Published:Updated:

சினிமா விமர்சனம்: கிழக்கே போகும் ரயில்

சினிமா விமர்சனம்: கிழக்கே போகும் ரயில்

பிரீமியம் ஸ்டோரி

07-01-09
விகடன் பொக்கிஷம்
சினிமா விமர்சனம்: கிழக்கே போகும் ரயில்
சினிமா விமர்சனம்: கிழக்கே போகும் ரயில்
 
சினிமா விமர்சனம்: கிழக்கே போகும் ரயில்
சினிமா விமர்சனம்: கிழக்கே போகும் ரயில்
சினிமா விமர்சனம்: கிழக்கே போகும் ரயில்

'பதினாறு வயதினிலே!' யூனிட்டிலிருந்து வந்திருக்கும் படம் என்பதால், நிறைய எதிர்பார்ப்புகளுடன் தியேட்டருக்குப் போகிறோம். பதினாறில் இருந்த முழுமை ரயிலில் இல்லை. மயிலு, மயிலு தான்!

முதல் பாதியில் கதை என்று பிரமாதமாக எதுவும் இல்லை. பாஞ்சாலி - பரஞ்சோதி காதல் மலர்வதை எத்தனை நேரம் தான் பார்த்துக்கொண்டிருக்க முடியும்? ரயிலின் வேகம் பாசஞ்சரை விடக் குறை வாக இருக்கிறது.

கடைசியில் அந்த 'அடல்ட்ஸ் ஒன்லி' ஐதிகத்தை விரசமில்லாமல் படமாக்கியிருந்தாலும் ஊரைச் சுற்றி ஓட வைப்பதில் வீண்கால விரயம் செய்யப்பட்டிருப்பதால் தியேட்டரில் கிண்டல் கலந்த கூச்சலுக்கு இடம் தருகிறது.

முழுக்க முழுக்கப் புதுமுகங்களையே போடுவது துணிச்சல்தான். ஆனால், வசன உச்சரிப்பில் போதிய அழுத்தம் இல்லாததால், படத்தோடு நம்மை ஐக்கியப்படுத்திக் கொள்ள முடியவில்லை. கிளைமாக்ஸ் உருவாகும் முக்கியமான கட்டத்தில், ஒரு காரக்டர் லொட லொடவென்று கோயில் மணி அடிப்பதுபோல் ஏதோ பேசிவிட்டுப் போகிறார். வசனத்தை என்ன அர்த்தத்தில் பேசுகிறோம் என்று கூடத்தெரியாமல், ''ஒரு வயசுப்பெண்ணை இப்படியா?'' என்று பேசுவதற்குப் பதிலாக, ''ஒருவயசுப் பெண்ணை இப்படியா?'' என்று பேசுகிறார். அர்த்தமே அலங்கோலமாகி விடுகிறதே!

சினிமா விமர்சனம்: கிழக்கே போகும் ரயில்

பரஞ்சோதியின் அப்பா வாக வரும் ஜி.சீனிவாசன் மானஸ்தராக, கடமைப் பொறுப் புள்ள ஏழை அப்பாவாக, 'என் னைப் போல் நடிக்க யாராவது உண்டா' என்று கேட்கிற மாதிரி உணர்ச்சிகளைத் தேக்கி வெகு லாகவமாக வெளியிடுகிறார். இந்தப் படத்தில் நடிப்பைப் பொறுத்தவரை இவரே மனத் தில் நிலைத்து நிற்கிறார்.

பாஞ்சாலியை விவரம் தெரிந்த பெண்ணாக மாற்றும் ஒரு சின்னச் சம்பவம் - பரஞ்சோதி அவளைக் கைகளால் தூக்கி இறக்கிவிடும் காட்சி. ரோஜாவை முகர்கிற மாதிரி நளினமாக, துல்லியமாக இந்தக் காட்சி படமாக்கப்பட்டிருக் கிறது.

மகனுக்கு மொட்டை அடித்து கரும்புள்ளி செம்புள்ளியுடன் கழுதை மேல் ஊர்வலம் வரச் செய்த அவமானத்தைக் தாங்கிக்கொள்ள முடியாத மருதை (அப்பா), தண்ணீரில் நின்றபடி சவரக் கத்தியால் தன்னை அழித்துக்கொள்வதை, நீரில் பீரிட்டுப் படரும் ரத்தத்தின் மூலம் காட்டியிருப்பது இயல்பான டைரக்ஷன்!

பாஞ்சாலியைப் பெண் பார்க்க வந்தவர் 'பலகாரம் நன்றாக இருக்கிறது' என்றவாறு நிறைவோடு கை கழுவ வந்த இடத்தில், பாஞ்சாலி தன் எண்ணத்தைச் சொல்லி அவரை நெகிழ வைப்பதும், அவர் தன் ஆசையைக் கை கழுவிவிட்டுச் செல்வதும் அழுத்தமான அம்சம். இங்கு டைரக்டர் அழகாகத் தன் கடமையைச் செய்திருக்கிறார்.

சின்னஞ்சிறு பாத்திரங்களுக்கும் ஜீவன் அளித்திருப்பது பாரதிராஜாவின் பாணி என்று பாராட்டலாம். சில முறை தலை காட்டும் கிராமக் குழந்தைகளைக் கூட மறக்க முடியவில்லை. 'என்னண்ணே, கெட்ட வார்த்தையெல் லாம் சொல்றீங்க?' என்று குழந்தைகள் முனகுவது இன்னும் செவியில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.

சினிமா விமர்சனம்: கிழக்கே போகும் ரயில்

படத்தின் முடிவு எப்படி இருக்கும் என்று துடிப்பைத் தூண்டிவிடும் அளவுக்குக் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. எந்த விநாடியிலும் பாஞ்சாலிக்கும் பரஞ்சோதிக்கும் கெட்ட முடிவு ஏற்படக்கூடும் என்ற துடிப்புக்கு இடையே அவர்களைப் பத்திரமாக கிழக்கே போகும் ரயிலில் ஏற்றிவிட்டுப் பச்சைக் கொடியைக் காட்டுகிறார் பாரதிராஜா. யதார்த்தமான நல்ல முடிவு!

 
சினிமா விமர்சனம்: கிழக்கே போகும் ரயில்
சினிமா விமர்சனம்: கிழக்கே போகும் ரயில்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு