ஸ்பெஷல் -1
Published:Updated:

எங்கள் ஆசிரியர்

எங்கள் ஆசிரியர்

எங்கள் ஆசிரியர்

இந்தி நடிகர் திலீப்குமார்

##~##
பி
ரபல பத்திரிகாசிரியர் பாபு ராவ் படேல் அவர்களின் வீட்டில் தான் முதன்முதலில் நான் வாசன் அவர்களைச் சந்தித்தேன். அப் போது சந்திரலேகா, நிஷான் போன்ற படங்கள் மூலம் புகழ் பெற்றிருந்தார் அவர். வாசன் என்பது, திரை உலகில் ஒரு மகத் தான பெயராகியிருந்தது.

பாபுராவ் என்னை வாசன் அவர்களுடன் உணவருந்தக் கூப் பிட்டிருந்தார். டின்னர் முடிந்த தும், வாசன் என்னிடம் ஒரு 'ஃபைலை’க் கொடுத்து, ''இதில் ஒரு கதை இருக்கிறது. படித்துப் பார்த்து, இதில் எந்தப் பாத்திரத்தை நீங்கள் ஏற்று நடிக்க விரும்புகிறீர்கள் என்று தெரிவியுங்கள்'' என்றார்.

எங்கள் ஆசிரியர்

அது 'இன்ஸானியத்’ என்ற திரைப்படத்தின் கதை. ஒரு கதா நாயகன், ஒரு கதாநாயகி, ஒரு ஸைட் காரெக்டர் மூன்றும் அதில் இருந்தன. சாதாரணமாக என் னைப் போன்ற ஒரு நடிகன், கதா நாயகன் வேஷத்தைத்தான் விரும்பு வான். ஆனால், என்னை அந்த உப பாத்திரம் கவர்ந்தது. மறுநாள், வாசன் அவர்களிடம் இதைச் சொன்னபோது, அவர் சிரித்துக் கொண்டே, தம் பையில் இருந்த ஒரு கவரை எடுத்துப் பிரித்தார். அதில், அந்த உப பாத்திரத்தின் பெயருக்கு முன்னால் என் பெயர் எழுதப்பட்டிருந்தது. ''நீங்கள்தான் இந்த ரோலுக்கு ஏற்றவர் என்பது என் கருத்து. ஆனால், இதைச் சொன்னால், நீங்கள் என்னைத் தவறாக நினைத்துக்கொண்டு விடுவீர்களோ என்று பயந்தே, அப்படிச் சொன்னேன். என் கருத் துடன் நீங்கள் ஒத்துப் போகிறீர்கள். ரொம்பச் சந்தோஷம்!'' என்றார். அன்று ஆரம்பித்த எங்கள் கருத்து ஒற்றுமை, இறுதி வரை இருந்தது. அவரைப் போன்று, தொழிலுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒரு படத் தயாரிப்பாளரை நான் இதுவரை கண்டதே இல்லை.

மெஹ்பூப், பிமல்ராய், வாசன் இவர்களெல்லாம் எப்போதாவது தோன்றும் அரும் பெரும் கலை மலர்கள் என்பது என் கருத்து. திரை உலகுக்கு இவர்களால் ஒரு தனி கௌரவமே கிடைத்தது.

வாசன் என்னிடம் திரைப்படங் கள் தவிர, பல விஷயங்களைப் பற்றிப் பேசி இருக்கிறார். இலக்கி யத்தைப் பற்றிப் பேசுவார்; இதி காசத்தைப் பற்றிப் பேசுவார். 'திரை உலகில் ஜெமினி ஸ்டூடியோ எல்லோருக்கும் ஒரு வழிகாட்டி யாக இருக்கவேண்டும். அதை ஒரு மாபெரும் லட்சிய ஸ்தாபனமாக அமைக்க வேண்டும். அதற்காகச் சில திட்டங்கள் வைத்திருக்கிறேன்’ என்று என்னிடம் பல முறை கூறி இருக்கிறார். அவர் லட்சியம், இமாலயம் போன்றது. அவர் இன் னும் பல காலம் வாழவேண்டிய வர். வாழ்ந்திருந்தால், எதையும் சாதித்திருப்பார்.

அவர் மறைந்ததன் மூலம், இந்தியா ஓர் அரும் புதல்வனை இழந்துவிட்டது; ஒரு கர்ம வீரனை இழந்துவிட்டது.அவரைப் போன்று இன்னொருவரை மீண்டும் காண்பது அரிது. அவர் காட்டிய பாதையில் கண்ணியத்துடன் செல்வதுதான் நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலி என்பது என் கருத்து.