Published:Updated:

ஆகா அன்னி! + ஒரு நடிகையின் உண்ணாவிரதம்!

ஆகா அன்னி! + ஒரு நடிகையின் உண்ணாவிரதம்!

பிரீமியம் ஸ்டோரி
ஆகா அன்னி! + ஒரு நடிகையின் உண்ணாவிரதம்!
விகடன் பொக்கிஷம்
ஆகா அன்னி! + ஒரு நடிகையின் உண்ணாவிரதம்!
ஆகா அன்னி! + ஒரு நடிகையின் உண்ணாவிரதம்!
ஆகா அன்னி! + ஒரு நடிகையின் உண்ணாவிரதம்!
ஆகா அன்னி! + ஒரு நடிகையின் உண்ணாவிரதம்!
ஆகா அன்னி! + ஒரு நடிகையின் உண்ணாவிரதம்!
ஆகா அன்னி! + ஒரு நடிகையின் உண்ணாவிரதம்!

ஆகா அன்னி!

சென்னை கோகலே ஹாலில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் அன்னிபெஸன்ட் அம்மையார் பேச எழுந்தபோது, அவரைப் பேச விடாமல் சபையோர் ஆரவாரம் செய்தார்கள். அந்நாளில் அரசியல் ஆவேசம் அம்மையாருக்கு விரோதமாகத் திரும்பியிருந்தது. ஆனால், அந்த நிகழ்ச்சியைக் கண்டித்து, அன்னிபெஸன்ட் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை; எழுதவும் இல்லை. எந்த ஹாலில் பெஸன்ட் அம்மையார் அப்படி அவமதிக்கப் பெற்றாரோ, அதே மண்டபம் அவருடைய நன்கொடைதான் என்றும், பரிபூரண சுதந்திரத்துடன் யாரும் பேசுவதற்கான ஓர் இடமாக இருக்க வேண்டுமென்றே அவர் அதை வழங்கியிருந்தார் என்பதும் பின்னர்தான் தெரிய வந்தது!

(19-11-61)


ஆகா அன்னி! + ஒரு நடிகையின் உண்ணாவிரதம்!
ஆகா அன்னி! + ஒரு நடிகையின் உண்ணாவிரதம்!
ஒரு நடிகையின் உண்ணாவிரதம்!

பம்பாயில் மாற்று இடத்துக்கு ஏற்பாடு செய்து கொடுக்காமல், சஞ்சய் நகரில் ஏழை மக்களின் குடிசைகள் அப்புறப்படுத்தப்பட்டன. கொதித்தெழுந்தார் ஷபனா. மனிதாபிமானமற்ற அதிகாரவர்க்கத்தின் கவனத்தைக் கவர, உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். நிலைமை மோசமடைவதற்குள் அரசு விழித்துக் கொண்டது. 'மாற்று இடத்துக்கு ஏற்பாடு செய்கிறோம்' என்று வாக்குறுதி கொடுத்ததோடு, அமைச்சர் வி.சுப்ரமணியம் நேரில் வந்து ஷபனாவுக்கு 'ஸ்வீட்' கொடுக்க... நான்கு நாள் உண்ணாவிரதம் நல்லபடியாக முடிந்தது!

இந்தப் போராட்டத்தில், ஷபனாவுக்கு வலக்கரமாக இருந்து செயல் பட்டவர் சசிகபூர்.

(1-6-86)


ஆகா அன்னி! + ஒரு நடிகையின் உண்ணாவிரதம்!
உயிர் கொடுத்த வயலின்!

நோயுடன் படுக்கையில் படுத்திருந்தார் தந்தை. அவருக்குப் பக்கவாதம். பத்துப் பதினைந்து நாட்களாக நினைவு தப்பி விட்டது. மூச்சுப் பேச்சில்லை. ''சிகிச்சைக்கு மிஞ்சிவிட்டது.. உங்கப்பாவுக்குப் பிடித்த பைரவி ராகத்தை அவர் பக்கத்திலிருந்து வாசித்துக் கொண்டிரு'' என்றார் குடும்ப நண்பரும், டாக்டருமான கணபதி சுப்பிரமணியம்.

கண்ணீர் சோர, தந்தையின் தலைப்புறத்திலிருந்து அல்லும் பகலும் வயலினில் பைரவி ராகத்தை வாசித்துக் கொண்டிருந்தார் மகன்.

ஒன்று, இரண்டு... மூன்று... நான்காம் நாள், தந்தையின் கண்களிலிருந்து நீர் சுரந்தது; கண்கள் திறந்தன; கரங்கள் அசைந்து 'இன்னும் வாசி' என்று சாடை காட்டின. மனம் புல்லரிக்க உற்சாகப் பெருக்குடன் வாசித்தார் மகன். ஒரு வாரத்தில் குணமாகி, எழுந்து உட்கார்ந்து விட்டார் தந்தை. அதற்குப் பின் ஐந்து வருடங்கள் உயிரோடிருந்தார்.

தந்தைக்கு உயிர்கொடுத்த அந்த மகன் - குன்னக்குடி வைத்தியநாதன்.

(20-7-69)


மனிதரில் ஒரு தேவர்!

சில மாதங்களுக்கு முன்பு விகடனில் கரப்பான்பூச்சி, பல்லி, ஓணான் ஆகிய ஜந்துக்கள் தேவரிடம் போய் 'சான்ஸ்' கேட்பதாக நகைச்சுவைத் துணுக்கு ஒன்று வெளியாகியிருந்தது. பின்னர் ஒரு நாள் அந்தத் துணுக்கை எழுதியவரே தேவரைச் சந்திக்க நேர்ந்தது. ''நல்லா இருந்ததுப்பா.. ரசித்தேன்!'' என்று மனம் விட்டுப் பாராட்டிய தேவர், அந்தத் துணுக்கைப் பற்றித் தம்மைச் சுற்றியிருந்தவர்களிடமும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்து போனார்.

ஆகா அன்னி! + ஒரு நடிகையின் உண்ணாவிரதம்!

அவர் தயாரித்த தமிழ்ப் படங்களிலெல்லாம் ஹிட்ச்காக் பாணியில் தேவரும் எங்கேயாவது தலைகாட்டிவிட்டுப் போவார். கடைசியாக, 'ஆட்டுக்கார அலமேலு'வில் அவர் பேசிய வசனம்: ''இன்னைக்கு சஷ்டி விரதம். நான் சாப்பிடமாட்டேன்.''

சஷ்டி-முருகனுக்குகந்த விசாக நட்சத்திரம்-அன்று, மனிதர்களில் ஒரு தேவராக விளங்கிய அவர், தேவர்களில் ஒருவரானார்.

(17-9-78)

 
ஆகா அன்னி! + ஒரு நடிகையின் உண்ணாவிரதம்!
ஆகா அன்னி! + ஒரு நடிகையின் உண்ணாவிரதம்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு