Published:Updated:

சினிமா விமர்சனம்: அலைகள் ஓய்வதில்லை!

சினிமா விமர்சனம்: அலைகள் ஓய்வதில்லை!

சினிமா விமர்சனம்: அலைகள் ஓய்வதில்லை!

சினிமா விமர்சனம்: அலைகள் ஓய்வதில்லை!

Published:Updated:

விகடன் பொக்கிஷம்
சினிமா விமர்சனம்: அலைகள் ஓய்வதில்லை!
சினிமா விமர்சனம்: அலைகள் ஓய்வதில்லை!
 
சினிமா விமர்சனம்: அலைகள் ஓய்வதில்லை!
சினிமா விமர்சனம்: அலைகள் ஓய்வதில்லை!
சினிமா விமர்சனம்: அலைகள் ஓய்வதில்லை!
சினிமா விமர்சனம்: அலைகள் ஓய்வதில்லை!
சினிமா விமர்சனம்: அலைகள் ஓய்வதில்லை!

மாறுபட்ட மதத்தைச் சேர்ந்த டீன்-ஏஜ் கள் காதலிப்பது; அதை உற்றார், உறவினர்... ஏன், ஊரே எதிர்ப்பது என்னும் பழைய அலைகளை வீசவிட்டு, அதைத் தொடர்ந்து ''நான் இவர்களைக் கோழையாக்கிக் கொல்லப் போவதில்லை. ஊரை விட்டு ஓடச் செய்யப் போவதில்லை. துணிச்சலோடு எதிர்த்து நிற்கச் செய்யப்போகிறேன்'' என்ற புதிய அலையை வீச விட்டிருக்கிறார் பாரதிராஜா.

கார்த்திக், ராதா - வயதும் உருவமும் தரும் பூரண ஒத்துழைப்புடன் அறிமுகமாகியிருக்கும் இரண்டு புதிய அலைகள். இவர்கள் பெயரைச் சொல்லும் கொக்கரக்கோ சத்தம், அடிக்கிற அலையோட சத்தம், துடிக்கிற நெஞ்சோட சத்தம் இவற்றோடு நமது பாராட்டுச் சத்தமும் சேரட்டும்!

சங்கீதக் குடும்பத்தில் பிறந்தவரே சரளி வரிசையில் சறுக்கி விழுவது மாதிரி, மேரியின் அண்ணன் பாத்திரப் படைப்பில் பாரதிராஜாவே தடுக்கி விழுந்திருக்கிறார். மேரியின் காதலுக்கு அண்ணியின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, பெண்கள் விஷயத்தில் சபலபுத்தி உள்ளவனாகச் சித்திரிக்கப்படாத அண்ணன் திடீரென்று வேலைக்காரியைக் கெடுப்ப தாகக் காட்டுவது ஒப்புக்கொள்ளக்கூடியதாகவே அமையவில்லை.

இளையராஜாவின் இசையமைப்பில் ஒலிக்கும் 'ஆயிரம் தாமரை மொட்டுகளே...' பாடல் நான்கு ஜோடி நாயனங்களின் கொட்டுமேளத்துக்குச் சமம்! 'அடுத்த படத்துக்கு ஏதாவது மிச்சம் மீதி வைத்திருப்பாரா' என்று சந்தேகிக்கும் அளவுக்குப் பின்னணி இசையில் தன் முழுத் திறனைக் காட்டிப் பின்னி எடுத்துவிட்டார். இடையிடையே 'ஸரி ஸரி... கம கம...' என்று கோரஸில் ஸ்வரம் பாடுவது அமிர்தம்.

சினிமா விமர்சனம்: அலைகள் ஓய்வதில்லை!

''ஆம்பளை இல்லாத வீட்டிலே ஆளுக்கு ஆள் வந்து மிரட்டறீங்களே'' என்று புலம்பும் விச்சுவின் தாயும், கணவனின் வழி தவறுதலால் கூனிக் குறுகும் மேரியின் அண்ணியும் புடவைத் தலைப்புகளை ஈரமாக்கிவிடும் உருக்கமான இரண்டு உயிர்ச் சித்திரங்கள். ஒரு குறை... அருமை மகனைப் பாதுகாப் பாக வெளியே துரத்திவிட்ட பின் வரும் ஷாட்டுகளில் விச்சு வின் தாயும், மேரியின் அண்ணியும் இறந்துவிட்டது போல ஒரு பிரமை ஏற்படு கிறது. இந்தக் குழப்பம் தேவை தானா?

அதே போல், ஆரம்பத்தி லிருந்தே காதலர்களின் கற் பனைகளையெல்லாம் காட்சி களாகக் காட்டிவிடுவதால், நண் பர்கள் புடைசூழ மேளதாளத் துடன் விச்சு பெண் கேட்க வருவதையும் ஒரு கற்பனைக் காட்சியாகவே எடுத்துக் கொள் கிறோம். இதனால், சீரியஸாக இருக்கவேண்டிய இந்தக் காட்சி நகைப்புக்கு இடம் கொடுத்து விடுகிறது. இது கற்பனையல்ல, நிஜம்தான் என்று புரிவதற்கே சிறிது நேரம் ஆகிறது!

சினிமா விமர்சனம்: அலைகள் ஓய்வதில்லை!

''மனுஷங்க இருக்கிற இடத் துக்கு நாங்க போகிறோம்'' என்று ஒரே வார்த்தையில் வேலைக்காரன் சாட்டையடி கொடுப்பதும்... ''பணத்தை எடை போட்டுக் கல்-யாணம் செய்துக்கிட்ட உங்க ளுக்கு, மனசைப் புரிஞ்சுக்கிட்டு நாங்க காதலிப்பது பைத்தியக்காரத் தனமாகவே தோணும்'' என்று மேரி வீசும் சொல்லம்பும் மணி வண்ணனின் பேனா தந்திருக்கும் மணியான வசனங்கள். ஆனால், அந்த ஆற்றங்கரைக் காட்சியில், ''துணியைக் கையில் எடுத்துத்தான் பாரேன்'' என்று நாகரிகமாக எழுதியிருக்க வேண்டிய வரியில், வேண்டுமென்றே இரட்டை அர்த்-தம் தொனிக்கும்படி தரக் குறை-வாக எழுதி விசிலை வரவழைக்க வேண்டுமா? இதனாலா படம் ஓடி- விடப்போகிறது? படத்தின் தரத்-தையே ஒரு படி இறக்கும் இந்த வசனம் வெட்டி எறியப்பட வேண்- டாமா?

முடிவுக் காட்சிக்கு வருவோம்.காதலுக்கு சாதி மத பேதமில்லை என்று அன்று கண்ணதாசன் கவிதையாகப் பாடியதை இன்று காவியமாக்கிக் காட்டியிருக்கிறார் டைரக்டர்.

மதத்தைக் காரணம் காட்டிக் காதலைக் கட்டுப்படுத்தவோ காத லர்களைப் பிரிக்கவோ நினைத் தால்... இப்படித்தான் சிலுவைகள் கழற்றி எறியப்படும்; பூணூல்கள் அறுத்தெறியப்படும் என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றித் துணிச்ச லாகவும், பாமரருக்கும் புரியும்படி அழுத்தமாகவும் சொல்லி, நெடி துயர்ந்து நிற்கிறார் பாரதிராஜா. அவருக்கு ஆளுயர மாலை போடு-வோம்!

சினிமா விமர்சனம்: அலைகள் ஓய்வதில்லை!

அதற்குப் பின்பு அதை உறுதிப் படுத்த ஒரு கார்டு வேறு எதற்கு? சொன்னது புரியுமோ, புரியாதோ... மக்கள் அதை ஏற்பார்களோ, மாட்டார்களோ என்று தன்னம் பிக்கையில்லாமல் தடுமாறிய படியே எடுக்கப்படும் படங்களுக் குத்தான் திரைமறைவில் ஓடி ஒளிய ஒரு விளக்க உரை தேவை.இந்தப் படத்துக்குத் தேவையா?

 
சினிமா விமர்சனம்: அலைகள் ஓய்வதில்லை!
சினிமா விமர்சனம்: அலைகள் ஓய்வதில்லை!