விகடன் பொக்கிஷம்

வெற்றி ரகசியத்தின் விளக்க நூல்!

மறைந்த தமிழ் அறிஞர் வ.ரா. 25 ஆண்டுகளுக்கு முன்பு 'தமிழ்ப் பெரியார்கள்' என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதினார். அதில் ஆசிரியர் எஸ்.எஸ்.வாசன் அவர்களைப் பற்றி அவர் குறிப்பிட்டுள்ள சில விஷயங்கள் இங்கே இடம் பெறுகின்றன.

''எனக்கு அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை கிடையாது. எதைச் செய்ய நினைத்தாலும் அதைப் பற்றித் தீர்க்கமாக யோசித்து முடிவுகண்ட பிறகுதான் அதில் இறங்குவேன். ஒன்றைத் துவக்கி, அதைப் பாதி வழியில் நிறுத்து வது என்பது என் இயற்கைக் குப் பொருந்தியது அல்ல.''

- இவ்வாறு சொல்பவர் எஸ்.எஸ்.வாசன். வெற்றியின் ரகசியங்கள் என்பதை விளக்கிக் காட்டும் நூலைப் போல, வாசன் தமது வாழ்க்கையை நடத்தி வருகிறார் என்று சொன் னால், அது மிகையாகாது. வாழ்க்கை என்ற போர்க்களத் தில் அங்குலம் அங்குலமாகப் போராடி, முன்னேறி வந்தவர் வாசன்.

'என் அன்னையால்தான் நான் இந்தப் பெரும் பதவிக்கு வந்தேன்' என்று சத்ரபதி சிவாஜியும், நெப்போலியன் சக்கரவர்த்தியும் சொன்னதில் உண்மை இருக்குமோ இருக்காதோ, எனக்குத் தெரியாது. வாசனின் தற்போதைய சிறந்த நிலைக்குக் காரணம் 'தாயும் தகப்பனும்' ஆன அவருடைய தாயார்தான்.

வாசன் உயரமுமல்ல; ரொம் பக் குள்ளமுமல்ல. உடல் கனம் கொண்டவருமல்ல; மெலிந்தவ ருமல்ல. சிவந்த மேனி உடைய வர். புன்னகை பூக்கும் முக விலாசம் படைத்தவர். கணீர் என்று பேசும் குரல், அவரது தனிப் பொக்கிஷமாகும். பதற்ற மில்லாத நாக்கு; அவசரப்படாத மனது. அலட்சியம் செய்து அவதூறு பேசும் தன்மைக்கும் அவருக்கும் வெகு தூரம்.

தாம் தேச பக்தன் என்றாவது, சமூகத் தொண்டன் என்றாவது, கலா ரசிகன் என்றாவது, இலக்கியப் பிரியன் என்றாவது வாசன் பறைசாற்றியதே இல்லை. படாடோபம் என்பதே அவ ருக்கு இனிப்பில்லாத ஒன்று. பலாத்காரத்திலும் இனிப்பு இல்லை. கட்டாயப்படுத்திக் காரியத்தைச் சாதித்துக் கொள் வது அவருக்குப் பிடித்தமே இருப்பதில்லை.

காக்காய் பிடிக்கிறவனைக் கண்டால் அவருக்கு எல்லை யில்லாத அவமதிப்பு. ரசிகர்களு டனும், புத்திசாலிகளுடனும், காரியவாதிகளுடனும் கபடமில் லாத மனத்தர்களுடனும் பழகு வதில் வாசனுக்கு அளவு கடந்த பிரியம். சங்கீதத்திலும் சித்திரத்திலும் நகைச்சுவை யிலும் ஆழ்ந்து கிடக்கும் இவரு டைய உள்ளம், சுருதி பேதத் தைக் காணப் பொறுப்ப தில்லை.