Published:Updated:

நான்தான் எம்.ஜி.ஆர்.!

நான்தான் எம்.ஜி.ஆர்.!


08-07-09
"நான்தான் எம்.ஜி.ஆர்!"
நான்தான் எம்.ஜி.ஆர்.!
நான்தான் எம்.ஜி.ஆர்.!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
-ஜெயலலிதா
நான்தான் எம்.ஜி.ஆர்.!
நான்தான் எம்.ஜி.ஆர்.!
நான்தான் எம்.ஜி.ஆர்.!

"என்னுடைய 12 வயது சகோதரி உங்கள் மீது அளவு கடந்த அபிமானம் வைத்திருக்கிறாள். எப்போதும் உங்களைப் பற்றிய நினைவு, உங்களைப் பற்றிய பேச்சு தான். ஆனால், இந்த இளம் வயதிலேயே தீராத நோய் ஒன்று அவளைப் பற்றியிருக்கிறது. மருத்துவத்தால் குணமாகவில்லை. உங்களை எங்கள் சகோதரியாக எண்ணி ஒரு வேண்டுகோள் விடுக் கிறேன். எங்களுக்குப் பண உதவி ஒன்றும் வேண்டாம். உங்கள் அன்பு ரசிகையாகிய என் தங்கைக்குத் தங்களின் புகைப்படமொன்றை அனுப்பி வைக்கவும். அது அவளுக்கு மன ஆறுதலை அளிக்கும்.''

திருச்சிக்கு அருகே உள்ள கிராமத்திலிருந்து ஒரு சகோதரி எழுதியுள்ள கடிதம் இது. என் புகைப்படம் ஒன்று அவர்கள் வீடு நோக்கி சென்றது. சுமார் மூன்று மாதங்கள் கழித்து, திருச்சிக்கு ஒரு நடன நிகழ்ச்சிக்காகச் சென்றபோது அவர்கள் முகவரியையும் எடுத்துச் சென் றேன். என் மானேஜரை அனுப்பி, அந்தக் கிராமத்தில் அப்பெண்ணைப் பற்றி விசாரித்து வருமாறு சொன் னேன்.

போனவர் வந்தார். அப் பெண்ணைப் பற்றி ஆவலோடு விசாரித்த எனக்கு, அதிர்ச்சி காத்திருந்தது.அந்தப் பெண் இறந்துவிட்டாளாம்! அந்தப் பெண் இறக்கும்போது தனக்கு விருப்பமான என்னுடைய படத்தைத் தன் மார்பிலேயே வைத் திருந்ததாக வீட்டார் கூறினார்களாம்.

அந்தச் சகோதரியை நான் எவ்வாறு மறப்பேன்?

ஒரு ரசிகர் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். என் மீது உயிரையே வைத்திருப்பதாகவும், ஒரு தேதி குறிப்பிட்டு அதற்குள் நான் அவரைத் திருமணம் செய்து கொள்ளாவிட்டால், தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது மாதிரி பலர் எழுது வது வழக்கமாகையால், அதற்கு நான் எந்தவிதப் பதிலும் எழுத வில்லை.

அந்த ரசிகர் குறித்த தேதி கடந்துவிட்டது. மறுபடியும் அவரே ஒரு கடிதம் எழுதினார். இன்னொரு காலக்கெடு வைத்து, அந்தத் தேதிக்குள் தன்னை மணந்துகொள்ளாவிட்டால் மறுநாளே மரணத்தைக் கட்டியனைத்துக்கொள்வேன் என்று எழுதியிருந்தார். அதற்கும் நான் பதில் எழுதவில்லை. வழக்கம் போல் தேதி குறிப்பிட்டு தற்கொலை பயமுறுத்தலுடன் மூன்றாவது கடிதமும் வந்தது.

அந்த ரசிகருக்கு நகைச்சுவையாக, ஆனால், சுருக்கமாக ஒரு பதில் அனுப்பினேன். அது இது...

"எனக்குக் கணவராக வரவேண் டியவர் கொடுத்த வாக்கைக் காப் பாற்றக்கூடியவராக இருக்க வேண் டும். மற்ற கொள்கைகளைவிட இதுதான் முக்கியம். சொன்ன வாக்கை மூன்று தடவை மீறிய உங்களை எப்படி நான் மணக்க முடியும்? மன்னிக்கவும்.''

அதற்குப் பின் தொந்தரவே இல்லை.

நான்தான் எம்.ஜி.ஆர்.!

"மிஸ். ஜெயலலிதா, நான் உங்களிடம் டிரைவிங் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். நம் வண்டியை நாமே ஓட்ட வேண்டும் என்பது எனது நீங்கா ஆசை. வயது:26 வருடம் 5 மாதம். உயரம்: 5 அடி 5 அங்குலம். எடை: 52 கிலோ. நிறம்: மாநிறம். மற்றபடி குணநலன்களைப் பற்றி நீங்களே நேரில் தெரிந்து கொள்வீர்கள்.

ஆகவே, தாங்கள் இம் மடலை முற்றிலும் படித்து உடனடியாக பதிலும், ரூபாய் 25-ம் அனுப்பி வைக்க வேண்டும். மற்றவை நேரில்!''

- இப்படி ஒரு கடிதம் எனக்கு வந்தது. நீங்கள் என் நிலையில் இருந்தால், இதற்கு எப்படிப் பதில் எழுதுவீர்கள் என்று விகடனுக்கு எழுதி அனுப்புங்கள். நல்ல நகைச்சுவைக் கடிதத்தை நானே தேர்ந்தெடுக்கிறேன்.

நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நேரம், திரு. எம்.ஜி.ஆர். நடித்த ராஜராஜன், மகாதேவி ஆகிய படங்களை நானும் என் சகோதர னுமாகப் பார்த்துவிடுவோம். வீட்டில் ஆளுக்கொரு கம்பை எடுத்துக் கொண்டு சண்டை போடுவோம். "நான்தான் எம்.ஜி.ஆர்., நீ வீரப்பா'' என்பான். "இல்லை, நான்தான் எம்.ஜி.ஆர். நீதான் வீரப்பா'' என்பேன் நான். எங்களுக்குள் நிஜ சண்டையே வந்துவிடும். பலத்த கூச்சல் போட்டு சண்டையிடுவதைக் கண்டு அம்மா ஓடி வந்து எங்களை விலக்குவார். சண்டையின் காரணத்தை அம்மா விடம் சொல்வோம். உடனே அம்மா ஒரு காசை எடுத்துச் சுண்டி மேலே போட்டு, பூவா தலையா என்று எங்களைக் கேட்டு, எங்களில் யார் எம்.ஜி.ஆர்., யார் வீரப்பா என்று தீர்மானிப்பார். பிறகு, எங்களது கம்புச் சண்டை தொடரும்.

நான்தான் எம்.ஜி.ஆர்.!

என்னிடம் ஸ்டுடியோக்களிலும், மற்ற வெளி இடங்களிலும் பலர் ஆட்டோகிராப் புத்தகத்தை நீட்டிக் கையெழுத்து வாங்கும்போதெல்லாம் நான் ஆட்டோகிராப் வாங்கிய ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

1960-61-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். ஒரு நிதிக்காக வட இந்திய நட்சத்திரங்கள் தென்னிந்திய நட்சத்திரங்களுடன் சேர்ந்து நேரு ஸ்டே டியத்தில் கிரிக்கெட் பந்தயம் நடத்தி னார்கள். அப்போது திலீப்குமார், ராஜ்கபூர், ஷம்மிகபூர், மாலா சின்ஹா போன்ற பிரபல நட்சத்திரங் கள் வந்திருந்தார்கள். கையெழுத்துக் காக ஒரு ரூபாய் என்றும் அறிவித்திருந்தார்கள். அப்போது நானும் என் தோழியும் சேர்ந்து ரூபாய் கொடுத்து ஓடி ஓடி நட்சத்திரங்களிடம் கையெழுத்து வாங்கியதை எப்படி மறக்க முடியும்?

"என் நிலையில் நீங்கள் இருந்தால், என்ன எழுதியிருப்பீர்கள்?'' என நான் கேட்டதற்கு வந்து குவிந்த ரசிக, ரசிகைகள் கடிதம் ஏராளம்.

சிலோன், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலிருந்தும் வந்திருந்த பல கடிதங்கள் என் மனத்திற்குப் பிடித்திருந்தன. ஆனால், அவற்றில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்திருக்கிறேன். இக் கடிதத்தை எழுதியவர் சிதம்பரத்தைச் சேர்ந்த திரு. ந.திரு காமு. இவருக்கு என் கையெழுத்துடன் புகைப்படம் ஒன்றையும் அனுப்பியிருக்கிறேன்.

நான் தேர்ந்தெடுத்த கடிதம்...

நான்தான் எம்.ஜி.ஆர்.!

"மிஸ்டர் ---------------------,

உங்களுடைய கடிதம் கிடைக்கப் பெற்றேன். நம் காரை நாமே ஓட்ட வேண்டும் என்பதில், உங்களின் பொறுப்பு உணர்ச்சி தெரிகிறது.

26 வருடம் 5 மாதத்தில், இளமை தெரிகிறது. 5 அடி 5 அங்குலத்தில் அழகு தெரிகிறது. 25 ரூபாயை எதிர்பார்ப்பதில், உங்கள் நிலைமை புரிகிறது.

நம் காரியத்தை நாமே செய்ய வேண்டும் என்பதன் தத்துவம் - வீட்டில் இருந்தால், குடும்பத்துக்கு நல்லது; ஊரில் இருந்தால், நாட்டுக்கு நல்லது. பொறுப்புகள் வீட்டுக்கும் நாட்டுக்கும் தேவை. நட்சத்திரக் காருக்கல்ல!

- இப்படிக்கு ஜெயலலிதா.''

 
நான்தான் எம்.ஜி.ஆர்.!
-
நான்தான் எம்.ஜி.ஆர்.!