விகடன் பொக்கிஷம்

இளம் மொட்டு... பழுத்த பழம்..!

இளவரசி டயானா என்ற இளம் மொட்டு திடீரென்று உதிர்ந்தது. அன்னை தெரசா என்ற தொண்டு செய்து பழுத்த பழமும் மண்ணில் வீழ்ந்தது.

ஒரு மின்னலைப் போலத் தோன்றி உலக மக்களின் இதயத்தில் இடம்பிடித்தவர் இளவரசி. பிரமாண்டமான வானம் போல பரந்த உள்ளத்தால் மக்கள் நெஞ்சில் இடம்பெற்றவர் அன்னை.

அன்புக்காக நாளெல்லாம் ஏங்கியவராக இருந்தார் டயானா. நாளெல்லாம் பிறருக்கு அன்பு காட்டியே வாழ்ந்தார் தெரசா.

அரண்மனையின் கட்டுப்பாடுகளை விரும்பாமல் அதை விட்டு விலகி, மிகச் சாதாரண மக்களுக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க எதிர்காலத் திட்டமிட்டவர் டயானா. பசியிலும் பிணியிலும் வாடும் கவனிப்பாரற்ற ஏழை மக்களுக்காக, வேறு சிந்தனையின்றி தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் அன்னை தெரசா.

இளமையும், விரிந்த புன்னகையும் ததும்பிய டயானாவின் அழகு கவர்ச்சிகரமானது. முதுமையின் ரேகைகள் படர்ந்து மெலிதான புன்னகையும் கொண்ட அன்னை தெரசாவின் அழகு தெய்வீகமானது.

எதையோ சாதிக்கக் கனவு கொண்டிருந்த டயானாவின் மரணம், ஏமாற்றம் தரும் பேரிழப்பு. ஒரு பெண்ணால் தனித்து இத்தனைச் சாதனை செய்ய முடியுமா என்று வியப்பூட்டிய அன்னை தெரசாவின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.

உலகின் இரு கண்களிலும் நீர் ஆறாகப் பெருகுகிறது.