சிவகாமியைத் தனக்குக் கல்யாணம் செய்து வைக்க வேண்டுமென்று, தங்கதுரை முத்தழகிடம் கேட்டுக்கொண்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு நடுப்பகல் நேரம்.
முத்தழகின் அப்பா, அவர் அறையில் சாப்பிட்டுவிட்டு நாற்காலியில் சாய்ந்துகொண்டு இருந்தார். அவருக்குப் பக்கத்தில் தரையில் உட்கார்ந்து, பேரன் இளங்கோவுக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டு இருந்தாள் முத்தழகின் அம்மா.
முத்தழகு, கூடத்தில் ஊஞ்சலில் உட்கார்ந்து ஏதோ ஒரு பத்திரிகையைப் படித்துக் கொண்டு இருந்தான். மணி மொழி சாப்பிட்டுவிட்டுச் சமையலறையிலிருந்து வந்து கொண்டிருந்தாள். அப்போது தபால்காரன் உள்ளே நுழைவது அவளுக்குத் தெரிந்தது.
மணிமொழி நேராக வாயி லுக்குச் சென்றாள். தபால்காரன், மணிமொழியின் கையில் இரண்டு கவர்களைக் கொடுத்து விட்டுப் போனான். ஒரு கவரில் இருந்த முகவரியைப் படித்தாள் மணிமொழி. மெ.தில்லைநாய கம் அவர்கள், ஏரிக்கரைத் தெரு, நுங்கம்பாக்கம், சென்னை.
'மாமனாருக்கு வந்திருக்கும் கடிதம்! சரி, இன்னொரு கடிதம் யாருக்கு?'
அ.மணிமொழி, மே/பா தில்லைநாயகம் அவர்கள், ஏரிக்கரைத் தெரு, நுங்கம் பாக்கம், சென்னை என்றிருந் தது கவரிலிருந்த முகவரி.
தனக்குத்தான் கடிதம் என் பதை அறிந்ததும் மணிமொழி திடுக்கிட்டாள்.
'அப்பா எழுதியிருப்பாரா? இல்லை. அப்பாவுக்கு நான் இங்கே தங்கியிருப்பது தெரியாதே! இந்த முகவரியே அப்பாவுக்குத் தெரியாதே! தெரிந்தவர்கள் யாராவது எழுதியிருப்பார் களா? இருக்கமுடியாது. தெரிந்த வர்கள் எழுதினால் மணிமொழி என்றுதான் எழுதுவார்கள். மிகத் தெரிந்தவர்களாக இருந் தால் மருதநம்பி என்ற அப்பா பெயரில் முதல் எழுத்தைச் சேர்த்து, ம.மணிமொழி என்றல் லவா எழுதுவார்கள்! இங்கே அ.மணிமொழி என்றல்லவா இருக்கிறது! இந்த 'அ' என்பது யாரைக் குறிக்கிறது?' - சிந்தித்த மணிமொழிக்குத் திடீரென்று விடை கிடைத்தது.
அ என்பது அரசு என்ற பெயரின் முதல் எழுத்து. மணி மொழி அரசுவின் மனைவி. ஆக, இறந்துபோன அந்த மணிமொழிக்கு வந்திருக்கும் கடிதம் இது.
விலாசம் இருக்கிறதா என்று அந்த கவரைத் திருப்பிப் பார்த் தாள். 'ஆ' என்று அவள் வாய் திறந்தது. அவள் கையிலிருந்த கவர் கீழே விழுந்தது.
அனுப்பியோன்: தி.அரசு, பக்ராநங்கல் அணைக்கட்டு, கிழக்கு பஞ்சாப்.
படபடவென்று கண் இமை களும் மனமும் அடித்துக் கொள்ள, கையிலிருந்த மற் றொரு கவரையும் திருப்பிப் பார்த்தாள் மணிமொழி. அதை அனுப்பியதும் அரசுதான்.
ஒரு முடிவுக்கு வந்த மணி மொழி, மணிமொழி என்ற விலாசமிட்டுக் கீழே கிடந்த கவரை எடுத்துத் தன் சோளிக் குள் வைத்துக்கொண்டு, மற் றொரு கவரை எடுத்துக் கொண்டு நேராகத் தில்லை நாயகம் இருந்த அறைக்குள் நுழைந்து, அங்கே மாமியார் மங்கையிடம் கடிதத்தைக் கொடுத்துவிட்டு விர்ரென்று வெளியே வந்தாள்.
நேராகத் தோட்டத்திற்கு வந்தவள், சுற்றிலும் நோட்ட மிட்டுத் தன்னை எவரும் பார்க்கவில்லை என்று தெரிந் ததும், தன் சோளிக்குள்ளிருந்த அந்த கவரை எடுத்துப் பிரித்துப் படித்தாள். முதல் வரியைப் படித்ததுமே அவள் கண்கள் கலங்கின.
'மறக்கமுடியாத மணி மொழிக்கு, எப்படி இந்தக் கடிதத்தைத் தொடங்குவது, எப்படி முடிப்பது, என்ன எழுதுவது என்பதே எனக்குத் தெரிய வில்லை!
நான் சாகவில்லை, உயி ரோடுதான் இருக்கிறேன் என் பது இந்தக் கடிதத்தை நான் எழுதுவதிலிருந்தே உனக்குத் தெரியும். இந்தச் செய்தி உனக்கு முதலில் அதிர்ச்சியைத் தரும், அப்புறம் ஆனந்தத்தைத் தரும். உடனே ஓடிப் போய் நெற்றியில் பெரிய திலகம் இட்டுக்கொள்வாய். வெள்ளைச் சேலையை உரிந்து எறிந்துவிட் டுப் பட்டுப் புடவையைக் கட்டிக் கொள்வாய்!'
இதைப் படித்ததும், அப்ப டியே கண்களை மூடிக்கொண் டாள் மணிமொழி. மூடிய அவள் விழிகளிலிருந்து கண்ணீர் கொட்டியது.
'நீங்கள் இறந்த பிறகு ஒருக் கணமும் இந்த உலகத்தில் இருக்கமாட்டேன்!' என்று என்னிடம் நீ அடிக்கடி சொல் வாயே! எனக்கு நினைவு வந்த தும் நீ இருக்கிறாயா, இல்லையா என்பதைத்தான் முதலில் விசாரித்தேன். பஞ்சாப் அரசினர் உன்னைப் பத்திரமாக என் அப்பா அம்மாவிடம் அனுப்பி வைத்துவிட்டதாகத் தெரிந்தது.
|