Published:Updated:

லால்குடியின் சாதனை!

லால்குடியின் சாதனை!

பிரீமியம் ஸ்டோரி
லால்குடியின் சாதனை!
விகடன் பொக்கிஷம்
லால்குடியின் சாதனை!
லால்குடியின் சாதனை!
லால்குடியின் சாதனை!
லால்குடியின் சாதனை!
லால்குடியின் சாதனை!
லால்குடியின் சாதனை!

யலின் மேதை லால் குடி ஜெயராமனுக்கு கடந்த டிசம்பர் மாதம் ஒரு தந்தி வந்தது. பம்பாயிலிருக்கும் நாராயணமேனன் அனுப்பியிருந்தார். வாழ்த்துக்களோடு ஆரம்பித்தது தந்தியின் வாசகம். அதை வாசித்த லால்குடிக்கு மகிழ்ச்சி ஒரு பக்கம்; ஆச்சரியம் இன்னொரு பக் கம்! வெவ்வேறு ஆசிய நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்டு, பரிசீலிக்கப்பட்ட 77 இசைக் கருவிகளின் 'டேப்'புகளில் தனது வயலின் இசை முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தபோது ஏற்பட்டது மகிழ்ச்சி. 'டேப்'பை அனுப்பி வைத்த ஆல் இந்தியா ரேடியோ இதைப் பற்றி மூச்சு விடாமல் மௌனம் கடைப்பிடித்ததால் ஏற்பட்டது ஆச்சரியம்!

லால்குடியின் சாதனை!

உண்மையிலேயே அது ஒரு பெரிய சாதனைதான். அயல்நாட்டு நீதிபதிகள், அருமையான கர்நாடக இசையில் மயங்கி அதற்கு முதலிடம் தந்தது, ஒவ் வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய விஷயம்தான்.

சில தினங்களுக்குப் பிறகு நாராயணமேனன், லால்குடிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

''பாரிஸிலும், மேற்கு ஜெர்மனியிலும், பெல்ஜியத்திலும் நடக்கப்போகும் 'வயலின் விழா'வுக்கு நீங்கள் நேரில் சென்று ரசிகர்கள் முன்னிலையில் வயலின் வாசிக்க வேண்டும். உங்களைச் சிறந்தவராகத் தேர்ந்தெடுத்த சர்வதேச இசை நிறுவனத்தின் விருப் பம் இது...''

பயண ஏற்பாடுகள் துரி தப்படுத்தப்பட்டன. பெட்டி படுக்கைகளெல்லாம் கூடத் தயார். மிருதங்கத்தோடு வேலூர் ராமபத்ரனும் ரெடியாகிவிட்டார்.

மே மாதம் 20-ம் தேதி பெல்ஜியம் பிரஸ்ஸல்ஸ் நகர ரேடியோ ஸ்டேஷ னில் ரசிகர்கள் முன்னிலையில் வயலின் விழா நடந்தது. இந்தக் கச்சேரியை ஸ்காண்டிநேவியா உட்பட, பல ஐரோப்பிய நாடுகளில் ஒலிபரப்பினார் கள். லால்குடியைத் தவிர எகிப்து, அயர்லாந்து, யூகோஸ்லேவிய நாட்டு வயலின் வித்வான்களும் இந்த விழாவில் தனித்தனியாகப் பங்கு கொண்டார்கள்.

ஒவ்வொருவரும் அரை மணி நேரம் கச்சேரி செய்தார்கள். நளினகாந்தி ராகத்தில் ஒரு தியாகராஜர் கீர்த்தனையும், பெஹாக் ராக தில்லானாவும் வாசித்தார் லால்குடி. நடுவில் ராமபத்ரனின் தனி! எகிப்து, யூகோஸ்லேவிய வித்வான்கள் நின்றுகொண்டே வாசித்தார்கள். அயர்லாந்துக்காரர் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தபடி வாசிக்க, லால்குடி மட்டும் சம்பிரதாயமான முறையில் தரையில் உட்கார்ந்து வாசித்தார்.

பெல்ஜியத்தில் லால்குடியைக் கவர்ந்த இடம் அடோமியம். அதில் அணுகுண்டுகளைப் பெரிதுபடுத்தி வைத்திருக்கிறார்கள். 335 அடி உயரம் கொண்ட இந்த அடோமியத்தை லிஃப்டில் ஏறித்தான் பார்க்க வேண்டு மாம்!

''பெல்ஜியம் மொத்தமும் ஏர்-கண்டிஷன் செய்து வைத்திருப்பது மாதிரி ஒரே சீராக குளுகுளுவென்று இருக்கிறது. அந்த நாட்டின் மொத்த ஜனத்தொகையை ஒவ்வொரு ஆண்டும் இந்தியா உற்பத்தி செய்கிறது என்று குறிப்பிட்டார் ஒருவர். அங்கு செழிப்பு தாண்டவமாடுகிறது. இளைஞர்களுக்கு வாளிப்பான உடற்கட்டு இருக்கிறது. மக்கள் கவலை, பயம் என்று எதுவும் இல்லாமலிருக்கிறார்கள்...'' என்று பெல்ஜியப் புகழ் பாடுகிறார் லால்குடி.

 
லால்குடியின் சாதனை!
-வீயெஸ்வி
லால்குடியின் சாதனை!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு