Published:Updated:

சினிமா விமர்சனம்: பசி

சினிமா விமர்சனம்: பசி

சினிமா விமர்சனம்: பசி

சினிமா விமர்சனம்: பசி

Published:Updated:

விகடன் பொக்கிஷம்
சினிமா விமர்சனம்: பசி
சினிமா விமர்சனம்: பசி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 
சினிமா விமர்சனம்
சினிமா விமர்சனம்: பசி
சினிமா விமர்சனம்: பசி

'பசி'யில் வரும் பாத் திரங்கள் எல்லோருமே நல்லவர்கள். யாருக்குமே எந்தச் சந்தர்ப்பத்திலும் மற்றவர்களைக் கெடுக் கவோ, அழிக்கவோ எண் ணம் தோன்றுவதில்லை. குறிப்பாக, விஜயனின் மனைவியாக வரும் ஜெய பாரதி, கணவனுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுவிட்டி ருக்கிறது என்பது தெரிந்த வுடன் அதை எவ்வளவு மென்மையாகப் புரிந்து கொண்டு, குடும்பத்தில் விழும் அந்தக் கீறலை எத் தனை அழகாகச் சமாளிக் கிறார்! தமிழ்த் திரைக்கு இதெல்லாம் புதுசு.

எண்ணெயையே பார்க்காத தலையைச் சொறிவது, காலைச் சொறிவது, சிம்மாசனம் என்று நினைத்துக்கொண்டு குப்பைத் தொட்டியில் ஏறி உட்கார்ந்து கொள்வது... இப்படிக் காகிதம் பொறுக்குபவர்களின் பல சேஷ்டைகளை ஷோபா நேரில் போய்க் கவனித்து, அதைத் தன் நடிப்பில் சேர்த்துக்கொண்டிருக்கிறார் போலிருக்கிறது! இயற்கையான நடிப்பு. தம்பி-தங்கைகளிடம் அவர் காட்டும் பரிவும், விஜயனால் கைவிடப்பட்டபோது அழுது புலம்பாமல் 'வாழ்ந்து காட்டுவேன்' என்று தன்னம்பிக்கையுடன் அவர் தலை நிமிர்ந்து நிற்பதும் அந்தப் பாத்திரத்துக்கு உயிரூட்டுகின்றன.

இம்மாதிரி வறுமையைச் சித்திரிக்கும் படங்களை வண்ணத்தில் எடுக்கும்போது காட்சிக்குக் காட்சி செயற்கையான பளபளப்பைக் காட்ட முற்படுவது காமிராக் காரர்களுக்கே உரிய ஒரு பலவீனமாகும். 'பசி'யில் அப்படி எதுவும் செய்துவிடாமல்,

சினிமா விமர்சனம்: பசி

வறுமைக்கு முலாம் பூசாமல், காட்சிகளை மிக இயற்கையாக எடுத்துக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரங்கா. 'வெல்டன்!'

'என்னை யாருக்கா வது மொத்தமா கொடுத் துடணும்னுதான் பார்க் கிறேன். ஆனா, சில்ல றையா வித்தாதான் லாபம் கிடைக்கும்னு அம்மா நினைக்கிறா...'

- பட்டாசுச் சரமாக வசனங்களைத் தொடுத் திருக்கிறார் துரை.

படத்தில் வரும் ஒவ் வொரு துணைப் பாத்திர மும்-பாத்திரம் எத்துணை சிறியதாக இருப்பினும் - மிக இயற்கையாக நடித் திருக்கிறார்கள்.

விஜயன் சார், உங்க ளுக்குக் 'குரல்' கொடுத் திருப்பது நீங்களேவா? தயவுசெய்து 'உதிரிப் பூக்கார'ரையே நம்புங் கள். உங்கள் அசல் குரல், உங்களுடைய அசல் நடிப்பைப் பலி வாங்கு கிறதே!

சினிமா விமர்சனம்: பசி

சுருளிராஜனின் காமெடி இந்தக் கதைக் குத் தேவைதானா? இருந்தாலும் இந்த காரெக்டர், நவீன கால பிச்சைக்காரர்களின் சுயரூபத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறது.

குப்பம்மா, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையுடன் தனியாகக் குப்பத்தில் வாழத் தயாராக இருக்கிறாள். எந்தக் கட்டத்திலும் கௌரியின் வாழ்க்கையில் அவள் பங்கு கேட்க வில்லை. பின், எதற்காக அவளை வலுக் கட்டாயமாகச் சாகடிக்க வேண்டும்?

படம் முடியும்போது மூன்று 'கார்டு' போடுகிறார்களே, எதற்கு? அதிலும், 'காமுகனுக்கு காமப் பசி' என்பது அர்த்தமே இல்லாதது. காரணம், இந்தக் கதையைப் பொறுத்தவரையில் விஜயன் காமுகனே இல்லை! நடந்துவிட்ட தவறுக்காக வருத் தப்படும் ஒரு நல்ல மனிதனைத்தான் இந்தப் பாத்திரம் பிரதிபலிக்கிறது. படம் பார்த்து முடிந்த பிறகு பூரண திருப்தி ஏற்படாததற்குக் காரணமே கடைசியில் தரப்படும் தேவையில்லாத இந்த விளக்கக் கார்டுகள்தான்!

'ருசி'யுள்ளவர்கள் ரசிப்பார்கள் 'பசி'யை!

 
சினிமா விமர்சனம்: பசி
- விகடன் விமர்சனக் குழு
சினிமா விமர்சனம்: பசி