08-07-09

சினிமா விமர்சனம்

கல்யாண பரிசு

சேகர் - சந்தர்

சேகர்: சந்தர், உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். நீ யாரையாவது காதலிக்கிறாயா? அப்படியானால் அதை உடனே தெரியப்படுத்தி விடு!

சந்தர்: என்னப்பா, என் சொந்த விஷயங்களைக்கூடவா ரகசியமாக வைத்துக்கொள்ளக் கூடாது?

சேகர்: காதல் விஷயத்தை மறைச்சு வைக்கக்கூடாதப்பா! உடனே வெளிப்படுத்தாவிட்டால் அப்புறம் காதலையே தியாகம் செய்ய வேண்டி வரும்.

சந்தர்: ஏதோ படம் பார்த்துவிட்டு வந்திருக்கிறாய் என்று தெரிகிறது. ஹிந்தியா? ஆங்கிலமா?

சேகர்: அசல் தமிழ்ப் படமே தான். 'கல்யாண பரிசு' பார்த்தேன். உடனே உன்னிடம் ஓடி வருகிறேன், தமிழ்ப் படங்களிலேயே முதன் முதலாக ஒரு நல்ல கதையைப் பார்த்துவிட்ட மகிழ்ச்சியைத் தெரிவிக்க!

சந்தர்: நல்ல கதையா? சொல்லப்பா சுருக்கமாக!

சேகர்: கடிதங்கள்தான் இந்தக் கதைக்கு ஆதாரம். கதையிலே சுமார் எட்டு கடுதாசிகள் வருது. ஒரு கடுதாசியிலேதான் தகராறே ஆரம்பமாகுது. ஒரு கடிதத்தைக் கொடுத்துத்தான் கதையும் முடியுது. இந்தக் காதல் தியாகக் கதையை நன்றாக எடுத்திருக்கிறார் டைரக்டர் ஸ்ரீதர். பல காட்சிகள் உள்ளத்தை உருக்குகின்றன. சில சமயம் கண் ணீரே பெருகுகிறது.

சந்தர்: இடையிலே காமிக் வருகிறதா, இல்லையா?

சேகர்: டூப்னு ஒரு கேரக்டர். மன்னார் கம்பெனி மானேஜர்னு டூப் விட்டு, பணக்காரப் பெண் ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அவதிப்படறார், டூப் தங்கவேலு. அந்தக் குட்டு வெளியானதும், பெரிய எழுத்தாளர் ஒருவருடைய பெயரை வைத்துக்கொண்டு ஏமாற் றுகிறார். அதுவும் வெளிப்பட்டவுடன், சூப்பர் டீ கம்பெனியிலே சேர்ந்து, மோட்டார் வானிலே குடும்பத்தோட சுத்தறாரு.

சந்தர்: கதைக்கு அவர் என்ன சம்பந்தம்?

சேகர்: அவர்தான் ஹீரோவுக்கு வேலை கிடைக்க உதவுகிறார்; தங்க இடம் தருகிறார்; கடைசியிலே வசந்தி கல்யாணத்தைப் பற்றித் தகவலும் தெரிவிக்கிறார். போதாதா?

சந்தர்: சரி, வில்லன் யாரு?

சேகர்: இது வழக்கமான திரைக் கதை இல்லையே? ஆகவே வில்லனே கிடையாது. கதையிலே வர அவ்வ ளவு பேரும் நல்ல உள்ளம் படைத்தவங்க.

சந்தர்: நம்பியார் வரார் போலிருக்கே?

சேகர்: அவரும் நல்லவர்தான். கௌரவ நடிகராச்சே! கௌரவமான பாத்திரமாகவே நடிக்கிறார்.

சந்தர்: நாகேசுவர ராவ்?

சேகர்: அவரும் தங்கமானவர். தன் காரியாலயத்தில் குமாஸ்தாவாக வந்த வசந்தியைக் காதலிக்கிறார். ஆனால், அவள் மனநிலை தெரிந்ததும் தன் பதவியையே ராஜினாமா செய்துவிட்டுப் போகிறார். கடைசியில் அவரைத்தான் வசந்தி மணந்து கொள்கிறாள்.

சந்தர்: ஜெமினி கணேசன் நடிப்பு எப்படி?

சேகர்: ரொம்ப உணர்ச்சியோட நடித்திருக்கிறார். வசந்தியாக வந்து காதல், தியாகம், கடமை என்ற மூன்று உணர்ச்சிகளையும் அற்புதமாக வெளிக்காட்டியிருக்கிறார் சரோஜாதேவி. கீதாவாக வரும் விஜயகுமாரியும் அற்புதம்! மொத்தத்தில், கதைக்கு ஒரு பரிசு, நடிப் புக்கு ஒரு பரிசு, வசனத்துக்கு ஒரு பரிசு. இதுதான் கல்யாண பரிசு!