Published:Updated:

சுட்ட பிறகு... எம்.ஜி.ஆர் எம்.ஆர்.ராதா சந்திப்பு!

சுட்ட பிறகு... எம்.ஜி.ஆர் எம்.ஆர்.ராதா சந்திப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
##~##
''எ
ம்.ஜி.ஆரும்    எம்.ஆர்ராதா வும் தரையில் உட்கார்ந்து பேசுவது மாதிரியான இந்தக் காட்சி, பெரியார் இறந்த தினத்தில் எடுக்கப்பட்டது. தமிழகத்தின் மிகப் பெரிய சோகம் அது!

சென்னை ராஜாஜி ஹாலுக்கு பெரியாரின் உடல் எடுத்து வரப்படு வது அறிந்து, ராமாவரம் தோட்டத்தில் இருந்து காரில் நாங்களும் புரட்சித் தலைவரும் கிளம்பினோம். நாங்கள் போன அதே நேரத்தில், அப்போதைய முதல்வரான கருணாநிதி தன் மந்திரிசபை சகாக்கள் புடைசூழ

சுட்ட பிறகு... எம்.ஜி.ஆர் எம்.ஆர்.ராதா சந்திப்பு!

அமர்ந்துஇருந்தார். இன்னொரு புறம் காமராஜரும் இருந்தார்.

ஹாலின் இடது புறம் தன் நண்பர்கள் புடைசூழ அமர்ந்திருந்த எம்.ஆர். ராதா, எம்.ஜி.ஆர். வருவதைப் பார்த்த தும், 'என்ன தலைவரே!’ என்று அழைத்தார். 'என்ன ராதாண்ணே...’ என்றபடி அவர் அருகே சென்றார் எம்.ஜி.ஆர்!

எம்.ஜி.ஆரைத் துப்பாக்கியால் சுட்டு விட்டு, அதற்கான சிறைத் தண்டனை அனுபவித்து வந்த பின், அப்போதுதான் முதல்முறையாகச் சந்திக்கிறார் ராதா. அவர்கள் இரு துருவங்களாக இருந்த நேரம்என்பதால், எங்கே சண்டை வெடித்துவிடுமோ என்ற அச்சம் இரு தரப்பிலும் இருந்தது. தயக்கம் தரக்கூடிய ஒரு பனிப் போர் சந்திப்பு அது.

'எதுக்கு அவர்கூட மோதிக்கிட்டு தனிக் கட்சி எல்லாம்..? உங்க மோதல்ல, சந்துல சிந்து பாடி காங்கிரஸ் குறுக்கே வந்துடப் போகுது’ என்ற ரீதியில் ஆரம்பித்துப் பேசிக்கொண்டே போனார் எம்.ஆர். ராதா.

'இல்லல்ல... சில காரணங்களுக்காகத்தான் நான் அரசியல்ல இறங்கி இருக்கேன். என்ன ஆனாலும் சரி, முன்வெச்ச காலைப் பின்வைக்கிறதா இல்லை!’ என உறுதிபடச் சொன்னார் புரட்சித் தலைவர். அந்த 'டாபிக்’கில் மேற்கொண்டு பேச விரும்பாமல், பெரியார்பற்றிப் பேச்சைத் திருப்பினார். அந்தச் சம்பவம் எங்களுக்கு நல்லா ஞாபகம் இருந்தது.

சுட்ட பிறகு... எம்.ஜி.ஆர் எம்.ஆர்.ராதா சந்திப்பு!

1973 டிசம்பர் 23-ம் தேதி, புரட்சித் தலைவரும் நாங்களும் வேலூர் சென்று பெரியா ரைப் பார்த்தோம். பேசவே சிரமமான நிலையில் படுக்கையில் இருந்த பெரியார், 'திடும்’ என 'ராஜாஜி இறந்தது எப்போ?’ என்று கேட்டார். எம்.ஜி.ஆர். 'அதெல்லாம் இப்ப எதுக்கு?’ என்று இழுக்க... 'சொல்லு... அவர் இறந்தது என்ன தேதி?’ என்று குரலை உயர்த்திக் கேட்டார் பெரியார். 'டிசம்பர் 25-ம் தேதி அய்யா!’ என்றதும், 'அப்போ நாளை மறுநாள் முதலாண்டு நினைவு தினம்!’ அர்த்தத்தோடு தலையாட்டிக்கிட்டார் பெரியார். மறுநாள் அதிகாலை பெரியார் உயிர் பிரிந்தது.

இந்தச் சம்பவம் குறித்து ராதாவிடம் இரண்டு மூணு மணி நேரம் பேசினார் தலைவர். இதில், உருக்கமான விஷயம் என்னவென்றால், பெரியார் இறந்த அதே நாள், அதே அதிகாலை நேரத்தில்தான் எம்.ஜி.ஆரும் நம்மைவிட்டுப் பிரிந்தார்'' என்றனர் கே.ஏ.கே - வும் ஹண்டேவும்!

சந்திப்பு: ஜெயந்த், படம்: சுபா சுந்தரம்

சுட்ட பிறகு... எம்.ஜி.ஆர் எம்.ஆர்.ராதா சந்திப்பு!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு