விகடன் பொக்கிஷம்
தொடர்கள்
Published:Updated:

எம் மதமும் எனக்குச் சம்மதமே!

விவேகானந்தர்
பிரீமியம் ஸ்டோரி
News
விவேகானந்தர்

வயது 19. இளமைப் பருவம். அப்போதே விவேகானந்தர் தட்சிணேசுவரர் ஆலயத்துக்கு அடிக்கடி செல்லத் தொடங்கினார், தமது குருநாதரைத் தேடி! ஆறு ஆண்டுகளில் அந்த ஊற்றின் அமுதம் முழுவதையும் உண்டுவிட்டார்.

08-07-09 "எம் மதமும் எனக்குச் சம்மதமே!"

எம் மதமும் எனக்குச் சம்மதமே!

ந்து மதம் பெற்றுள்ள இன்றைய வடிவின் தந்தை என்று சுவாமி விவேகானந்தர் அவர்களை அழைத்தால், அது மிகையாகாது!

சுவாமி விவேகானந்தரின் பரம்பரை மகத்தானது; அறிவிலும் சரி; ஆன்மிகத் துறையிலும் சரி!

பெருந்துறவியான துர்க்கா பிரசாத் தத்தரின் பேரர் எனும் பெருமை பெற்றவர் விவேகானந்தர். தந்தை விசுவநாத தத்தர். புகழ்பெற்ற வழக்கறிஞர். அறிவுநிறைச் செல்வர். சம ரச உள்ளத்தினர்.

விவேகானந்தரின் தாய் வீரமாது. தம் மூன்றாவது புதல்வரான பூபேந் திரர் தேசியப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றமை கேட்டு, "அவனை நான் தேசத்துக்கு அர்ப்பணம் செய்துவிட்டேன். பூபேந்திரனின் வேலை இப்போதே ஆரம்பமாகியுள்ளது'' என்று கூறிய அன்னை அவர்.

எம் மதமும் எனக்குச் சம்மதமே!

இவ்விதமாகப் பழம்பெரும் சமூகமளித்த ஆன்மிகச் செல்வமும், பெற்றோர் காட்டிய துறவு, துணிவு, அன்பு ஆகிய லட்சியமும் கொண்டு 1863-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ந் தேதி, இவ்வுலக யாத்திரையைத் தொடங்கினார் சுவாமி விவேகானந்தர்.

வயது 19. இளமைப் பருவம். அப்போதே விவேகானந்தர் தட்சிணேசுவரர் ஆலயத்துக்கு அடிக்கடி செல்லத் தொடங்கினார், தமது குருநாதரைத் தேடி! ஆறு ஆண்டுகளில் அந்த ஊற்றின் அமுதம் முழுவதையும் உண்டுவிட்டார். "என்னிடமிருந்த எல்லாவற்றையும் உனக்குக் கொடுத்துவிட்டேன்; பக்கிரியானேன்'' என்று ஸ்ரீராமகிருஷ்ணர் தமது வாழ்நாளின் இறுதியில் கூறும் அளவுக்கு அவ்வமுதத்தைப் பருகிவிட்டார்.

பண்டைய ஞானிகள் சென்ற வழிகள் பல. நவீன கண்களுக்கு அவை முரண் உள்ளவை போலக் காட்சி தரலாம். அவர்தம் உபதேசங்கள், நடவடிக்கைகள் ஆகியவற்றின் உண்மைக் கருத்தை அறியும் திறன் சாதாரண உள்ளங்களுக்கு இன்மையால், மதத்தின் பெயரால், பிரிவுகளும் துவேஷங்களும் வளர்ந்துவிட்டன.

"உலக மதங்கள் என்பனவெல் லாம் ஆடவரும் பெண்டிரும் தம் தம் வெவ்வேறு இயல்புகளுக்கும், சூழ்நிலைகளுக்கும் ஏற்ப வருவதும், போவதும், யாத்திரை செய்வதுமே யாகும். முரணாகக் காட்சியளிப்பன எல்லாம் வெவ்வேறு சந்தர்ப்பச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அதே உண்மை தன்னைச் சரி செய்து கொள்வதேயாகும்'' என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

"சென்ற கால மதங்களை எல் லாம் நான் ஏற்கிறேன்; வணங்கு கிறேன். மசூதிக்குச் செல்வேன்; மாதா கோவிலுக்குச் செல்வேன். சிலுவை முன் மண்டியிடுவேன். புத்தவிகாரம் செல்வேன். புத்தரைச் சரண் புகுவேன்; வனம் புகுவேன்; ஒளி காணத் தவம் செய்யும் ஹிந்து வுடன் அமர்ந்து தவம் செய் வேன்!

ஆன்மா ஒவ்வொன்றும் தெய் விகமானதே! உள்ளும் புறமும் இயற்கையைக் கட்டுப்படுத்தி இத் தெய்விக சக்தி பரிணமிக்கச் செய்வதே லட்சியம். பணி செய்வதன் மூலமோ, வழிபாட்டின் மூலமோ, தத்துவ விசாரத்தின் மூலமோ, எவ்வழியிலோ, அன்றி எல்லா வழியிலுமோ இதனைச் செய்து விடுதலை பெறுக!'' என்றார் அவர்.

இதுவே எல்லா மதங்களின் சாரம் என்பது அவர் கருத்து.

"நம்பிக்கை; நம்பிக்கை; தன்னம்பிக்கை. கடவுள் நம்பிக்கை. இதுவே பெருமை பெறும் ரகசியம்'' என்பது சுவாமியின் உபதேசம்!

-பிரம்மசாரி மாதவன்