பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்
விகடன் பொக்கிஷம்
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்
'சீனத்தர் ஆய்விடுவாரோ!'
தலையங்கம்
தலையங்கம்

ண்மையில் இரண்டு ஒற்றர்களை நம் அரசாங்கம் கைது செய்தது. அதில் ஒருவன் சீனத்தைச் சேர்ந்தவன். மற்றொருவன் மானத்தை விற்றவன். இவர்கள் கையிலிருந்து 25 ஆயிரம் ரூபாயும் இந்தியா-சீனா தேசப் படங்களும் கிடைத்தனவாம்.

பணத்தைக் கொடுத்து உளவு சேகரிக்கும் பண்பற்ற செயலை இதில் பார்க்கிறோம்.

ராவண சந்நியாசி சீதையைத் தூக்க வந்தது போல், சமர்க்களத்தில் சந்நியாசி வேஷத்தில் வந்தார்களாம் சீனர்கள். 'புத்தம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி' என்று நாமாவளி பாடிக்கொண்டே புத்த பிட்சுக்கள் கூட்டம் ஒன்று மலை மேலிருந்து வரிசையாக இறங்கி வந்ததாம். அவர்கள் அணிந்திருந்த துவர் ஆடைகளையும், துறவிக் கோலத்தையும் பார்த்து நம் ஜவான்கள், ''யாரோ பாவம் துறவிகள், யுத்த அபாயத்திற்கு அஞ்சி ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு மடத்தையே காலி செய்துகொண்டு போகிறார்கள்'' என்று எண்ணி அவர்களைப் போக விட்டிருக்கிறார்கள். ஆனால், வந்தவர்கள் அத்தனை பேரும் ஆஷாடபூதிகள். முப்பது கெஜம் அருகில் வந்ததும், காவித் துணியில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கிகளை எடுத்து நம் வீரர்களைத் தாக்கினார்களாம் அந்தப் போலித் துறவிகள்.

ஆனால், அவர்கள் வஞ்சகம் பலிக்கவில்லை. அந்தக் கபட சந்நியாசிக் கூட்டத்தையே காலதேவன் கையில் ஒப்படைத்தார்கள் நம்மவர்கள்.

நமது ஜமேதார் ஒருவர் தமது வீரர்களுடன் மலைப் பாதையில் வழி தவறி, நான்கு நாள் பட்டினியோடு வந்தார். அப்படித் தவித்து வரும்போது, எதிரில் ஒரு புல்வெளியில் பல இந்தியச் சிப்பாய்கள் அமர்ந்திருப்பதைக் கண்டார். அன்னையைக் கண்ட குழந்தை ஆவலுடன் ஓடுவதுபோல அவர்களை நோக்கி ஓடினார். அந்தோ பரிதாபம்! அன்புக் கரங்களுக்குப் பதிலாக ஆயுதங்கள் அவரை வரவேற்றன! ஏன்? அவர்கள் அத்தனை பேரும் வஞ்சகச் சீனர்கள்! அவர்கள் அணிந்து இருந்ததோ இறந்த இந்திய வீரர்களிடமிருந்து திருடப்பட்ட உடைகள்!

இவை மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ ஈனச் செயல்கள்!

சீனன் வஞ்சகக்காரன்; அவன் ஒரு காலத்தில் இவ்வாறு ஈனத்தனமாக நடப்பான் என்பதை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே அறிந்துதான் அமரகவி பாரதி இப்படிப் பாடினாரோ?

''ஈனப் புலையர்களேனும் - அவர்
எம்முடன் வாழ்ந்து இங்கு இருப்பவர் அன்றோ
சீனத்தர் ஆய்விடுவாரோ?''

 
தலையங்கம்
தலையங்கம்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு