விகடன் பொக்கிஷம்

காலப் பெட்டகம்

கல்கி, துமிலன் இவர்களோடு நகைச் சுவை எழுத்துக்குப் புகழ்பெற்ற எஸ்.வி.வி- யின் கட்டுரைகளும் இந்த ஆண்டு இதழ் களில் இடம்பெற்றுள்ளன.

மகாத்மாவின் வெற்றி!

நேயர்களே! பழைய மகாத்மாவுக்குப் போட்டியாக புதிய மகாத்மா ஒருவர் இந்நாட்டில் ஏற்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியுமல்லவா? தெரியாதவர்களுக்காகச் சொல்கிறேன். பழைய மகாத்மா, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி; புதிய மகாத்மா, ஹிஸ் எக்ஸலென்ஸி லார்டு இர்வின்! பம்பாய் மிதவாதத் தலைவர் ஒருவர் இர்வின் பிரபுவுக்கு 'மகாத்மா' பட்டம் அளித்திருக்கிறார். இர்வினையும் காந்தியையும் சேர்த்து 'இரட்டை மகாத்மாக்கள்' என்கிறார்.

பழைய மகாத்மாவின் சீடர்களுக்கு இதைக் குறித்து வருத்தமுண்டாகக்கூடும். விகடன் அவர்களிடம் அநுதாபப்படுகிறான். ஆனால், அதற்கு யார் என்ன செய்வது? அந்தச் சீடர்கள் முன்னதாக விழித்துக்கொண்டு, 'மகாத்மா' பட்டத்தை காபிரைட் செய்திருக்க வேண்டும். அல்லது, டிரேட் மார்க் சட்டத்தின் கீழாவது பதிவு செய்திருக்க வேண்டும். அப்போதெல்லாம் தூங்கிக்கொண்டிருந்துவிட்டு, இப்போது வருத்தப்படுவதால் என்ன பயன்?

இதிலிருந்து இர்வின் பிரபுவை விகடன் குறை கூறுவதாக அவருடைய சீடர்கள் சண்டைக்கு வரக்கூடாது. இர்வின் பிரபு நல்லவர், ரொம்ப நல்லவர், மகா நல்லவர் என்பதாக விகடன் அத்தாட்சிப் பத்திரம் கொடுக்கத் தயார். ஆனால் அவரை நல்லவராக்கியது யார் என்று உங்க ளுக்குத் தெரியுமா? காந்தியல்ல, ஸாப்ரூ அல்ல, சாஸ்திரியுமல்ல; மிஸ்டர் சர்ச்சிலும் லார்ட் ராதர்மீரும்தான்!

யமலோகத்தை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு கிழவனார் தமது அருமை மகனை அருகில் அழைத்து, ''அப்பா! உலகில் நான் தான தர்மம் ஒன்றும் செய்யவில்லை. எல்லாரும் என்னைப் பொல்லாதவன் என்கிறார்கள். எப்படியாவது நீ எனக்கு நல்ல பெயர் வாங்கி வைக்க வேண்டும்'' என்று சொல்லிவிட்டு இறந்து போனார். தந்தையின் இக்கடைசி விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்று மகன் நிச்சயித்தான். தந்தை தன்னுடைய பண்ணையாட்களுக்கெல்லாம் தினம் இரண்டுபடி நெல் கூலி போடுவது வழக்கம். மகன் இதை ஒன்றரைப் படியாகக் குறைத்தான்.

உடனே ஆட்களெல்லாம் 'மகனைவிடத் தந்தையே ரொம்ப நல்லவன்' என்று சொல்லிக் கொண்டார்கள்.

இதே மாதிரியாக மிஸ்டர் சர்ச்சிலும், லார்டு ராதர்மீரும் போடுகிற போட்டில், லார்டு இர்வின் எவ்வளவோ நல்லவராகி விட்டார் என்பதை விகடன் பரிபூரணமாக ஒப்புக் கொள்கிறான்.

- ஏப்ரல் தலையங்கத்திலிருந்து

இந்த ஆண்டு நவம்பர் இதழில்தான், தமிழின் முதல் திரைப்படமான 'காளிதாஸ்' படத்தை, 'கர்நாடகம்' என்னும் புனை பெயரில் அமரர் கல்கி விமர்சித்து எழுதி யுள்ளார். அந்த விமர்சனம் 1.10.2008 இதழ் ஆனந்த விகடன் இணைப்புப் புத்தகத்தில் மறுபிரசுரம் செய்யப்பட்டது.

'காளிதாஸ்' படத்துக்கான விகடனின் விமர்சனம் குறித்து வேறொரு பத்திரிகை யில் வெளியான கருத்துக்கு, 'என்ன, எங்கே, எப்பொழுது?' பகுதியில் இடம் பெற்ற விளக்கம்...

பலே பேஷ்! 'தமிழ்ப் பாட்டி'
பலே பலே பேஷ்!

'அம்யூஸ்மென்ட் வீக்லி' என்னும் வாரப் பத்திரிகை, 'வெறுப்பான வியாசங்களைப் பிரசுரிக் கப்படாதென்று நமது சகலபாடியான ஆனந்த விகடனைக் கேட்டுக் கொள்ளுகிறோம்' என்று எழுதியிருக்கிறது. அது குறிப்பிடும் 'வெறுப்பான' வியாசம், சென்ற இதழில் வெளியான 'தமிழ்ப் பாட்டி' என்ற வியாசமாகும். 'பேரும் புகழும் வாய்ந்த நம் தமிழ்நாட்டு நடிகரை நம் சகலபாடி யான ஆனந்த விகடன் என்ற மாதாந்தரப் பத்திரிகையில், 'தமிழ்ப் பாட்டி' என்னும் தலைப்பின் கீழ் கண்டித்து எழுதியிருப்பது மிகவும் வருந்தத்தக்கது' என்று அது எழுதுகிறது.

உண்மைதான். யாரையாவது, எதையாவது உள்ளதை உள்ளபடி சொல்லிக் கண்டித்து எழுதியதைப் படிக்க வருத்தந்தான் உண்டாகும். இது அஹிம்ஸா தர்மத்துக்கு விரோதமல்லவா?ஆகவே, விகடன் கூறுவதைக் கேளுங்கள்!

மிஸ். டி.பி.ராஜலக்சுமி நடித்த 'காளிதாஸ்' என்னும் பேசும் படக்காட்சி நன்றாயிருந்தது. மிக நன்றாயிருந்தது. ரொம்ப நன்றாயிருந்தது. எவ்வளவோ நன்றாயிருந்தது! எவ்வளவு நன்றா யிருந்ததென்று சொல்லமுடியாது. அளவுக்கு மீறி நன்றாயிருந்தது. ஆயிரம் நாப்படைத்த ஆதிசேஷனாலும் சொல்ல முடியாது. மிக மிக மிக, ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றாயிருந்தது. போதுமல்லவா?

ஒரு மகாராஜாவின் மோட்டார் யானை!

விகடன் பேச்சு

நகர வைத்தியர்: உங்களூரில் டாக்டர் ஒருவர் கூட இல்லையே! வியாதி வந்தால் என்ன செய்வீர்கள்?

நாட்டுப்புறத்தான்: அதைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. நாங்கள் இயற்கையாகவே மரணமடைகிறோம்.

''காலம் மாறிவிட்டது. ஸ்திரீகள் விஷயமோ சொல்ல வேண்டியதில்லை!''

''என்ன விசேஷம்?''

''என் பெண் சட்ட கலாசாலையில் படிக்கிறாள். அவளுடைய தாயாரோ வீட்டில் சட்டங்கள் போடுகிறாள்!''

நிருபர்: ஐயா! தங்கள் பத்திரிகைக்கு அனுப்ப வேண்டுமென்று நகைச்சுவைக் கட்டுரை ஒன்று எழுதி வைத்திருந்தேன். அதைக் குழந்தை கிழித்தெறிந்துவிட்டது.

ஆசிரியர்: இந்தக் காலத்தில் குழந்தைகளுக்குக் கூட ரசனை இருக்கிறது.

கணவன்: நமது மோட்டார் வண்டி ஓட்டுகிறவனை வேலையை விட்டுத் தள்ளிவிடலாமென்றிருக்கிறேன். பார்! அவன் நாலைந்து தடவை என் உயிருக்கே ஆபத்து வந்துவிடும்படி செய்துவிட்டான்.

மனைவி: போனால் போகிறது! இன்னும் ஒரு தடவை பார்த்துக்கொண்டு, பிறகு வேலையை விட்டுத் தள்ளிவிடலாம்.

ஈ.வே.இராமசாமி நாயக்கர்
'கல்கி'

அதிக நீளம் என்னும் ஒரு குறைபாடு இல்லாவிட்டால், ஈரோடு ஸ்ரீமான் ஈ.வே.இராமசாமி நாயக்கருக்குத் தமிழ் நாட்டுப் பிரசிங்கிகளுக்குள்ளே முதன்மை ஸ்தானம் ஒரு கணமும் தயங்காமல் அளித்துவிடுவேன். சாதாரணமாக, இவருடைய பிரசங்கங்கள் மூன்று மணி நேரத்துக்கு குறைவது கிடையாது. இந்த அம்சத்தில்

தென்னாட்டு இராமசாமியார் வடநாட்டு பண்டித மாளவியாவை ஒத்தவராவார். ஆனால் இருவருக்கும் ஒரு பெரிய வித்தியாசமுண்டு. பண்டிதரின் பிரசங்கத்தை அரைமணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்து என்னால் கேட்க முடியாது. பஞ்சாப் படுகொலையைப் பற்றிய தீர்மானத்தின் மேல் பேச வேண்டுமென்றால் பண்டிதர் ஸிரர்ஜிதௌலா ஆட்சியில் ஆரம்பிப்பார். 1885-ம் வருஷத்தில் காங்கிரஸ் மகாசபை ஸ்தாபிக்கப்பட்ட காலத்திற்கு வருவதற்குமுன் பொழுது விடிந்துவிடும். ஆனால் இராமசாமியார் இவ்வாறு பழங்கதை தொடங்குவதில்லை. எவ்வளவுதான் நீட்டினாலும் அவருடைய பேச்சில் அலுப்புத் தோன்றுவது கிடையாது. அவ்வளவு ஏன்? தமிழ்நாட்டில் இராமசாமியாரின் பிரசங்கம் ஒன்றை மட்டுந்தான் என்னால் மூன்று மணிநேரம் உட்கார்ந்து கேட்க முடியுமென்று தயங்காமல் கூறுவேன். உட்கார்ந்து உட்கார்ந்து இடுப்பு வலி கண்டுவிடும். எழுந்து போக வேண்டுமென்று கால்கள் கெஞ்சிக் கூத்தாடும். ஆனால் போவதற்கு மனம் மட்டும் வராது.

தாம் மூன்றாம் வகுப்புக்கு மேல் படித்ததில்லையென்பதாக ஸ்ரீமான் நாயக்கரே ஒரு சமயம் கூறினாரென அறிகிறேன். இருக்கலாம். ஆனால், அவர் உலகாநுபவம் என்னும் கலா சாலையில் முற்றுணர்ந்த பேராசிரியர் என்பதில் சந்தேகமில்லை. எங்கிருந்துதான் அவருக்கு அந்தப் பழமொழிகளும் உபமானங்களும், கதைகளும், கற்பனைகளும் கிடைக்கின்றனவோ, நான் அறியேன்!

நியூயார்க்கில் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் ஒரு கட்டடம் 105 உப்பரிகைகளுள்ளது. உயரம் 1048 அடி. இந்தக் கட்டடத்தில் 40,000 பேர் வசிக்கலாம்.

கிரீஸ் தேசத்துக்கருகில் உள்ள தீவுகள் ஒன்றில் பெண்களே இல்லையாம். அங்குள்ளவர்கள் பெண் மிருகங்களைக்கூடத் தீவை விட்டு வெளியேற்றி விடுகிறார்களாம்.

உலகத்திலேயே மிக ஆழமுள்ள தங்க வயல் பிரேஜிலில் இருக்கிறது. அது 8000 அடி ஆழமுள்ளதாம்.

தலைமயிரைப் பளபளப்பாகச் செய்வதற்கா கவே முதன்முதல் சோப் உபயோகப்படுத்தப் பட்டது.

ஒரு தினத்தில் மனித தேகத்திலிருந்து வெளி யாகும் உஷ்ணத்தைக் கொண்டு 44 பவுண்டு பனிக்கட்டியை உருக்கிக் கொதிக்கும்படி செய்து விடலாம்.

புராதன கால மனிதர்கள் எப்பொழுதும் கையில் ஆயுதம் தரித்துச் செல்வார்கள். ஒருவர் தமது நண்பரைச் சந்திக்கும்போது ஆயுதம் ஏந்தியிருக்கும் வலது கையைப் பிடித்துக் கொள் வார்களாம். அதிலிருந்துதான் கைகுலுக்கும் பழக்கம் உண்டாயிற்றாம்.

ஸினிமாப் படங்களில் ஓர் உருவத்தின் வெளித்தோற்றத்தை மட்டும் பார்க்கிறோம். ஆனால், மனிதனது பருமனையும் நன்கு எடுத்துக் காண்பிக்கக்கூடிய படம் பிடிக்கும் முறை இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

சிறுவர்களுக்கென்று ஒவ்வொரு இதழி லும் நாலைந்து பக்கங்கள் ஒதுக்கப்பட்டு, சித்திரங்களோடு ஒரு சிறுகதை வெளியாகி யுள்ளது.

என்ன? எங்கே? எப்பொழுது?

லண்டனில் காந்திஜி!

காந்திஜி முதன்முதல் லண்டனுக்குப் பாரிஸ்டர் பரீட்சைக்குப் படிக்கப் புறப்பட்டபோது, அவருடைய தாயார் அவரிடம் மூன்று பிரதிக்ஞைகள் வாங்கிக்கொண்டது அனைவரும் அறிந்ததே! இந்தத் தடவையும் அவரிடம் யாராவது அத்தகைய வாக்குறுதிகளை வாங்கிக்கொள்ளப் போகிறார்களாவென்பது முதல் பிரச்னை. மேற்படி மூன்று வாக்குறுதிகளில் மதுவையும், மாமிசத்தையும் பற்றி இப்போது கவலை கிடையாது. ஆனால் மாதர் விஷயந்தான் விகடனுக்குக் கொஞ்சம் பயமாயிருக்கிறது.

முன்னர் மகாத்மா மலையாளத்துக்குச் சென்றிருந்தபோது, 'மலையாளத்து மாதர் அனைவரிடமும் நான் காதல் கொண்டுவிட்டேன்' என்று கூறியது நேயர்களுக்கு நினைவிருக்கலாம். அது போன்றே இப்போது அவர் ஆங்கிலப் பெண்மணிகளின் வலையில் விழாமல் இருக்க வேண்டுமேயென்று கவலைப்படவேண்டியதாய் இருக்கிறது. எனினும், அந்த ஆங்கிலப் பெண்மணி களின் சூதுவாதுகளையெல்லாம் நன்கறிந்த ஸ்ரீமதி மீராபென் மகாத்மாவுடன் சென்று அவரைக் காத்து நிற்பார் என்று விகடன் எதிர்பார்க்கிறான்.

அழுமூஞ்சி ஆழ்வார்
'நகைச்சுவை நாயனார்'

ஸ்ரீமான் எஸ்.வி. ஆழ்வார்ஸாமி என்னும் நண்பர் ஒருவர், சுதேசமித்திரன் பத்திரிகையில் 'ஹாஸ்ய ரசம் எப்போது தேவை?' என்பதாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதைப் படித்துப் பார்த்தபோது, கட்டுரையின் தலைப்பை 'அழுகுணிப் புராணம்' என்பதாக வைத்திருந்தால் பொருத்தமாயிருக்குமென்று தோன்றிற்று.

ஆழ்வார் தமது அழுகுணிப் புராணத்தை எழுதுவதற்குக் காரணமான கட்டுரை எதுவென்று உங்களுக்குத் தெரியுமா? 'பண்டித மோதிலால் நேருவுக்குப் பகிரங்கக் கடிதம்' என்ற தலைப்புடன் 'கல்கி' எழுதிய கட்டுரைதான். அது பண்டிதரைப் பரிகசிப்பதாயிருக்கிறதாம். ஆபாசமான நடையில், வெறுக்கத்தக்கவிதமாய் எழுதப்பட்டிருக்கிறதாம். அதைப் படித்ததும் ஆழ்வாருக்கு ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்ததாம். தேசாபிமானம் படைத்தவர் யாராவது இப்படி எழுதத் துணிவார் களாவென்று பதைக்கப் பதைக்கக் கேட்கிறார். 'உலகெலாம் புகழும் மகாத்மா காந்தியையும் விக டத்துக்கு உள்ளாக்கி வரைந்திருக்கும் அநியாயத் தை'க் குறித்துப் பதறுகிறார். அந்த வார்த்தைகளைத் திருப்பிச் சொல்லுவதும் அபசாரமாகுமென்று கதறுகிறார்.

ஆழ்வாருடன் அறிவுத் திறமையில் போட்டி போடத் தகுதி வாய்ந்த ஒரே ஒரு மனிதரை எனக்குத் தெரியும். அவர்தான் மகாத்மா ஜன்ம தினத்தன்று பொதுக் கூட்டத்தின் ஆரம்பத்தில், 'பண்டித நேருவைப் பறிகொடுத்த' பாட்டுப் பாடியவர். ஆனால், இந்த இளையாழ்வார் மேற்படி பெரியாழ்வாரின் கட்டுரையைப் படித்தாரா என்பது நிச்சயம் தெரியாது.

ஆழ்வாரின் எல்லை கடந்த அறிவுக்கு 'கல்கி' யின் கட்டுரையிலடங்கிய கருத்து என்னவென்று விளங்காமல் போனதில் வியப்பில்லை. ஆனால், என் போன்ற பாமரர்களுக்கு அது மிகத் தெளிவாய் விளங்குகிறது. 'இறந்து போனவர்களைக் குறித்து அழுது புலம்பிக்கொண்டிருப்பதில் பயனில்லை. அவர்கள் காட்டிய வழிபற்றி நடப் பதுதான் உண்மை தேச பக்தியாகும், தமிழ்ச்சுவை யும், பொருள் ஆழமும் பொதிந்த உயர்ந்த தேசிய கீதங்களையே பாடவேண்டும். ஹிந்துஸ்தானி மெட்டில் அமைந்த சாரமற்ற பாட்டுக்களைத் தேசியகீதமாகக் கொண்டு பாடக்கூடாது' என்பவையே 'கல்கி' கட்டுரையின் திரண்ட கருத்தாகும்.

நமது அழுமூஞ்சி ஆழ்வார் இந்தக் கருத்துக்களை ஒப்புக்கொள்ளமாட்டார் என்பதை நான் அறிவேன். அதைப் பற்றி நான் கவலைப்படவு மில்லை. இந்தியாவில் இதுகாறும் பிறந்து இறந்து போன பெரியோர் ஒவ்வொருவரையும் இவர் பொறுக்கி எடுத்துக்கொண்டு, ஒவ்வொருவருக்கும் ஓர் ஒப்பாரி தயாரித்து, ஓயா அழுகை அழுது கொண்டிருக்கட்டும். ராமன், கிருஷ்ணன் முதலியவர்களின் ஜன்ம தினத்தைக் கொண்டாடுவதும் தவறுதான். அதற்குப் பதிலாக அவர்கள் இறந்து போனதை நினைத்துப் புலம்பட்டும்!

மாத இதழாக வெளிவந்துகொண்டிருந்த ஆனந்த விகடன், அடுத்த ஆண்டிலிருந்து மாதமிருமுறை இதழாக வெளிவரவிருப்ப தாக நவம்பர் இதழில் ஓர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், அடுத்த மாதத்திலிருந்தே (டிசம்பர் '31) மாதம் இருமுறை இதழாக வெளிவரத் தொடங்கி விட்டது விகடன்.

எதில் ஆபத்து அதிகம்?

மோட்டார் பிரயாணத்தைவிட ரயில் பிரயாணத்தில் ஆபத்து குறைவு. ஏனென்றால், என்ஜின் ஓட்டுகிறவன் பக்கத்திலிருக்கும் கரிதள்ளுகிறவனை முத்தமிடுவதில்லை.