கல்லூரியில் படிக்கும்போதும், அதற்குப் பிறகும் ரங்காராவ் நாடகங்களில் நடிப்பதை விடவில்லை. 'யங்மென் ஹாப்பி கிளப்' என்ற சங்கத்தார் நடத்திய நாடகங்களில் எல்லாம் அவர் நடித்திருக்கிறார். இப்போது பிரபலமாயிருக்கும் பல ஆந்திர நடிக, நடிகைகள் அங்கு தயாரானவர்கள்தான்.
இரண்டாவது உலக யுத்தத்தின் போது ரங்காராவ் தீயணைக்கும் படையில் சிறிது காலம் பணியாற்றிவிட்டு, 1945-ல் அவருடைய மாமன் ராமானந்தம் தயாரித்த 'வருதினி' என்ற புராணப் படத்தில் நடித்தார். அதுவே அவருடைய முதல் படம். ஆனால், அந்தப் படம் ஒரு பெரும் தோல்வி. மனமுடைந்த ரங்காராவ் ஜெம்ஷட்பூர் லோகோ ஒர்க்ஸில் பணி புரியப் போய்விட் டார்.
அவர் மீண்டும் சென்னைக்கு வந்தது 1947-ல். அப்போது அவருக்கு வயது 30. நான்கு ஐந்து நண்பர்களுடன் ஓர் ஓட்டலில் தங்கியிருந்த அவர், வேலை தேடிப் பட்டணம் பூராவும் சைக்கிளில் அலைந்துகொண்டிருந்தார். 'சினிமாவில் ஒரு சான்ஸ் கிடைக்குமா?' என்று தவியாய்த் தவித்தார். அப்போது அவருக்கு அபயம் அளித்தவர் டைரக்டர் பிரசாத்.
"அவர் என்னை திரு.சக்ரபாணியிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்துவிட்டு, என் நாடகங்களைத் தாம் பார்த்திருப்பதாகவும், என் நடிப்பில் அபார நம் பிக்கை இருப்பதாகவும் துணிந்து ஒரு பொய்யையும் சொன்னார். ஆம், பொய்தான்! பிரசாத் என் நாடகங்களைப் பார்த்ததே இல்லை. என் நடிப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார். அவ்வளவுதான்! 'என்னடா, இப்படிப் பச்சைப் பொய்யைச் சொல்லுகிறாரே' என்று எனக்குத் தர்ம சங்கடமாகி விட்டது. ஏதோ சொல்ல நினைத்தவன் அடக்கிக் கொண்டுவிட்டேன். அன்று பிரசாத் அந்தப் பொய்யைச் சொல்லியிருக்காவிட்டால், நான் இன்று இந்த நிலையில் இருக்கமாட்டேன்.
பிரசாத் சிபாரிசு செய்தும்கூட சக்ரபாணிக்கு நம்பிக்கை ஏற்படவில்லை, 'ஆசாமியைப் பார்த்தால் சூட்டு அணிந்து ஸ்டைலாக இருக் கிறான். இவன் 'ரௌடி' வேஷத் திற்குப் பொருந்துவானா!' என்ற சந்தேகக் குறி அவர் முகத்தில் தோன்றிற்று. 'நாளைக்கு வாருங்கள், உங்களுக்கும் 'குடும்ப ராவ்'வுக்கும் மேக்கப் போட்டுப் பார்க்கிறேன். வேஷம் யாருக்கு நன்றாகப் பொருந் துகிறதோ அவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன்' என்றார். நான் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. பிறகு 'சௌகார்' படத்தில் 'ரௌடி' பாத்திரத்தில் நடிக்க என்னையே ஒப்பந்தம் செய்தார்கள். படப்பிடிப் பன்று நான் 'மேக்கப்' போட்டுக் கொண்டு வந்தேன். என் மீது நம்பிக்கையில்லாத சக்ரபாணி வேறொரு ஆசாமியைத் தயாராக வைத்துக் கொண்டிருந்தார். அன்று நான் என் திறமையையெல்லாம் காட்டி நடித்தேன். பிறகு 'ரஷ்' போட்டுப் பார்த்துவிட்டுப் பிரசாத்தும் சக்ரபாணியும் என்னை மிகவும் பாராட்டினார்கள். அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது.''
இதுவரை சுமார் 150 படங்களில் நடித்துள்ள ரங்காராவ் நடிப்புத்துறையில் தமது சாதனை மிகவும் அற்பமானது என்று கருதுகிறார்.
|