விகடன் பொக்கிஷம் .

விமர்சகரின் பொறுப்பு!

ஸ்ரீமதி கே.பி.சுந்தராம்பா ளைக் கண்டு பேசிய விவரம்.

என்னைக் கண்டதும் ஒரு சிறுமி ஸ்ரீமதி சுந்தராம்பாளிடம் ஓடிச் சென்று, ''யாரோ உங்க ளைத் தேடி வந்திருக்கிறார்'' என்று அறிவித்தாள். உடனே அவர் மாடியிலிருந்து இறங்கி வந்து, என்னை மிக்க மரியாதை யோடு வரவேற்று மாடிக்கு அழைத்துச் சென்றார். ''நீங்கள் யார்? எங்கு வந்தீர்?'' என்றெல் லாம் அவர் கேட்பார் என்று எதிர்பார்த்தேன். அவர் அவ்வி தம் ஒன்றும் என்னைக் கேட்க வில்லை. வெகு நாள் பழகிய வர்களை உபசரிப்பது போலவே நடந்துகொண்டார். பத்து நிமி ஷங்களுக்குள் காபி முதலிய சிற்றுண்டி வகைகள் தருவிக்கப் பட்டு, என் முன் வைக்கப்பட் டன.

நான்: பட்டணத்திலிருந்து வந்திருக்கிறேன். நான் ஒரு பத்திரிகை நிருபன். பொதுவில் சில விஷயங்களைப் பற்றித் தங்களோடு பேசிவிட்டுப் போகலாமென்றே வந்தேன்.

ஸ்ரீமதி: பேஷாகப் பேசலாம்.

நான்: நல்லவேளை! அமெ ரிக்காவில் ஒரு பிரபல சினிமா நடி இருக்கிறார். அவருடைய பெயர் கிரேட்டா கார்போ. எந்தப் பத்திரிகை நிருபரோடும் அவர் பேசுவதில்லையாம். பேச மறுத்துவிடுவாராம்.

ஸ்ரீமதி: அப்படிச் செய்வது நியாயமல்ல! நம்முடைய குற் றங்குறைகளை எடுத்துச் சொல் லும் பத்திரிகைக்காரர்களுக்கு நாம் கடமைப்பட்டவர்களல் லவோ? ஆனால், பொதுவில் விமர்சனத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூற விரும்புகிறேன். ஒரு படத்தைப் பற்றியோ, ஒரு நடிகரைப் பற்றியோ விமர்சனம் எழுதும்போது குறைகளை மட்டும் எடுத்துக் காட்டக் கூடாது. சிலாக்கியமான அம்சங்களையும் எடுத்துச் சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் எவ்வித சீர்திருத்தத்தையும் செய்ய முடியும்.

இந்த சமயத்தில் ''சாப்பாடு கொண்டு வரட்டுமா?'' என்று யாரோ ஒரு ஸ்திரீ வந்து ஸ்ரீமதி சுந்தரம்பாளைக் கேட்டார். அப்பொழுது மத்தியானம் மணி 4 இருக்கலாம். ''இன்னுமா நீங்கள் சாப்பிடவில்லை? சாப் பிடாமலா என்னோடு இத் தனை நேரம் பேசிக் கொண்டு இருந்தீர்கள்!'' என்று நான் ஆச்சரியத்தோடும் கவலையோடும் கேட்டேன்.

''பொது விஷயங்களைப் பற்றிப் பேசவேண்டிய கட மையை விடவா சாப்பாடு முக் கியம்? அதுவும் என்ன, இரண்டு உருண்டை சோற்றைக் கையில் வாங்கிப் பரதேசியைப் போல உண்பதற்கு என்ன அவசரம்?'''

நான்:பரதேசியைப் போலவா? கையிலா உண்கிறீர்கள்!
ஸ்ரீமதி: ''இதற்கு ஏன் ஆச்ச ரியப்படுகிறீர்கள்? நான் பர தேசிதானே! அல்லவா?'' என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். அதற்கு மேல் அங்கு நிற்க என் மனம் சகிக்கவில்லை. விடை பெற்றுக்கொண்டு கிளம்பி னேன்.

(ஐந்து பக்க பேட்டியில் இது ஒரு துளிதான்!)