பிரீமியம் ஸ்டோரி
காலப் பெட்டகம்
விகடன் பொக்கிஷம்
காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்

ஆடல் பாடல்
க்ளியோபாட்ரா
(சினிமா விமர்சனத்திலிருந்து ஒரு பகுதி...)

ஸெஸில் பி டெமில் என்பவர் ஒரு படம் தயாரித்தால், அது இடிமுழக்கம்போல்தான் வெளிவரும். இவர் கையிலகப்பட்ட எந்தச் சரித்திர சம்பந்தமான கதையோ சினிமாக்கதையோ பெரிய பிரமாண்டக் காட்சி ஆகாமல் இருப்பதில்லை. ''கொட்டு மேளம்! தட்டு பறை! முழங்கு பேரிகை! ஊது சங்கு! அடி கூத்து! போடு சப்தம்!''- இத்தகைய முழக்கங்களுடன்தான் அவர் படத்தை

காலப் பெட்டகம்

வெளியில் விடுவார். மகத்தான காட்சிகளைக் காண்பித்துக் கண் ணைப் பறித்துவிடுவார். ஏராளமான கூட்டங்களைக் காட்டி அதிசயத்தை உண்டு பண்ணுவார். அசாதாரணமான சம்பவங்களைக் கொண்டு வந்து திகைக்க வைப்பார். ஆடம்பரமான சீன்களைத் தயாரித்து மலைக்கும்படி செய்வார். டாம்பீகமான உடைகளைப் போட்டு அதிசயப்படுத்துவார். தளுக்கு மினுக்கான ஸ்திரீகளைத் தேடிக் கொணர்ந்து நிறுத்தி மயங்கச் செய்வார். இந்தக் கை வரிசைகளையெல்லாம் அவர் 'க்ளியோபாட்ரா' படக் காட்சியிலும் காண்பித்துவிட்டார்.

இப்படத்தில் நடித்த முக்கியமான நடிகர்கள் எல்லோரும் பேர்போனவர்கள்தான். ரோமாபுரித் தலைவர் ஜூலியஸ் ஸீஸராக நடித்த வாரன் வில்லியம் என்பவர் தோற்றத்தில் ஆஜானுபாகுவாக, ஏறக்குறைய சரித்திரத்தில் வரும் ஸீஸர் மாதிரித்தான் இருந்தார்.

மார்க் ஆண்டனியாக நடித்த ஹென்றி வில்காக்ஸன் என்பவரை இங்கிலாந்திலிருந்து தேடிப் பொறுக்கி எடுத்து இதற்காகவே வரவழைத்தார்களாம். இப்படத்தில் வரும் ஆண்டனிக்கும், ஷேக்ஸ்பியர் மூலம் நாம் அறிந்திருக்கும் ஆண்டனிக்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது என்பதை அறிந்தேன். இப்படத்தில் வந்த ஆண்டனி வெறுமனே க்ளியோபாட்ரா மீது மையல் கொண்டு மயக்க ஓர் ஆசாமி வேண்டுமே என்று வந்தவர் போலிருந்தது.

காலப் பெட்டகம்

ஜூலியஸ் ஸீஸர், மார்க் ஆண்டனி இரு வரையும் தன் மாய வலையில் சிக்க வைத்த பேரழகியான க்ளியோபாட்ராவாக க்ளாடட் கால்பர்ட் என்பவள் நடித்தாள். ஸெஸில் பி டெமில் கைகாரர் என்று சொன்னேனல்லவா? சொல்லாவிட்டாலும் இப்பொழுது சொல்லுகி றேன். க்ளியோபாட்ராவுக்காக இந்த நடிகையை எதற்காகப் பிடித்தார் என்று சிலர் சந்தேகப்பட லாம். பேரில் ஒரு விசேஷம் இருக்கிறதல்லவா? க்ளியோபாட்ரா - க்ளாடட் கால்பர்ட் - இரண்டும் ஒரு மாதிரி ஒற்றுமை வாய்ந்தாற்போல் இல்லையா? அதற்காக இருக்கலாம்.

மற்றொரு விஷயம் இந்தப் படத்திலிருந்து விளங்கிற்று. இதைக் கேட்டு நமது பிரிட்டிஷ் மன்னர்கள் தலைகுனிய வேண்டும். இந்தியாவைப் பற்றி பிரிட்டிஷார் ஸ்வப்னத்தில்கூட நினைப்பதற்கு முன் - பிரிட்டிஷார் மூதாதையோர் ஸீஸர் கொடியின் கீழ் வாழும்போதே - ஸீஸர் இந்தியா மீது ஒரு கண் வைத்துவிட்டான். அந்தக் காலத்திலேயே இந்தியா பொன் விளையும் பூமி என்று கண்டுபிடித்துவிட்டார்கள்!

இதைச் சொல்லித்தான் க்ளியோபாட்ரா ஸீஸரை மயக்குகிறாள். இந்தியா, சமயத்திற்கு சினிமா கதைக்குக்கூட எவ்வளவு கைகொடுக்கிறது பார்த்தீர்களா?

தாத்தா! - தாதா!

ங்கே, தைரியமிருந்தால் பின்வரும் புத்தகங்களின் பெயர்களைப் படியும், பார்க்கலாம்!

மருதூர் யமகவந்தாதி, தில்லை யமகவந்தாதி, திருவேரகத்து யமகவந்தாதி, துறைசை யமகவந்தாதி, மறைசை யந்தாதி, திருக்குற்றால யமகவந்தாதி, பழமலைத் திரிவந்தாதி, திருப்புகலூர் அந்தாதி, வயலூர்ப் பதிற்றுப் பத்தந்தாதி, பாலைவனப் பதிற்றுப் பத்தந்தாதி, முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ், செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ், பிரம்மவித்யா நாயகி பிள்ளைத் தமிழ், மயூரகிரி இரட்டைமணி மாலை, வாளளிபுற்றூரப் புராணம், வாட்போக்கிக் கலம்பகம், திருநாகைக் காரோணப் புரா ணம், திருவெண்ணீற்றுமை பிள்ளைத் தமிழ், கலைசைச் சிலேடை வெண்பா...

அதற்குள்ளாகவா சரணாகதி அடைந்துவிட்டீர்? இந்த நூல்களின் பெயர்களைப் படிப்பதே உமக்குச் சிரமமாயிருக்கிறதே, அவை களைக் கற்றல் எவ்வளவு சிரமமாயிருக்க வேண்டும்? அவற்றைப் போன்று விகடனில் நாலைந்து பக்கங்களுக்குப் பெயர் ஜாபிதா மட்டும் கொடுக்கக்கூடிய அவ்வளவு தமிழ் நூல்களையும் கற்றுத் தேர்தல் என்றால், அது எத்தகைய செயற்கரிய செயல்?
அப்பேர்ப்பட்ட அரும்பெரும் செயல் புரிந்த பெரியார் ஒருவர் நமது தமிழ்நாட்டில் இருக்கிறார். அவர் யார் தெரியுமா? அவருடைய முழுப் பெயரைப் படிப்பது கூடக் கொஞ்சம் கடினமான விஷயந்தான். மகா மகோபாத்தியாய தாக்ஷி ணாத்யகலாநிதி டாக்டர் உ. வே.சாமிநாதய்யர் அவர்கள்.

காலப் பெட்டகம்

அந்நாளில் வடமொழிக்கு வியாஸ பகவானும், தமிழ் மொழிக்கு அகஸ்திய முனிவரும் எத்தகைய தொண்டு செய்தார்களென்று சொல்லப்படுகிறதோ, அவ்வளவு சிறப்பான தொண்டை இந்நாளில் டாக்டர் சாமிநாதய்யர் அவர்கள் தமிழுக்குச் செய்திருக்கிறார்கள். அவர்களால் பதிப்பிக்கப்பெற்ற பழைய தமிழ் நூல்களின் ஜாபிதாவைப் பாருங்கள்.

சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை, பத்துப் பாட்டு, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை, நன்னூல் மயிலைநாதருரை, நன்னூல் சங்கர நமச்சிவாயருரை, தக்கயாகப்பரணி, பாச வதைப்பரணி, திருப்பாதிரிப்புலியூர் கலம்பகம், திருக்காளத்திநாதருலா, திருப்பூவண நாதருலா, தேவை உலா, மதுரைச் சொக்கநாதருலா, கடம்பர் கோயில் உலா, சங்கரலிங்க உலா,தமிழ்விடு தூது, வண்டுவிடு தூது, தென்றல்விடு தூது, திருவாவடுதுறைக் கோவை, திருமயிலைத் திரிபந்தாதி, கூழை அந்தாதி, பழனிப்பிள்ளைத் தமிழ், திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா, ஸ்ரீசிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள், ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தத் திரட்டு, திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், தியாகராஜ லீலை.

காலப் பெட்டகம்

'தமிழ்ச் செல்வம்', 'தமிழ்ச் செல்வம்' என்று நாமெல்லாம் பெருமையடித்துக்கொள்கிறோம்; அய்யர்வாளின் அரிய முயற்சிகள் இல்லாமற் போயிருந்தால், ''உங்களுடைய தமிழ்ச் செல்வம் எங்கே?'' என்று கேட்பவர்களுக்கு, ''எங்கேயோ பூமியில் புதையுண்டு கிடக்கிறது; தோண்டிப் பார்த்தால் ஒருவேளை அகப்படலாம்'' என்றே பதில் சொல்லவேண்டியிருந்திருக்கும்.

உங்கள் குறைகள்?

னந்த விகடன் ஆசிரியர் அவர்களுக்கு,

நாங்கள் திருப்பூர் சர்வே ஸ்கூலில் படித்துக் கொண்டு வருகிறோம். எங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்குத் திருப்பூர் ஜெயிலில் உள்ள திண்ணையைப் பள்ளிக்கூடமாக வைத்தி ருக்கிறார்கள். அங்கு போய் உட்காருவதற்கு ரொம்பவும் வெட்கமாய் இருக்கிறது. மற்றும் மத்தியான வெயிலில் வேக வேண்டியிருக்கிறது. இன்னும் ஒரு மாதம் வரை இங்கே காலம் தள்ளியாகவேண்டும்.

என்னை இங்கு பார்த்த ஒருவர், என் தகப்ப னாரிடம் சென்று ''உங்கள் பையனைத் திருப்பூர் சப்ஜெயிலில் பார்த்தேனே'' என்று சொல்லியிருக் கிறார். உடனே என்

காலப் பெட்டகம்

தகப்பனார் என்னைப் பார்க்க விழுந்தடித்துக்கொண்டு ஓடி வந்தார். பிறகு சங்கதிகளை அறிந்துகொண்டு, இடத்தை மாற்றும்படி உபாத்தியாயரை ரொம்பவும் கேட் டுக்கொண்டார். ஆனால், உபாத்தியாயர் அசைய வில்லை. நண்பர்கள் யாரையாவது வீதியில் சந்திக்க நேர்ந்தால், ''என்னடா கைதி? என்ன சமாசாரம்?'' என்கிறார்கள். இது மற்றொரு வெட்கக்கேடு. சர்வே பள்ளிக்கூடத்தை வேறு இடத்துக்கு மாற்றத் தாங்கள் ஒரு வழி சொல்வீர்கள் என எண்ணுகிறேன்.

இப்படிக்குத் தங்கள் அன்புள்ள,
ராவ்.

நமது பிரிட்டிஷ் சர்க்காரின் ஆட்சியின் கீழ் என்னென்ன அதிசயங்கள் நடக்குமென்று சொல்ல முடியாது. ஸர்வே பள்ளிக்கூடத்தை அவர்கள் இந்த மட்டில் ஜெயிலுக்குள்ளே வைக் காமல் திண்ணையில் வைத்து நடத்துகிறார்களே, அதற்கு நீங்களும் உங்கள் தகப்பனாரும் அவருக் குத் தகப்பனார் இருந்தால் அவரும் சர்க்காருக்கு நன்றி செலுத்த வேண்டியது.

- விகடன்

காலப் பெட்டகம்

உங்களுக்குத் தெரியுமா?

1. உலகில் முதன்முதல் தோன்றிய பத்திரிகை எது?
2. வக்கீல்கள் ஏன் கறுப்பு கவுன் அணிகிறார்கள்?

எங்களுக்குத் தெரியுமே!

1. 'இட்ச்சிங் பங்' என்ற சீன தினசரியே உலகில் முதன்முதல் வெளியான பத்திரிகை. அது கி.பி. 910-முதல் பெய்பிங் நகரிலிருந்து வெளியாகி வருகிறது. இதன் ஆசிரியர்களில் 800 பேருக்கு மேல் தங்கள் உயிரை 'அச்சுச் சட்ட'த்தினால் இழந்திருக்கிறார்களாம்.
2. கி.பி.1714-ல் இங்கிலந்து தேச ராணியான ஆன் இறந்ததும், சீமை வக்கீல்கள் வெகுநாள் வரை கறுப்புச் சட்டை அணிந்து துக்கம் கொண் டாடினார்களாம். அந்தக் கறுப்பு சட்டை கடைசி யில் அவர்கள் தொழிலின் சின்னமாகிவிட்டது.

விகடன் பேச்சு

காலப் பெட்டகம்

குழந்தை: அம்மா, சுவரில் ஓர் ஆணி அடித்தேன். கையில் பலமாக அடிபட்டுவிட்டது!

தாய்:கண்ணே! இந்த வலியை எப்படியடா சகித்துக்கொண்டு அழாமலிருந்தாய்?

குழந்தை: நீ வீட்டில் இல்லையாக்குமென்று நினைத்தேனம்மா!

------------------------------

''பரம பிதாவிடம் பாவ மன்னிப்புக் கேட்குமுன் நாம் என்ன செய்ய வேண்டும்?''

''பாவம் செய்யவேண்டும்!''

------------------------------

மனைவி: அப்பாவுக்கு எழுதின கடிதாசை நீங்க ஆபீசுக்குப் போறபோது...

கணவன்: ஆமாம், ஆமாம்! அதைத் தபாலில் போட்டாய்விட்டதே!

மனைவி: போடவில்லை! நான் உங்களிடம் கொடுக்க மறந்து போய்விட்டேன் என்று சொல்ல வந்தேன்.


இந்த ஆண்டிலிருந்து கதை, கட்டுரைகளுக்கான படங்கள் எல்லாம் மெருகேறி, அழகு மிளிர்கிறது. ஆர்ட் டைரக்டர் சேகர் ஒரு கதைக்கு வரைந்திருந்த அழகிய படம் இது.

காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்

17.2.35 விகடன் இதழில் 'தாத்தா!-தாதா!' என்னும் தலைப்பில், டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்களின் 80-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தையட்டி ஒரு நீண்ட கட்டுரை வெளியாகியுள்ளது. இதில்தான், ''ஒளவையாருக்கு எப்படி 'தமிழ்ப்பாட்டி' என்ற பட்டம் பொருந்துமோ, அது போலவே தமிழுக்குத் தாங்கள் செய்திருக்கும் தொண்டினால் 'தமிழ்த் தாத்தா' என்னும் பட்டம் தங்களுக்குப் பொருந்தும்'' என்று உ.வே.சா அவர்களுக்குப் பட்டம் கொடுத்துக் கௌரவித்திருக்கிறான் விகடன்.


காலப் பெட்டகம்

அந்தக் காலத்தில் ஆனந்த விகடனில் ஒரு பக்கக் கதைகள் எழுதி பிரசித்தி பெற்ற 'சசி' இந்த ஆண்டுத் துவக்கத்திலிருந்து விகடனில் எழுதத் தொடங்கியுள்ளார்.

அன்றாடம் நாம் கையாளும் பொருள்களைக் கொண்டே விஞ்ஞானக் கருத்துக்களை விளக்கும் கட்டுரைகளும் வெளியாகத் தொடங்கியுள்ளன. இதை எழுதி வந்தவர் பெ.நா.அப்புஸ்வாமி அய்யர் பி.ஏ.,பி.எல்.

வாசகர்களின் குறைகளைப் பிரசுரித்து, அவற்றுக்குப் பதிலும் சொல்லும் 'உங்கள் குறைகள்' பகுதி இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கியுள்ளது.


காலப் பெட்டகம்


 
காலப் பெட்டகம்
காலப் பெட்டகம்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு