ஸ்பெஷல் -1
Published:Updated:

சினிமா விமர்சனம் : திருவிளையாடல்

சினிமா விமர்சனம் : திருவிளையாடல்

சினிமா விமர்சனம் : திருவிளையாடல்

சண்முகம் பிள்ளை
மீனாட்சி அம்மாள்

##~##

மீனாட்சி: ஒரு நல்ல புராணப் படம் பார்த்ததிலே மனசுக்கு எவ்வளவு நிம்மதியா இருக்கு தெரியுங்களா?

சண்முகம்: ஆமாம் மீனாட்சி, கண் குளிர காட்சிகளையும், காதுகுளிர பாட்டுக்களையும் கேட்டு, நான் சில இடங்களில் மெய்சிலிர்த்துப் போனேன். அதிலும் கே.பி.சுந்தராம்பாளோட குரல்...

மீனா: 'முருகா’ என்று அந்த ஒளவைப் பாட்டி கூப்பிடறபோது நம்ப மனசெல்லாம்கூட உருகுதுங்க. அதே மாதிரி, சிவாஜி கணேசனுக்கு சிவன் வேஷம் என்ன பொருத்தமா இருக்குது!

சண்: அதிலும் ருத்ரமூர்த்தியா வரபோது, ரொம்பப் பொருத்தம்!

மீனா: பாண்டியன் சபையிலே வந்து நக்கீரனை மடக்கின காட்சி, என் கண் முன்னாலயே நிக்கு துங்க!

சண்: ருத்ர தாண்டவமும் பிரமாதமாத்தான் இருந்துது. மீனவனா வந்து ஒரு நடை நடக்கிறாரே... எப்படி?

மீனா: அழகா இருந்தது. ஆனா, கொஞ்சம் சிரிப்பும் வந்தது. அங்கே எனக்கொரு சந்தேகங்க! பிட்டுக்கு மண் சுமந்த கதையிலேதானே, ஈசன் உடம்பிலே பட்ட அடி எல்லார் உடம்பிலேயும் படறதாக வரும். இதுலே...

சினிமா விமர்சனம் : திருவிளையாடல்

சண்: இதோ பார் மீனாட்சி, திருவிளையாடல் புராணம் ரொம் பப் பெரிசு! அதிலே எல்லாத்தையும் காட்டமுடியுமா? அத னால, ஒரு கதையிலே இன்னொரு சம்பவத்தைப் புகுத்தி இருக்காங்க... கதையா முக்கியம்? தத்துவம்தானே முக்கியம்! இவ்வளவு பெரிய புராணக்கதையை எடுத்துக்கிட்டு, சிறப்பா திரைக்கதை அமைச்சு, வசனம் எழுதி, டைரக்ட் செய்த ஏ.பி.நாகராஜனைக் கண்டிப்பா பாராட்டத்தான் வேணும்.

மீனா: பாலமுரளி கிருஷ்ணாவின் 'ஒரு நாள் போதுமா’ங்கற பாட்டு என் காதிலே இன்னும் ஒலிச்சுக்கிட்டிருக்குங்க!

சண்: எந்தப் பாட்டுதான் ஒலிக்கலே?! டி.ஆர்.மகாலிங்கம் பாடறாரே 'இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை...’ அதைச் சொல்றதா, இல்லே 'பாட்டும் நானே’ங்கற டி.எம்.சௌந்தரராஜன் பாடற பாட்டைச் சொல்றதா? கே.வி.மகாதேவனுக்கு ஒரு 'சபாஷ்’ சொல்ல லாம்.

மீனா: எல்லாம் சரி... ஒரு தமிழ்ப் புலவரை வச்சுக்கிட்டு 'காமெடி’ பண்ணி இருக்க வேண்டாமோன்னு  தோணிச்சு!

சண்: ஏன், நாகேஷ் ரொம்ப நல்லா பண்றாரே அதை! புரா ணப் படத்திலே ரொம்ப அழகா காமெடி கொண்டு வந்திருக்காங் கன்னுதான் எனக்குத் தோணுது!

மீனா: சமூகப் படங்கள் பெரு கிப் போய்விட்ட இந்தக் காலத் திலே, இப்படி ஒரு புராணப் படம் வந்து, அதுவும் இவ்வளவு நல்லா அமைஞ்சது ரொம்பவும் சந்தோஷப்பட வேண்டிய விஷயங்க. அடுத்த வாரம் நான் இன்னொரு தடவை இந்தப் படத்தை போய்ப் பார்க்கலாம்னு இருக்கேன்.

சண்: போகும்போது சொல்லு; நானும் வரேன்!