Published:Updated:

'ஐயோ... அக்காவுக்குத் தெரிந்தால்...'

'ஐயோ... அக்காவுக்குத் தெரிந்தால்...'

'ஐயோ... அக்காவுக்குத் தெரிந்தால்...'
விகடன் பொக்கிஷம்
'ஐயோ... அக்காவுக்குத் தெரிந்தால்...'

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
'ஐயோ... அக்காவுக்குத் தெரிந்தால்...'
'ஐயோ... அக்காவுக்குத் தெரிந்தால்...'
'ஐயோ... அக்காவுக்குத் தெரிந்தால்...'
'ஐயோ... அக்காவுக்குத் தெரிந்தால்...'
'ஐயோ... அக்காவுக்குத் தெரிந்தால்...'
'ஐயோ... அக்காவுக்குத் தெரிந்தால்...'

நாடகம், சினிமாக்களில்கூட என் வாழ்க்கையில் நடந்ததைப் போன்று ஒரு நிகழ்ச்சியை நீங்கள் பார்த்திருக்க முடியாது.

அப்போது எனக்குப் பதினைந்து வயதிருக்கும். காளஹஸ்தியிலிருந்து என் தாயாருடன் சென்னைக்கு வந்தேன், நாட்டியம் பயில! சினிமாவில் நடிக்கவேண் டும் என்ற ஆசையே அப் போது எனக்கு இல்லை.

ஜெமினி சந்திரா என்பவர் நடத்திக் கொண்டிருந்த நாட்டியப் பள்ளியில் சேர்ந்து நாட்டியம் பயின்று கொண்டிருந்தபொழுது, ஒரு நாள் என் தாயாரோடு 'சூட்டிங்' பார்ப்பதற்காக வாகினி ஸ்டூடியோவுக்குப் போயிருந்தேன்.

'மாயா பூதம்' என்ற தெலுங்குப் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். வேடிக்கையாகப் போன என்னை, யாரோ ஒருவர் உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு என்னிடம் வந்து, ''இந்தப் படத்தில் நீ நடிக்கிறாயா?'' என்று கேட்டார்.

எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. நானாவது, நடிப்பதாவது! என் தாயார் மறுத்துவிட்டார்கள். ஆனால், அந்த ஆள் விடவில்லை.

''சிறு வேஷம்தான். குழந்தை கிருஷ்ணனுக்குப் பாலூட்டும் பெண்ணாக நடிக்க வேண்டும். அதிர்ஷ்டமிருந்தால், இந்தப் படத்திலிருந்தே பெரிய நடிகையாக வந்து, லட்சம் லட்சமாகச் சம்பாதித்துவிடலாம்'' என்று ஏதேதோ சொல்லி என் தாயாரின் சம்மதத்தைப் பெற்று, அன்றே என்னை நடிக்கவும் வைத்துவிட்டார்.

மறுநாள், அவரோடு இன்னொருவர் வந்தார். அவர் பெயர் சிவராம். தெலுங்குப் படங்களில் முக்கியமான நகைச்சுவை நடிகர் அவர்.

''சமாஜம் என்ற தெலுங்குப் படத்தில் ஒரு சிறு வேடம் வாங்கித் தருகிறேன், நடிக்கிறாயா?'' என்று கேட்டார் சிவராம். அதிர்ஷ்டம் நம்மைத் தேடி வர ஆரம்பித்துவிட்டது என்று மகிழ்ந்து போன நான், உடனே அதற்குச் சம்மதித்து விட்டேன். மறுநாள் 'சமாஜம்' படப்பிடிப்பு நடந்தது.

பிறகு அவர், ''இன்று மாலையில் எங்கள் வீட் டுக்கு வரமுடியுமா? என் மனைவியையும், குழந்தை களையும் உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்'' என்றார். அன்று மாலை சிவராமின் வீட்டுக்கு என் தாயாரோடு போனேன். மனைவி-மக்களோடு மகிழ்ச்சியான குடும்பம். சிவராமின் மனைவி பிரபாவதிக்கு என்னைப் பார்த்த மாத்திரத்திலேயே ஏதோ ஒரு பாசம். அன்பைப் பொழிந்து உபசரித்து விட்டார். அவரது பிள்ளைகளும் அப்படித் தான்.

ஓரிரு நாட்கள் கழிந்தன. சிவராம் எங்கள் வீட்டுக்கு வந்தார். சுற்றி வளைத்துப் பீடிகை போடாமல், எங்களைத் திகைக்க வைத்த ஒரு செய்தியை என் தாயாரிடம் சொன்னார்.

''முறையான பயிற்சியும், தக்க பாதுகாப்பும் இருந்தால் கமலகுமாரியை (அப்போது என் பெயர் அதுதான்!) பெரிய நடிகையாகக் கொண்டு வந்துவிட முடியும். அவளை நான் திருமணம் செய்துகொள்கிறேன். பயிற்சி கொடுத்து நடிகை யாக்குகிறேன். அதிர்ஷ்டம் இருந்தால் பெரிய நடிகையாகட்டும். இல்லாவிட்டால் என் மனைவி யாக ஒரு குறையும் இல்லாமல் இருந்துவிடட்டும்'' என்றார்.

என்னுடைய பிராப்தம் அதுவானால், யார் அதற்குக் குறுக்கே நிற்க முடியும்? என் தாயார் சம்மதித்து விட்டார்கள். எங்கள் திருமணம் ரகசியமாக முடிந்து, என்னைத் தனியே வீடு எடுத்து அமர்த்திவிட்டார்.

'ஐயோ... அக்காவுக்குத் தெரிந்தால்...'

வெளியே ஒரு குறையும் இல்லை. ஆனா, உள்ளத்தில்..? அவருடைய மனைவி பிரபாவதிக்குத் தெரிந்தால் எப்படிப் பதறிப் போவார்கள்? நான் செய்தது சரிதானா?

ஒரு வருஷம் இரண்டு மாதம் கழித்து, ஒரு நாள், ''ஜெயந்தி! (அவர் வைத்த பெயர்) நாளை யிலிருந்து நீ அந்த வீட்டுக்கு வந்துவிடப் போகி றாய்'' என்றார். நான் திகைத்துப் போனேன்.

''பயப்படாதே! உன் அக்காவிடம் எல்லாவற்றை யும் சொன்னேன். அவள் கோபிக்கவோ, சண்டை போடவோ இல்லை. 'எல்லாரும் ஒன்றாக இருந்துவிடலாமே! இரட்டைச் செலவு எதற்கு?' என்கிறாள். நாளைக்கே நீ அங்கு வந்து விடலாம்'' என்றார். எனக்குக் கண் கலங்கி விட்டது.

மறுநாள் அந்த வீட்டுக்கு, பிரபாவதி அக்கா வின் முன்னிலையில் பயமும், தயக்கமும், மன உறுத்தலுமாக நான் போய் நின்றேன்.

அக்கா என்னை அணைத்தவாறு உள்ளே அழைத்துச் சென்றார்கள். அந்த ஒரு விநாடியில், தன்னலமில்லாத தியாகப் பண்பைத் தரிசித்து மெய்ம்மறந்து போனேன்.

சினிமாவில் மட்டுமல்ல... என் வாழ்க்கையிலும் 'இரு கோடுகள்'தான். ஆனால், தன் கணவரின் இரண்டாவது மனைவியை இரு கரம் நீட்டி வரவேற்று அணைத்திட்ட ஒரு பெண்மணியை நீங்கள் எந்த சினிமாவில் அல்லது நாடகத்தில் பார்த்திருக்க முடியும்?

பிரபாவதி அக்காவுக்கு எட்டுக் குழந்தைகள். என்னையும் சேர்த்து (இப்போது எனக்கும் ஒரு பையன் இருக்கிறான்) ஒன்பது. ஆம். அக்காவுக்கு நானும் ஒரு குழந்தைதான்!

 
'ஐயோ... அக்காவுக்குத் தெரிந்தால்...'
'ஐயோ... அக்காவுக்குத் தெரிந்தால்...'