Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்


08-07-09
தலையங்கம்
ரகசிய வேர்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தலையங்கம்
தலையங்கம்
 
தலையங்கம்
தலையங்கம்

ரகசிய வேர்!

மிழக மக்களுக்கு இன்று அரசியல் தலைவர்களின் பெயர்களை விட, பெரிய ரௌடிகள், தாதாக்களின் பெயர்கள் மனப்பாடம் ஆகிவிட்டது! அந்த அளவுக்கு அவர்கள் 'புகழ்' பெற்றுவிட்டார்கள். வெல்டிங் குமார், சுர்லா, ஆசைத்தம்பி என்பவர்கள் யார் என்று கேட்டால் இங்கே ஒரு எல்.கே.ஜி. சிறுவன்கூட பதில் சொல்லும் நிலை!

புரையோடிப்போன சமூகச் சீரழிவின் காரணமாக தலைதூக்கியவர்கள்தான் இந்த ரௌடிகளும், தாதாக்களும் என் பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவர் களுக்குத் தனி மரியாதை கொடுத்து காட்டுத்தனமான வளர்ச்சியை ஏற்படுத்தியதில் அரசியல்வாதிகளுக்குப் பெரும்பங்கு உண்டு. அரசியல்வாதிகள் சட்டத்துக்குப் புறம்பான தங்களது காரியங்களுக்குத் துணை நிற்கவும், நிழலான காரியங் களைச் செய்வதற்கும், இருட்டு நேரத்தில் கை கொடுக்கவும் 'செல்லம்' கொடுத்து வளர்த்த கும்பல் இது! ஆகவேதான் போலீசும் கைகட்டி இவர்களுக்குச் சேவகம் பார்க்க நேர்ந்தது.

ரௌடிகளின் ரகசிய வேர் சமுதாயத்தில் பாய்ந்து பரவிக் கிடக்கிறது. மேலே தெரிகிற முரட்டுப் பகுதியை மட்டும் வெட்டினால் போதாது, பூண்டோடு அழிக்கவேண்டும்!

ரௌடிகளையும் தாதாக்களையும் ஒழித்துக் கட்டவும், அவர்கள் கோட்டைகளைத் தகர்க்கவும் தமிழக அரசு இனி உறுதியாகச் செயல்படும் என்று முதல்வர் சட்டசபையில் தெரிவித்திருக்கிறார். போலீஸ் அதிகாரிகளிடமிருந்து வரவேண்டிய இந்த அறிவிப்பு, முதல்வரே சொல்ல வேண்டிய அளவுக்கு ரௌடிகள் ராஜ்யம் 'போட்டி அரசாக' சவால் விடுகிறது!

விஷம் பாய்ச்சும் அந்தப் 'போட்டி அரசை' முதல்வர் வீழ்த்தியாகவேண்டும்!

 
தலையங்கம்
-
தலையங்கம்