Published:Updated:

உலகமே இவரின் கல்விக்கூடம்!

உலகமே இவரின் கல்விக்கூடம்!

பிரீமியம் ஸ்டோரி
உலகமே இவரின் கல்விக்கூடம்!
விகடன் பொக்கிஷம்
உலகமே இவரின் கல்விக்கூடம்!
உலகமே இவரின் கல்விக்கூடம்!
உலகமே இவரின் கல்விக்கூடம்!
உலகமே இவரின் கல்விக்கூடம்!
உலகமே இவரின் கல்விக்கூடம்!
உலகமே இவரின் கல்விக்கூடம்!
உலகமே இவரின் கல்விக்கூடம்!

ரந்த உலகமே பெரியார் ஈ.வெ.ரா-வின் கல்விக்கூடமாக அமைந்தது. ஏழை மக்களே அவரைப் பயிற்றுவித்த ஆசிரியர்கள்.

''நான் மூட்டை தூக்கும் போது, அதன் பாரத்தினால் கஷ் டப்பட்டிருப்பேனேயழிய, மூட்டை தூக்குவது அவமா னம் என்று ஒருபோதும் கஷ்டப்பட்டதில்லை'' என்று அவர் கூறியிருக்கிறார்.

''ஆப்பிள் மிகச் சொற்ப விலையென்றே வெகு நாள் கருதிக்கொண்டிருந்தேன். அதன் உண்மை விலையை அறிந்தது முதல், இனாமாகக் கிடைத்தால்கூட என்னால் ஆப்பிள் பழத்தைச் சாப்பிட முடிவதே இல்லை!''- இது அவரது சிக்கனம்.
''வருவாய் போதாமல் இருப் பதற்கும், கடன்காரர்களாய் இருப்பதற்கும் காரணம், நமது பலவீனத்தின் பயனான பேரா சையும், அவசரமுமே ஆகும்!'' - இது அவரது அனுபவ அறிவு.

ஒரு சமயம் மஞ்சக்குடியில் பெரியார் பேசினார். கூட்டத்தில் ஒருவர் முன் வரிசையில் அமர்ந்து, பெரியார் பேசப் பேச பல கேள்விகளை எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தார். இது கூட்டத்தில் பலருக்குக் கோபத்தை விளைவித்தது. இதற்கிடையே கேள்வி எழுதிக் கொடுத்தவரின் பென்சில் முனை உடைந்துவிட்டது. உடனே பெரியார் தன் பேனாவை அவருக்குக் கொடுத்து எழுதச் சொன்னார். பெரியாரின் இந்தப் பண்பை வியந்த அவர், கூட்டம் முடிந்ததும் தன் செய லுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

பெரியாரின் வாதத் திறமை அலாதியானது. பாமர மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் விளக்கம் தருவார். காங்கிரசைப் பெரியார் ஆத ரித்து வந்த நேரம். ரூபாய் நோட்டுக்கள் அடித்துக் கொண்டே போவதால் பண வீக்கம் ஏற்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. பெரியார் அதற்குப் பதில் சொன்னார்: ''நோட்டு அடிக்காமல் என்ன செய்வார் கள்? ஈரோட்டிலிருந்து சென் னைக்குப் பத்தாயிரம் ரூபாய் கொண்டு செல்லவேண்டும் என்றால், நோட்டுக்களாக இருந்தால் சுலபமாக இருக்கிறது. மாறாகப் பணம் முழுவதும் நாணயங்களாக இருந்தால் 'வேக'னில்தான் போட்டு எடுத்துப் போக வேண்டி வரும். அல்லது நாணயங்களைக் கழுதைகளைக் கொண்டு சுமக் கச் செய்ய வேண்டிவரும்'' என்றார்.

 
உலகமே இவரின் கல்விக்கூடம்!
-டாக்டர் இரா. சனார்த்தனம்
உலகமே இவரின் கல்விக்கூடம்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு