விகடன் பொக்கிஷம் .

குற்றம் சாட்டுகிறார் ஸ்ரீவித்யா...-பதில் சொல்கிறார் நாகேஷ்!

தங்கச்சி! நீ இப்படிக் கேக்கலாமா?

''நான் முதன்முதலில் நாகேஷைப் பார்த்தது 'நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தில்தான். அப்போதிலிருந்தே நான் அவருடைய விசிறியாகிவிட்டேன்.

'மூன்றெழுத்து' படத்தில்தான் அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் நாள் படப்பிடிப்பில் நாகேசுக்காக எல்லோரும் நான்கு மணி நேரம் காத்துக் கொண்டிருக்க வேண்டியதாகி விட்டது. எனக்கு அவர் மீது ஒரே எரிச்சல், கோபம்.

முணுமுணுத்துக்கொண்டேயிருந்தேன். நாகேஷ் வந்தார், நன்கு குடித்துவிட்டு! அவரும் அவரு டைய நடையுடை பாவனைகளும்... சே!

அன்றைய காட்சி, நான் அவரை அடிப்பதைப் போல. அவர் மீது இருந்த ஆத்திரத்தில் உண்மையாகவே அடித்துவிட்டேன். அவரைக் காணும்போதெல்லாம் (எப்போதுமே குடிதான்) அவர் மீது வெறுப்பு வளர்ந்துகொண்டே இருந்தது!

ஆனால், ஓர் ஆச்சரியம்! நாகேஷ் எவ்வளவு குடித்திருந் தாலும், படப்பிடிப்பிற்கு வந்தவுடன் மளமளவென்று மேக்கப் போட்டுக்கொண்டு எந்தத் தடுமாற்றமும் இல்லா மல் நடிக்க ஆரம்பித்துவிடு வார்'' என்று சொல்லும் ஸ்ரீவித்யா நாகேஷிடம் சில கேள்விகள் கேட்க விரும்பு கிறார்.

மிகச் சிறந்த நடிகரான நாகேசுக்கு திடீரென்று ஏன் 'மார்க்கெட்' சரிந்தது?

நாகேஷ் நன்றி கெட்டவர் என்று இவருடைய நண்பர் களே சொல்லக் கேள்விப்பட் டிருக்கிறேன். அவர்கள் அப்படிச் சொல்லுமாறு இவர் ஏன் நடந்து கொள்கிறார்?

தெலுங்குப் படவுலகிற்குப் போனது ஏன்? அதே போல, மலையாளப் பட உலகில் நடிக்க அழைப்பு வந்தால் நடிப்பாரா?

பல படத் தயாரிப்பாளர் களிடம் தனக்கு 'வேடங்கள்' வேண்டுமென்று கேட்டு வாங்குகிறாராம். இவரைப் போன்ற நடிகர்கள் தோன்றுவது அபூர்வம். தன்மானத்தை இழக்கக்கூடாது என்று, சிறியவளான நான் இவருக்கு புத்தி சொல்லும்படி வைத்துக் கொள்ளலாமா?

இவருடைய சரிவிற்குப் பத்திரிகையாளர்களும் காரணம் என்று கேள்விப்பட் டேன். இது எந்த அளவுக்கு உண்மை?

ஸ்ரீவித்யாவின் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார் நாகேஷ்.

''ஸ்ரீவித்யா! திருமதி வசந்தகுமாரி பெற்றெடுத்த உயர்ந்த குமாரி. படவுலகில், மற்ற எத்தனையோ குமாரிகள்! அதில் சில அசந்த குமாரிகள்; அல்லது, கசந்த குமாரிகள்!

கிருஷ்ணமூர்த்தி இயல் என் றால், வசந்தகுமாரி இசை. இவர்களின் மகள் ஸ்ரீவித்யா, நாடகம்! கூடப்பிறந்த தங்கை இல்லை என்ற குறையை நீக்கி யவர் ஸ்ரீவித்யா.

'மூன்றெழுத்து' படப்பிடிப் பில் நான் குடித்துவிட்டு வந்து எல்லோரையும் காக்க வைத்தே னாம்; தங்கைக்குக் கோபம். அவர்கள் நேரத்திற்கு முன்பே வந்துவிட்டதால்தான் காத்துக் கொண்டிருக்கவேண்டியதாகி விட்டது என்பது என் கருத்து!

எவ்வளவு நேரம் நடித்தோம் என்பது முக்கியம் அல்ல; எவ் வளவு சிறப்பாக நடித்தோம் என்பதே முக்கியம். குறள் எவ் வளவு சிறியது! இருந்தாலும், 'கோட்டம்' பெரியதல்லவா?

ஆதிசங்கரர் 32 வயது வரை வாழ்ந்தார். ஏசுந£தர் 28 வயது. பாரதியாரின் வாழ்வு முடியும்போது 39. விவேகானந்தர் 39. நம் படவுலக மொழியில் கூறி னால், இவர்களின் வாழ்நாள் 'அரை கால்ஷீட்'கூட வரவில்லை என்போம்! அதற்குள், அந்த மகான்கள் எவ்வளவு பெரிய வேலைகளைச் செய்து விட்டார்கள்?!

குறைந்த கால்ஷீட்டுகளில் படம் எடுக்கப்பட்டு, நிறைய நாட்கள் படம் ஓடவேண்டும். நவராத்திரி அன்று வெளியிடப்பட்டு, விஜயதசமி அன்று படம் வெளியேற்றப்பட்டுவிடக்கூடாது!

ஸ்ரீவித்யாவிற்கு நான் நிறை யக் குடித்துக்கொண்டிருந்தேன் என்று வருத்தமாம். நான் நிறையக் குடித்திராவிட்டால், என் அருகிலுள்ள 'உயிர்' நண் பர்கள் 'அதை' எடுத்து அதிகம் குடித்துக் கெட்டுப் போயிருப் பார்களே!

என் 'மார்க்கெட்' திடீரென ஏன் சரிந்தது?

சரிவில்தான் மகிழ்ச்சி! இமயமலையில் நீர்த் தேக்கம்; அது சரிந்தது. கங்கையென்று வணங்கினார்கள்! குடகு மலையில் நீர்த்தேக்கம், அது சரிந்தது; காவிரி என்று கும்பிட்டார் கள்! கூந்தல் சரியச் சரியத்தான் பெண்ணே அழகு! கோபுரங்கள், சர்ச்சுகள், மசூதிகள் சரிவா கத்தான் காட்சி தருகின்றன. தொழுகிறார்களே! விலைவாசி சரிந்தால், மக்கள் பையைத் தூக்கிக்கொண்டு மார்க்கெட் டுக்கு வருகிறார்கள்!

நாகேஷின் மார்க்கெட் சரிவு, படப்பிடிப்பு நிலையத்தை முதல்முறையாகப் பார்க்க வந்த அன்றே, முகத்திற்கு மேக் கப் போட்டு நடிக்க (நடிக்க?) பலருக்கு வாய்ப்பு! என் சரிவு, இன்னும் பலருக்கு 'சான்ஸ்!'

என்னை நன்றி இல்லாதவன் என்று சில நண்பர்கள் கூறுகி றார்களாம். நன்றியை எவ்வளவு செலுத்தினாலும், மனித ஜென் மத்துக்கு அது எடுபடவே படாது! நன்றிக்குப் பெயர் போனது நாய்தானே! நான், மனிதனாகவே இருக்க விரும்பு கிறேன்.

'கோங்கூரா' சட்னிக்கு ஆசைப்பட்டு தெலுங்குப் பட உலகிற்குப் போகவில்லை. எனக்குத்தான் காரம் கூடாதே! தெலுங்குக் கலைஞர்கள் பேசும் தெலுங்கு எனக்குப் புரிந்தது; நான் பேசும் தெலுங்கு அவர் களுக்குப் புரிகிறது. அவ்வளவு தான்! ஆனால், தமிழ்நாட்டில் தமிழில்தான் எழுதித் தந்து, கதையைத் தமிழில்தான் 'டிஸ்கஸ்' செய்கிறார்கள். புரிய வில்லையே!

மலையாளம் ஞான் அறியும். 'அங்கேயும்' என்னை அறியும். அதனால அவடே வரும் சித்ரங்களில் ஞான் வர மார்க்கமுண்டே! அடூர் பாசி... எனிக்கும் ஆ மனுஷனுக்கும் நல்ல ராசி!

நான் போய்ப் பிறரிடம் 'சான்சு' கேட்டதாக ஸ்ரீவித்யா கூறி வருந்துகிறார்.

சிங்கம் என்றுமே கர்ஜிக்க இரவல் குரல் கேட்பதில்லை. தாய், பால்சோறு பிசைந்து குழந்தைக்கு வைத்துவிட்டு, எனக்கும் ஒரு வாய் என்று பிள்ளையிடம் கேட்பது, பசிக்காகவா? அது, தாயின் விளையாட்டு! அதுபோல 'தாய் நாகேஷ்' விளையாட்டாகப் பேசியிருப்பேன்.

ரேகை பார்க்கக் கை நீட்டு கிறார் ஒருவர். சோதிடர் பார்க் கிறார். தூர நின்று பார்த்தால், அவர் சோதிடரிடம் கையேந்தி நிற்பது போலிருக்கும். உண்மை யில், சோதிடர்தானே 'ஏந்தி' நிற்கிறார்? அப்படித்தான் நாகேஷ் வேடம் கேட்கிறான் என்று சொல்லப்படுவதும்!

என் வாழ்க்கை ஓர் இளநீர் தேங்காய் போல. இளநீர் மேல் உள்ள தும்புகள் கயிறு திரிக்கத் தான் உபயோகப்படும். என்னை மேலெழுந்தவாரியாகப் பார்த் தால், பழகினால், என்னைப் பற்றிக் கயிறு திரிக்கத்தான் செய்திகள் கிடைக்கும்.

ஆனால், நான் உள்ளிருக்கும் இளநீராக, என்றும் எவர்க்கும் இனிப்பவனாக, ஒளவையார் கூறியபடி நன்றிக்குரியவனாக நிற்கிறேன். கத்தி எடுத்து சீவிய வனுக்குக்கூட, இனிமையான 'கூல் டிரிங்' கொடுத்துக் கொண் டிருக்கிறேன்.

என்னைச் சில பத்திரிகையாளர்கள் சேர்ந்து சரித்துவிட் டதாகக் கூறுகிறார். அதெப் படி?

சில மாதங்களுக்கு முன்பு, பத்திரிகைகளில் என்னைப் பற்றிப் பார்த்திருப்பீர்கள்...

'உயிர் ஊசலாடுகிறது! அபாய கட்டத்தைத் தாண்டவில்லை.'

'நம்பிக்கை இல்லை!'

'நிலைமை கவலைக்கிடம்!'

'இனி வாய்ப்பில்லை.'

- நாகேஷ் நடித்த படங்கள், நடிக்கவிருக்கும் படங்கள், வந்த படங்கள், வர இருக்கும் படங்கள்...

- அம்புக்குறி போட்ட இடம் தான் டாக்டர் ரங்கபாஷ்யம் நின்ற இடம். இப்படி...

இறந்தே போய்விட்டேன் என்றார்களே; இருந்து கொண்டிருக்கிறேனே!

இருப்பேன்; வாழ்வேன்; எழுது வேன்; எழுதிக்கொண்டும் இருப்பேன்!

-தொகுப்பு: சியாமளன்