'ஜீவா' என்று தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர் ப.ஜீவானந்தம்.
பொதுவுடைமைக் கட்சியின் கொள்கைகளை விளக்குவதற்கு ஒரு செய்தித்தாள் அவசியம் என்று ஜீவா எண்ணினார். எனவே கட்சிக்காகவும், செய் தித்தாள் தொடங்குவதற்காக வும் பொதுமக்களிடம் நிதி வசூல் செய்தார். ஒரு நாள், காலை முதல் தொடர்ச்சியாக நிதிவசூல் செய்ததன் பின்னர், சென்னைக்கு வருவதற்காகக் கோவை ரயில் நிலையத்தில் தோழர் ஒருவருடன் காத்திருந் தார். கையில் பெரிய பண மூட்டை. அது அன்றைய பொழுது திரட்டப்பட்ட நிதி. காலையிலிருந்து ஜீவாவும் அவ ருடைய தோழரும் கொலைப் பட்டினி. அலைச்சலால் ஏற் பட்ட அசதி வேறு! ஜீவாவிடம் அந்தத் தோழர், ''பசி வயிற்றைக் கிள்ளுது. சாப்பிடலாமா?'' என்றார். ''சாப்பிடலாமே! ஆனால், காசு ஏது?''என்றார் ஜீவா. ''அதுதான் உங்கள் கையில் பெரிய பணமூட்டை உள்ளதே'' என்றார் அந்தத் தோழர்.
ஜீவாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. ''என்ன பேசறீங்க.... அது மக்கள் கொடுத்த பொதுப் பணம். அதிலிருந்து ஒரு காசு கூட எடுக்கக்கூடாது'' என்று உறுதியாக மறுத்துவிட்டார் ஜீவா. பின்பு, அங்கு வந்த தோழர் ஒருவர் இருவருக்கும் சிற்றுண்டி வாங்கிக் கொடுத் தார்.
பொதுவாழ்க்கையில் ஈடு பட்டிருந்த ஜீவா, அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்று மக்களைத் தன் உணர்ச்சிமிக்க சொற்களால் தட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டார். ஜீவா ரயிலிலிருந்து இறங்கும்போது அவரைக் கைது செய்யக் காவ லர்கள் காத்திருப்பர். இத்தகைய வாழ்க்கைக்குத் தன்னைப் பக்குவப்படுத்திக்கொண்ட ஜீவாவின் துணைவியார் பத்மாவதி, ''ஜீவா ஏறினா ரெயில்; இறங்கினா ஜெயில்!'' என்று வேடிக்கையாகக் குறிப்பிடுவார்.
அரசியலில் எதிரெதிர் துரு வங்களாக இருந்தபோதிலும் காமராஜரும் ஜீவாவும் பரஸ்பர அன்பும் பெருமதிப்பும் கொண் டிருந்தனர். காமராஜர் சென்னை மாகாண முதலமைச் சராக இருந்த காலத்தில், தாம் பரம் வழியாகச் செல்லும்போது காரை ஜீவாவின் குடிசை வீட் டுக்கு விடச் சொல்வார். அவ்வாறு ஒருமுறை காமராஜர் ஜீவாவின் வீட்டுக்குள் நுழைந்த போது, ஜீவா நான்கு முழ வேட்டியின் ஒரு முனையை மரத்தில் கட்டிவிட்டு, மற்றொரு முனையைக் கையில் பிடித்துக் கொண்டு வெயிலில் காய வைத்துக்கொண்டிருந்தார். உடனே, வசதியில்லாமல் வாழ்ந்த ஜீவாவுக்கு நான்கு ஜோடி வேட்டி, முழங்கைச் சட்டைகளை நட்புரிமையுடன் வாங்கித் தந்தார் காமராஜர் .
பாரதிதாசன், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன், ம.பொ.சி. என கட்சிப் பாகுபாடு இல்லாமல் அனைவரையும் அன்புடனும் நட்புடனும் நேசித்தவர் ஜீவா.
உலகத் தமிழ் மாநாட்டு மலரில் எழுதும்போது ''பொது வுடைமைப் பெருந்தகை தோழர் ஜீவாவை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மூலமாக ஆரம்ப காலத்தில் அறிமுகம் செய்துகொள்ளும் பேறு பெற் றேன்'' என்று பெருமையாகக் குறிப்பிட்டார் எம்.ஜி.ஆர்.
எளிமையான தலைவரா கவே கடைசி வரை வாழ்ந்த ஜீவாவின் பிறந்த நாள் இம் மாதம் 21-ம் தேதி வருகிறது.
|