Published:Updated:

''வேளை வரும்போது உண்மையைச் சொல்வேன்!'' -சில்க் ஸ்மிதா கடைசி பேட்டி

''வேளை வரும்போது உண்மையைச் சொல்வேன்!'' -சில்க் ஸ்மிதா கடைசி பேட்டி

பிரீமியம் ஸ்டோரி
''வேளை வரும்போது உண்மையைச் சொல்வேன்!'' -சில்க் ஸ்மிதா கடைசி பேட்டி
விகடன் பொக்கிஷம்
''வேளை வரும்போது உண்மையைச் சொல்வேன்!'' -சில்க் ஸ்மிதா கடைசி பேட்டி
''வேளை வரும்போது உண்மையைச் சொல்வேன்!'' -சில்க் ஸ்மிதா கடைசி பேட்டி
''வேளை வரும்போது உண்மையைச் சொல்வேன்!''
''வேளை வரும்போது உண்மையைச் சொல்வேன்!'' -சில்க் ஸ்மிதா கடைசி பேட்டி
சில்க் ஸ்மிதா கடைசி பேட்டி
''வேளை வரும்போது உண்மையைச் சொல்வேன்!'' -சில்க் ஸ்மிதா கடைசி பேட்டி
''வேளை வரும்போது உண்மையைச் சொல்வேன்!'' -சில்க் ஸ்மிதா கடைசி பேட்டி
''வேளை வரும்போது உண்மையைச் சொல்வேன்!'' -சில்க் ஸ்மிதா கடைசி பேட்டி

யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும் - இரண்டே வாரத்தில் அவர் அப்படி ஒரு பயங்கரமான இறுதி முடிவு எடுப்பார் என்று!

செப்டம்பர் மாதம் 9-ம் தேதி... சென்னை, பிரகாஷ் ஸ்டுடியோ, 'பள்ளிவாதில்கல் தொம் மிச்சன்' மலையாளப் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு. வழக்கமாகத் தெலுங்கு நிறைந்த கொச்சைத் தமிழிலேயே பேசும் சில்க் ஸ்மிதா அன்று சரளமான ஆங்கிலத்தில் நம்மிடம் பேசினார்.

''இப்போதெல்லாம் அடிக்கடி நீண்ட கார் பயணம். சமீபத்தில் மைசூரிலிருந்து சென்னை, இங்கே ஒரு நாள் சூட்டிங். மறுபடியும் பெங் களூர், அங்கிருந்து பாண்டிச்சேரி. அங்கே மலேஷியா வாசுதேவன் சாருடன் சேர்ந்து ஒரு கலை நிகழ்ச்சி. சென்னை வந்தேன். பிறகு, மைசூர், பெங்களூர் - மறுபடி யும், இங்கே படப்பிடிப்பு. இன்று கூடப் படப்பிடிப்பு முடித்து விட்டு, ஆந்திரா போகிறேன். இந்த மாதக் கடைசியில்தான் ஒரு வாரம் ஓய்வெடுக்க வேண்டும். அப்புறம் சிங்கப்பூர், மலேஷியா ஸ்டார் நைட் என்று தீபாவளி வரை டைட் ஷெட்யூல்!''

அந்தச் சமயத்தில்கூடத் தாடிக்காரர் பேச்சு வந்தது.

''எத்தனை வருஷம்தான் தாடிக்கார டாக்டர் ராதாகிருஷ் ணன் பற்றி எதுவுமே சொல்லா மல் இருப்பீர்கள்? அவர் மக னுக்கு நீங்கள் சினிமா சான்ஸ் வாங்கிக் கொடுக்கிறீர்களாமே!''

லேசாகச் சிரித்தார் சில்க் ஸ்மிதா. ''வேளை வரும்போது உண்மையைச் சொல்வேன். நான் ஏற்கெனவே சொன்னபடி, மதர் தெரஸா மாதிரி பொதுநலச் சேவை செய்யவேண்டும் என்பது என் லட்சியம். அவர் (டாக்டர் ராதாகிருஷ்ணன்) மகன் ராம் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர். 'பார்வைகள்' என்ற டி.வி. சீரியலில்கூட நடித்திருக்கிறார். என் திருமணம் குறித்து விரைவில் நான் அறிவிப்பேன்!''

''நடிக்கத் தொடங்கியது முதல் உடம்பை ஒரே சீராக வைத்திருக்கிறீர்களே... என்ன ரகசியம்?''

''எங்கள் வீடே ஒரு மினி ஹெல்த் கிளப். அவ்வளவு உடற்பயிற்சி சாதனங்கள் உள்ளன. ஆனால், நான் எந்தப் பயிற்சியும் செய்வதில்லை. என் உடல் எடை ஏறாதபடி உணவுக் கட்டுப்பாடு கடைப்பிடிக்கிறேன். பெரும்பாலும் பிரேக்ஃபாஸ்ட் கிடையாது. மதியம் ஒருவேளை அரிசிச் சாதம், அசைவ உணவு. சிக்கன் கொஞ்சம் வைத்துச் சாப்பிடுவேன். அதுவும் திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் சைவச் சாப்பாடு. இரவு பிஸ்கட் மட்டும் சாப்பிடுவேன்! எனது உணவில் கட்டாயமாக இருக்க வேண்டியது வெஜிட பிள் சாலட்!''

''ஓய்வு நேரத்தை எப்படிக் கழிக்கிறீர்கள்?''

''என் நன்றியுள்ள நண்பர்கள் என் நாய்கள்தான். ஆறு நாய்களில் ஒன்றான பாபு இறந்து விட்டான். அவன் இறந்த அதிர்ச்சியில் அவன் ஜோடியான பெண் நாயும் இறந்து விட்டது. நான் இரண்டு நாட்கள் சாப்பிடவில்லை. அழுகையே வந்துவிட்டது!''

- அதுதான் 'சில்க்'கை நாம் கடைசியாகப் பார்த்தது.

''வேளை வரும்போது உண்மையைச் சொல்வேன்!'' -சில்க் ஸ்மிதா கடைசி பேட்டி

சில்க் ஸ்மிதாவுடன் கடைசியாகப் பேசிய சிலரைச் சந்தித்தோம்...

நரசம்மா (தாய்):

''என் கணவரின் சொந்த அக்கா பெண் அன்னபூர்ணியிடம்தான் சின்ன வயசுல ஸ்மிதா வளர்ந்தா! கல்யாணம் ஆகிற வயசுல எனக்குத் தெரியாமலேயே அந்தம்மா அவளை மெட்ராசுக்குக் கூட்டிக்கிட்டு வந்துட்டாங்க. இங்கே வந்து அவ பெரிய நடிகையான பிறகு தான் அந்த விஷயம் எனக்குத் தெரிஞ்சுது. ரொம்ப அவசியம் இருந்தா தவிர, அவளைப் பார்க்க நான் மெட்ராஸ் வர்றதில்லை. இந்த மாசம்தான் பெங்களூர்ல நடந்த படப்பிடிப்புக்கு ஸ்மிதாகூடப் போய் சேர்ந்தாப்பல 15 நாள் தங்கியி ருந்தேன். போன 22-ம் தேதிதான் என்னைச் சொந்த ஊருக்கு அனுப்பி வெச்சா. ரயில்ல இறங்கி வீட்டில கால் வெச் சேன். அவ செத்துப்போயிட் டதா தந்தி வந்தது!''

''வேளை வரும்போது உண்மையைச் சொல்வேன்!'' -சில்க் ஸ்மிதா கடைசி பேட்டி

டாக்டர் ராதாகிருஷ்ணன் (சில்க் ஸ்மிதாவுடன் வாழ்க்கை நடத்தியவர்):

''அவளுக்குக் குழந்தை ஆசை அதிகமாக இருந்தது. 'சீக்கிரம் கல்யாணம் பண்ணிக் குவோம்'னு வற்புறுத்தினா. 'வேணாம்! இமேஜ் போயிடும். நடிக்க முடியாமல் ஆகிவிடும். இரண்டு வருடம் போகட்டும்'னு சொன்னேன். போன 21-ம் தேதி அவங்க அம்மா, என் பேத்தி, வீட்டு வேலைக்காரி எல்லாரையும் வண்டலூர் ஜூவுக்குக் கூட்டிட்டுப் போய் வந்தா!''

சிரிகாகுளம் ராமகிருஷ் ணன் (ஸ்மிதா வீட்டில் வேலை செய்பவர்):

''அவங்களுக்கு 'ட்ரிங்க்ஸ்' பழக்கமெல்லாம் கிடையாது. பிளேன்ல பிராந்தி, விஸ்கி பாட்டில் சாம்பிளுக்கு சின் னதா ஃப்ரீயா கொடுப்பாங்க. அதைத்தான் ஷோகேசுக்குள் அலங்காரத்துக்கு அடுக்கி வெச்சிருந்தாங்க. இடுப்பு பெரி சாகாமல் இருக்கப் போடற பெல்ட்டை அன்னிக்கும் போட் டிருந்தாங்க. அதை மறைக் கத்தான் அன்னிக்கு சேலையைச் சுற்றி இருந்தாங்க. அந்தச் சேலைதான் தூக்குல தொங்க வும் உபயோகப்பட்டிருக்கு!''

சில்க் ஸ்மிதா கடைசியாகச் சென்றது, எழும்பூரில் சிஸன்ஸ் காம்ப்ளெக்ஸில் உள்ள பியூட்டி பார்லருக்குதான்.

''மூணு வருஷமா இங்கதான் வந்துட்டிருந்தாங்க. பொதுவா டிப்ஸ் தரமாட்டாங்க. கடை சியா போன வாரம் வந்தப்ப இங்கே வேலை செய்யற எல் லோருக்கும் ஆளுக்கு 50 ரூபாய் கொடுத்துட்டுப் போனாங்க!'' என்றார் அங்கே வேலை செய்யும் ஒரு பெண்.

''வேளை வரும்போது உண்மையைச் சொல்வேன்!'' -சில்க் ஸ்மிதா கடைசி பேட்டி
-கண்பத், செல்லா
''வேளை வரும்போது உண்மையைச் சொல்வேன்!'' -சில்க் ஸ்மிதா கடைசி பேட்டி
                            
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு