Published:Updated:

சினிமா விமர்சனம்: ஆட்டுக்கார அலமேலு

சினிமா விமர்சனம்: ஆட்டுக்கார அலமேலு

பிரீமியம் ஸ்டோரி
சினிமா விமர்சனம்: ஆட்டுக்கார அலமேலு
விகடன் பொக்கிஷம்
சினிமா விமர்சனம்: ஆட்டுக்கார அலமேலு
சினிமா விமர்சனம்: ஆட்டுக்கார அலமேலு
சினிமா விமர்சனம்:
சினிமா விமர்சனம்: ஆட்டுக்கார அலமேலு
ஆட்டுக்கார அலமேலு
சினிமா விமர்சனம்: ஆட்டுக்கார அலமேலு
சினிமா விமர்சனம்: ஆட்டுக்கார அலமேலு
சினிமா விமர்சனம்: ஆட்டுக்கார அலமேலு
சினிமா விமர்சனம்: ஆட்டுக்கார அலமேலு

ஜெய்கணேஷின் நடிப்பு ஏ ஒன்! அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக்கொண்டு அவர் செய்யும் வில்லத்தனமான பல காரியங்கள் இந்தப் படத்தைப் புயல் வேகத்தில் நகர வைக்கின்றன. சொல்லப்போனால், இவரது கதாபாத் திரம்தான் கதையின் முக்கிய அம்சமாக நின்று கைகொடுத்து உதவியிருக்கிறது. ஷேக்ஸ்பியரின் 'ஒத்தெல்லோ' நாடகத்தில் வரும் 'இயாகோ' மாதிரி, கிடைக்கும் ஒவ் வொரு சந்தர்ப்பத்தையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத் தியிருக்கிறார் ஜெய்கணேஷ்.

அடுத்தபடியாக ஆடு. அது நாயைத் துரத்துவது, 'ஆபத்து' என்ற காகிதத்தைக் கவ்விக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடுவது, சிவகுமாரின் வீட்டிலிருந்து டேப்ரிகார்டரைத் தூக்கி வந்து எஜமானி அம்மா பாடியிருக்கும் பாட்டைப் போட்டு ரசிப்பது... இப்படிப் பல இடங்கள். ஆட்டு மூளை அபார வேலை செய்திருக்கிறது!

வண்ணத்தில் வயற்காட்டுக் காட்சிகளெல்லாம் கண் ணைப் பறிக்கின்றன. கோர்ட் சீனில் சிவகுமாரை குறுக்கு விசாரணை செய்யும் இடத்தில் ஜமாய்த்துத் தள்ளியிருக்கிறார் ஸ்ரீப்ரியா. அதிலும், அவ்வப்போது நீதிபதியைப் பார்த்து, 'இதைக் குறிச்சுக்குங்க எஜமான்' என்று கூறுவது நல்ல பட்டிக்காட்டு ரக நடிப்பு.

'க்ளைமாக்ஸ்' காட்சியில் போடப்பட்டிருக்கும் ரீ-ரிக்கார் டிங் மியூசிக், தியேட்டரையே தாளம் போட வைக்கிறது. 'ஆத்துலே மீன் பிடிச்சு' பாட் டும் காதில் தேங்கி நிற்கிறது.

நாயும் ஆடும் போடும் சண்டை வெரி குட்! காரணம், ஆடு ஓர் இடத்தில்கூட நாயை முட்டவில்லை! நிறைய கற்பனைத் திறனோடு ஷாட்டுக்களை மாற்றி மாற்றி வெட்டிப் போட்டு, ஏதோ இருப்பது போன்ற ஒரு 'த்ரில்'லை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் எடிட்டர்.

சினிமா விமர்சனம்: ஆட்டுக்கார அலமேலு

காட்சிகளைப் படமாக்கும் விதத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டு செயல்பட்டிருக்கிறார் காமிராக்காரர். இந்தப் படத்தில் அவருடைய கைவண்ணம் நன்றாகவே பளிச்சிடுகிறது.

சிவகுமார் - ஜஸ்டின் சண்டைக் காட்சிகளில் நல்ல விறுவிறுப்பு! அவர் கள் பங்கிட்டுக் கொள்ளும் ஒவ்வொரு குத்தும் நமது முதுகில் பலமாக விழுகி றது. ஸ்ட.ன்ட் மாஸ்டரின் முதுகுக்கு ஒரு 'ஷொட்டு' கொடுக்க வேண்டும்.

ஒரு ஆடு பிரியாணியாகவில்லை; நடிகராகியிருக்கிறது. தேவருக்கு ஒரு சபாஷ்!

 
சினிமா விமர்சனம்: ஆட்டுக்கார அலமேலு
-விகடன் விமர்சனக்குழு
சினிமா விமர்சனம்: ஆட்டுக்கார அலமேலு
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு