங்கியதும் திருமுகத் தின் குரல் கொஞ்சம் மாறியது. கொஞ்சம் கடுமை கலந்த குரலில், "இன்ஸ்பெக்டர், இந்த முறை என் வீட்டிற்குள் வந்து ஒரு பெண்ணின் முன்னால் என்னை அவமானப்படுத் தியதை நான் பொருட்படுத்த வில்லை. ஆனால், மீண்டும் இது மாதிரி வந்து அவமானப்படுத்தாமல் இருக்க வேண்டும்'' என்றார்.

"இல்லை, இனித் தேவை இல்லாமல் நான் வரமாட்டேன். பொறுத் துக் கொள்ளுங்கள்'' என்று சிரித்துக் கொண்டே தலைத் தொப்பியைச் சரி செய்துகொண்டு வெளியே போய்விட்டார் இன்ஸ்பெக்டர்.

"என் வாழ்க்கையில் இந்த அள வுக்கு என்றுமே நான் பயந்ததில்லை'' என்றாள் மணிமொழி.

"இன்று நடந்ததில் ஏதும் இல்லை. இனிமேலதான் நாம் விழிப்புடன் நடந்து கொள்ளவேண் டும். உட்காருங்கள்'' என்றார் திரு முகம்.

'நாமா? விழிப்புடனா?' - அஞ்சிய அவள், "நான் கிளம்புகிறேன். எல்லாவற்றையும் போட்டது போட்டபடியே வந்திருக்கிறேன். நான் போய் பம்பாய் பயணத்திற் குரிய ஏற்பாடுகளைச் செய்யவேண் டும். உங்களுக்கு மறுபடியும் பெட்டி தர வேண்டிய கடமை எனக்குக் கிடைத்தால் நான் வருகிறேன்'' என்று விடைபெற்றுக் கிளம்பிச் சென்றாள்.

அவள் சென்ற கார் மறைந்ததும் திருமுகம் கதவைச் சாத்திவிட்டு வந்து உட்கார்ந்து, அந்த நைலான் குழந்தைச் சட்டையை எடுத்து, இரண்டு கைகளாலும் விரித்துப் பிடித்து வெளிச்சத்தில் பார்த் தார்.

நைலான் குழந்தைச் சட்டையில் பூ வேலை நிறையச் செய்யப்பட்டி ருந்தது. அந்தச் சட்டையில், பூ வேலைகளுக்கிடையே ஐந்தாறு எழுத்துக்கள் மங்கலாகத் தெரிந்தன. அந்த எழுத்துக்களைக் கூர்ந்து ஒருமுறை படித்த திருமுகம், முக மலர்ச்சியோடு அந்தச் சட்டையை பெட்டிக்குள் வைத்து மூடினார்.

ஐயா, திருட்டு முகமுடையவரே! செல்வங்களுக்குள் பெருஞ்செல்வம் குழந்தைச் செல்வம்தானய்யா! பாவம் என்பதையே செய்யத் தெரியாத பச்சிளம் குழந்தையின் சட்டையில் உங்கள் கள்ளச் செயல் களையெல்லாம் கடிதம்போல் எழுதிக்கொள்கிறீர்கள். இது நீங்கள் குழந்தை உலகத்தையே குழி தோண் டிப் புதைப்பதாக ஆகுமே ஐயா!

9. பாவை பார்க்கவில்லை!

வாடகைக் கார் விரைந்து சென்றுகொண்டிருந்தது. மணி மொழியின் மனம் அச்சத்தாலும் அறியாமையாலும் குழம்பிக் கிடந் தது. வெளியே கிடந்த இருளைப் போக்க எத்தனையோ விளக்குகள். அவள் மனத்திலுள்ள இருளைப் போக்க ஒரு விளக்குக் கூட இல்லையே!

காரோட்டி பின்னால் திரும்பிப் பார்த்து, "எங்கேயம்மா இறங்கப் போகிறீர்கள்?'' என்று கேட்டான். மணிமொழி வெளியே எட்டிப் பார்த்தாள். அப்போதுதான் புறப் பட்ட இடத்திற்கே வந்துவிட்டோம் என்பது அவளுக்குத் தெரிந்தது.

"இங்கேதானப்பா நான் இறங்க வேண்டும்'' என்று சொல்லிக் கொண்டே மணிமொழி கதவைத் திறந்துகொண்டு கீழே இறங்கினாள். மீட்டரைப் பார்த்தாள். கைப் பையைத் திறந்து பணம் எடுத்துக் கொடுத்தாள். தலைச் சேலையைச் சரிப்படுத்திக்கொண்டு சாலை ஓரமாகவே நடந்தாள்.

பங்களா நெருங்கியது. 'மாமியார் வந்திருப்பாரோ, மாமனார் வந்தி ருப்பாரோ, முத்தழகு வந்திருப் பாரோ, பாவை ஏதாவது சொல்லி யிருப்பாளோ?' என்றெல்லாம் எண் ணிக் குழம்பியது மணிமொழியின் மனம்.

பங்களா வந்தது. கறுப்புக் கண் ணாடியைக் கழற்றிக் கைப் பைக் குள் வைத்துக்கொண்டு பங்களாவுக் குள் நுழைந்தாள் மணிமொழி. கார் இருக்கிறதா என்று பார்த்தாள். இல்லை. ஆக, முத்தழகு இன்னும் வரவில்லை. பங்களா அமைதியாக இருந்ததால், மாமியாரும் மாம னாரும்கூட வரவில்லை என்பதும் புரிந்தது.

மணிமொழி சமையற்கட்டுக்குள் போனாள். பாவை, மணிமொழி யைப் பார்த்ததும், "இன்னும் சமை யல் வேலை முடியவில்லை அக்கா. பகலில் ஒருமுறை சமைத்து, இரவி லும் ஒரு முறை சமைக்க வேண்டி யிருக்கிறது. இந்த வீட்டில் இருப்பது மூன்று பேர்தாம். உங்களைச் சேர்த் துக் கொள்ளாததற்காக வருத்தப் படப்போகிறீர்கள். நீங்கள் இப்போ துதானே வந்திருக்கிறீர்கள்! இந்த மூன்று பேரும் மூன்று விதமாகச் சாப்பிடுவார்கள். ஒருவருக்குப் பிடித்தது மற்றவருக்குப் பிடிக்காது! யார் மீதும் நான் குற்றம் சொல்ல வில்லை. எவ்வளவு வேலைகள் இருக்கின்றன என்பதற்காகச் சொன்னேன்'' என்றாள் பாவை பல்லைக் காட்டிக்கொண்டு.

"எவ்வளவு வேலைகள் இருந்தால் என்ன? நான் வந்துவிட்டேன். இருக்கிற வேலைகள் எல்லாவற் றையும் நாம் இருவருமாகப் பார்ப்போம்!'' என்றாள் மணிமொழி.

"நீங்கள் சொல்லிவிட்டீர்கள் சுலபமாக. நீங்கள் இந்த வீட்டில் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டு நான் சும்மா இருக்க லாமா? இவ்வளவு இளம் வயதில் கணவனை இழந்துவிட்ட நீங்கள், வீட்டு வேலைகளை வேறு செய்து துன்பப்பட வேண்டுமா? நீங்கள் குழந்தையை நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள். அது ஒன்று போதும். இளங்கோ வந்தது முதல் பாட்டியிடம் ஒட்டிக் கொண்டு விட மாட்டேன் என்கிறான். அதுவும் ஒரு வழியில் நல்லதுதான். உங்களுக்கும் ஓய்வு கிடைக்கும்'' என்றாள் பாவை.

மணிமொழி மௌனமாகத் திரும்பி நடந்து, தன் அறைக்கு வந்து கதவைத் தாழிட்டுவிட்டுக் கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

அவள் இரு விழிகளிலும் கண்ணீர் கொட்டி வழிந்தது.

'இளங்கோ வந்தது முதல் பாட்டியிடம் ஒட்டிக்கொண்டு விடமாட்டேன் என்கிறான்' என்று பாவை சொல்லியதைக் கேட்டதும், விமானத்தில் குழந்தையின் தாய் சொன்னாளே, அது மணிமொழியின் நினைவிற்கு வந்துவிட்டது.

'நான் சாகப்போகிறேன் மணி மொழி! இந்தக் குழந்தைக்கு இனி நீதான் தாய். இந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டு எங்கு வேண்டு மானாலும் போ! ஆனால், என் மாமியார் வீட்டுக்கு மட்டும் போகாதே! இந்தக் குழந்தை இனி உன் குழந்தை உனக்கு திருமணம் ஆனாலும் ஆகாவிட்டாலும் இது உன் குழந்தையாகவே இருக்கட்டும். இந்த உதவியை நீ எனக்குச் செய்ய வேண்டும் என்று உன்னிடம் நான் கெஞ்சிக் கேட்கவில்லை. இந்த உதவியைச் செய்து தர வேண்டிய நிலைக்கு, இந்தக் குழந்தைக்குத் தாயாக வேண்டிய நிலைக்கு நீ வந்துவிட்டாய்!' - மணிமொழியின் மனம் அழுதுகொண்டே யோசித் தது. இந்த நேரத்தில் யாரோ கத வைத் தட்டியதைப் போலிருந்தது.

மணிமொழி சட்டென்று கண் களைத் துடைத்துவிட்டு, சேலை யைச் சரிசெய்துகொண்டு மெல்லக் கதவைத் திறந்து வெளியே பார்த் தாள். வெளியே எவரும் இல்லை!

மணிமொழி சமையலறைக்கு வந்து பாவையிடம், "பாவை இன்னும் யாரும் வரவில்லையா?'' என்று கேட்டாள்.

"வரவில்லையே அக்கா! அது சரி, உங்கள் உயிர்த்தோழி ஒருத்தி யைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொன்னீர்களே, பார்த்தீர் களா?'' என்று கேட்டாள் பாவை.

"போனேன். ஆனால், அவள் எங்கேயோ வெளியே போய்விட் டாளாம். பார்க்க முடியவில்லை. நேரமாகிவிட்டதே என்று திரும்பி விட்டேன்!'' என்று சொல்லிவிட்டு, மீண்டும் தன் அறைக்கு வந்தாள் மணிமொழி. கதவைச் சாத்தித் தாழிட்டுக் கொண்டாள்.

'இன்னும் நான்கு பெட்டிகளையும் சேர்க்கவேண்டியவர்களிடம் சேர்த் துவிட்டால், ஒரு பெரிய தொல்லை விட்டது!' என்று எண்ணிய மணி மொழி, அந்த நான்கு பெட்டிகளும் இருக்கின்றனவா என்று கட்டிலுக்கு அடியில் பார்த்தாள். எதுவுமே இல்லை! தூக்கிவாரிப் போட்டது

அறை முழுவதும் தேடினாள். பெட்டிகள் எங்கேயும் இல்லை. அவளுடைய இதயத் துடிப்பு மிகுந் தது. உடலெல்லாம் வியர்த்தது.

பரபரப்படைந்தவளாக, சமைய லறைக்கு வந்து, "பாவை, என் அறைக்கு யாராவது வந்தார்களா?'' என்று கேட்டாள் மணிமொழி.

"உங்கள் அறைக்கு யாரும் போக வில்லையே அக்கா! நீங்கள் போன பிறகு நான் ஒருத்திதானே இந்த வீட்டில் இருக்கிறேன்'' என்றவள், சட்டென்று நினைவுக்கு வந்தவளாக,

"ஆமாம், மறந்து போனேனே! தங்கதுரை வந்தார். அவர் வந்துபோய் அரைமணி நேரத்திற்கு மேலாகிறதே! அவர் முத்தழகைத் தேடிக்கொண்டு வந்தார். முத்தழகு பந்தடிக்கப் போய் விட்டார் என்றேன். உடனே அவர் போய்விட்டார்!''

"தங்கதுரை காரிலா வந்தார்?''

"ஆமாம், காரில்தான் வந்தார்.''

"அவரை மறுபடியும் பார்க்கவே இல்லையா?'' என்று கேட்டாள் மணிமொழி.

"இல்லை அக்கா, என் வேலை களைக் கவனிக்க சமையற்கட்டுக்கு வந்துவிட்டேன். இந்த வீட்டில்தான் 24 மணி நேரமும் சமையல் கட்டி லேயே இருக்கவேண்டியிருக்கிறதே!'' என்றாள் பாவை.

திரும்பத் தன் அறைக்கு வந்து, கட்டிலில் உட்கார்ந்த மணிமொழி யின் மனம் எண்ணியது... 'தங்கதுரை வந்தபோது பாவை சமையலறைக் குள் இருந்திருக்கிறாள். உள்ளே வந்த தங்கதுரை, பாவையைத் தவிர வீட்டில் வேறு எவரும் இல்லை என்பதை அறிந்துகொண்டு, இந்த அறைக்குள் புகுந்து, அந்த நான்கு பெட்டிகளையும் எடுத்துச் சென்று விட்டிருக்கிறார். ஆமாம், தங்கதுரை தான் அந்த நான்கு பெட்டிகளையும் எடுத்துச் சென்றிருக்கிறார். அதில் ஐயமே இல்லை.'

மணிமொழி, மக்காக இருந்த நீ மகா புத்திசாலியாகிவிட்டாயே! அழகு மட்டுமே இருந்த உன்னிடம், இப்போது அறிவும் வந்துவிட்டதே! எப்படியோ பெண்ணே... அழ கோடும் அறிவோடும் மட்டுமல்ல, ஆயுளோடும் நீ இருக்கவேண்டும்!

- தொடரும்.