விகடன் பொக்கிஷம் .

தொழில் திருப்தி! + ''புராணம் படிக்காதே!''

தொழில் திருப்தி!

நுங்கம்பாக்கத்தில் தன் வீட்டு மொட்டை மாடியில் பாக்யராஜ் அமர்ந்திருந்தார். முடி அலங்காரம் செய்பவர் ஒருவர், அவருக்கு முடி வெட்டிக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட இருபது நிமிடமாயிற்று.

எதிரே இருந்த நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்த பாக்யராஜ், ''எந்தக் கலைஞனுக்கும் தன் படைப்பில் பூர்ண திருப்தி வந்துவிடாது. ஒன்றை முடித்த பிறகு, 'அடடா..! இன்னும் இப்படிச் செய்திருக்கலாமே' என்று தோன்றும். எனக்குக்கூட ஒரு காட்சியை எடுத்து முடித்த பிறகு 'இன்னும் இரண்டு ஷாட் இப்படி எடுத்திருக்கலாமே' என்று தோன்றும். அது கலைஞனின் சுபாவம்!''

பாக்யராஜ் எதற்காக இப்போது இந்த 'டாபிக்' பற்றிப் பேசுகிறார் என்று எதிரே இருந்த நண்பர்களுக்குப் புரியவில்லை.

பாக்யராஜே தொடர்ந்தார்... ''இப்போ எனக்கு முடி வெட்டற இந்த நண்பரையே எடுத்துக்குங்க. பாருங்க... எனக்கு முடியை வெட்டிட்டு... இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் என்று அஞ்சு நிமிஷமா வெட்டிக்கிட்டே இருக்காரு. அதான் சொன்னேன்... எந்தக் கலைஞனுக்கும் தன் தொழிலில் உடனே திருப்தி ஏற்பட்டுவிடாதுன்னு.''

முடி வெட்டுபவர் பாக்யராஜின் இந்தப் பேச்சைக் கேட்டதும் சிரித்துவிட்டு, முடி வெட்டுவதை அத்துடன் நிறுத்திக் கொண்டார்.

- பி. எஸ். பி. (19-9-82)

"புராணம் படிக்காதே!"
''பாஞ்சாலியின் துகிலை உரித்தது போல், தி.மு.கழகத்தை சம்பத் கேவலப்படுத்துகிறார்.''

''துரோணாசாரியாரிடம் வில் வித்தை பயின்ற அர்ஜுனன், எப்படி எதிலும் நாட்டம் கொள்ளாமல் ஒரே நோக்கிலிருந்து வில் வித்தை பயின்றானோ, அப்படி நம் தோழர்களும் 'திராவிட நாடு' பெறும் நோக்கம் ஒன்றையே மனத்தில் கொண்டு, மற்ற எதிலும் நாட்டம் கொள்ளாமல் இருக்க வேண்டும்.''

''ராமன் சீதைக்காகக் காத்திருந்தபோது, தம்பி லட்சுமணன் வந்து 'சீதை கிடைக்கவில்லை. அவருக்குப் பதில் சிந்தாமணியை அழைத்து வந்திருக்கிறேன்.

ஏற்றுக் கொள்ளுங்கள்' என்று கூறியதாகப்புராணம் இருந்தால், நானும் திராவிட நாட்டுக் கொள்கையைவிட்டுவிட்டு, தமிழ்நாட்டுப் பிரிவினையை ஏற்றுக்கொள்ளத் தயார்!''

புராணங்களைப் படிக்காதீர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் தி.மு.கழகத்தினர், தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதற்காகக் கையாளும் மேற்கோள்கள்தான் மேற்கண்டவை!

(28-5-61)

சமீபத்தில் மாரடைப்பால் இறந்தார் பிரபல ஹிந்தி பின்னணிப் பாடகர் முகமது ரஃபி. சண்டே பத்திரிகை அவரைப் பற்றி எழுதும்போது 'மாரடைப்பிற்குச் சங்கீதம் தெரியாது' என்று குறிப்பிட்டுள்ளது. எத்தனை ஜீவனுள்ள வரி!

(14-9-80)

தமிழ் படிக்கிறார் லதா!
திரு. கொத்தமங்கலம் சுப்பு ஒரு சமயம் பம்பாய் சென்றிருந்தபோது, பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது தாம் தமிழ் மொழியைக் கற்று வருவதாகக் கூறினார் லதா. உடனே சுப்பு தன் கையிலிருந்த காகிதத்தைக் கொடுத்து அதில் அவருடைய பெயரைத் தமிழில் எழுதும்படி கேட்டார். ''உங்கள் பெயரிலுள்ள 'ஷ்'க்கு பதில் ஏன் 'ச்' போட்டிருக்கிறீர்கள்?'' என்று கேட்டதற்கு, ''நான் எப்போதும் சுத்த தமிழில்தான் எழுதுவது வழக்கம்'' என்று பதில் சொல்லிவிட்டுச் சிரித்தார் அந்தப் பாடகி.

தன் கையெழுத்துடன் 'சிவாஜி கணேசன்,' 'ஜெமினி' ஆகியவையும் அவர் எழுதியவைதான்.

(7-6-64)

''எங்களுக்குல் அப்படி ஒரு ஒற்றூமை!''
''நான் முதன்முதலாகப் பாடல் எழுதிய 'அழகர் மலைக் கள்வன்' என்ற படம் இதுவரையில் சென்னையில் திரையிடப்படவில்லை. ஏன்? என் மனைவி ரமண திலகம்

நடித்த முதல் படமான 'பணம் தரும் பரிசு' படமும் இன்னும் சென்னைக்கு வராமலேயே இருக்கிறது. இப்படி ஒரு ஒற்றுமை எங்களுக்குள்!''

- வாலி
(5-12-65)

மீண்டும் பத்மினி!

பத்மினி, மணமான பின் பட உலகை விட்டு விலகி விட்டதாக அறிவித்தார். ஆனால், இப்போது மறுபடியும் பட உலகில் புகுந்திருக்கிறார். தமிழில் ஆறு படங்களும் இந்தியில் ஆறு படங்களும் ஒப்பந்தமாகியிருக்கின்றன.

''ஏன் மீண்டும் சினிமாவில் நுழைந்து விட்டீர்கள்?'' என்று கேட்டதற்கு ''மறுபடியும் நடிப்புத் தொழிலுக்கு வருவேன் என்று நான் நினைக்கவே இல்லை. என் கணவர் டாக்டர் ராமச்சந்திரன் எம்.ஆர்.ஸி.பி. பட்டம் வாங்குவதற்காக மேல் நாடுகளுக்குச் செல்லப் போகிறார். அதற்காக தற்போது மங்களூருக்குச் சென்று படிப்பில் ஆழ்ந்திருக்கிறார். இரவும் பகலும் ஓடி ஆடி வேலை செய்து பழக்கப்பட்ட எனக்கு, வீட்டில் தனியாக இருந்தால் 'போர்' அடிக்கிறது. அதற்காகத் தான் மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்தேன்.'' என்றார்.

(1-3-64)