ஸ்பெஷல் -1
Published:Updated:

மலைக்கள்ளன்

மலைக்கள்ளன்

மலைக்கள்ளன்
##~##
தாநாயகியான பூங்கோதையை வீரராஜன் என்ற கயவன், காத்தவராயன் என்பவன் உதவியுடன் பலாத்காரமாக அடைய முயற்சி செய்கிறான். அந்த முயற்சி பலன் அளிக்காமல் செய்ய, மலைக்கள்ளன் இந்தக் கதையில் நடமாடுகிறான்.

மலைக்கள்ளனாக வரும் எம்.ஜி.ராமச்சந்திரன், முதலில் ஒரு கிழவன்போலும், பிறகு மலைக்கள்ள னாகவும், கதையின் பல இடங்களில் ரஹீம் என்பவ னாகவும் மூன்று வேஷங்களில் தோன்றுகிறார். இவற்றில் எந்த வேஷத்தில் மிகச் சிறப்பாக நடிக்க சந்தர்ப்பம் இருந்தது என்று ஆராய்வதைவிட, மூன்றிலுமே அவர் நடிப்பு மிடுக்காக இருந்தது என்பதைக் குறிப்பிடவேண்டியது அவசியம். கவர்ச்சி மிகுந்த கதாநாயகி பூங்கோதையின் பாகத்தை பானுமதி ஏற்றுக்கொண்டிருக்கிறார். நடிக்கவும் நடனம் செய்யவும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

மலைக்கள்ளன்

மலைக்கள்ளன் குகையிலே பூங்கோதை தங்கியிருக்க நேர்ந்த சமயத்திலும், பூங்கோதையை மலைக் கள்ளன் அவளுடைய வீட்டிலே சந்தித்த சமயங் களிலும் சம்பாஷணைகளை நன்றாகப் பேசி, கதை யின் சுவாரஸ்யம் குன்றாது கவனித்துக் கொள்கிறார் கள். கதையின் இறுதிக் கட்டத்தில் ரஹீம்தான் மலைக்கள்ளன், மலைக்கள்ளன்தான் தனது காணா மல் போன மகன் என்பதை அறியாத அத்தை போடும் கூச்சலும், வேஷத்தைக் கலைத்துக்கொண்டு கதாநாயகன் வெளிவருவதும் நன்றாக கையாளப்பட்ட கட்டங்கள்.

இந்தப் படமெங்கும் இனிப்பூட்டி அநாயாஸமாக நடித்து, சுபாவமாகப் பேசிச் சிரிக்க வைத்து, 'இன்னும் கொஞ்சம் வரமாட்டாரா’ என்றதொரு ஆவலை எழுப்பும் நடிப்பை 'ஏட் கருப்பையா’விடம் காண்கி றோம். நல்ல ஸ்தூலமான தேகம்; முகத்திலே கலக்க மற்ற சாந்தம். ''என்னய்யா ஃபோர் ஃபார்ட்டி-ஒன்!'' என்று இன்ஸ்பெக்டர் அழைத்துவிட்டால், எண் சாண் உடம்பிலும் மரியாதை..!

உணர்ச்சியுடனும் திறமையுடனும் ஏட் கருப்பையாவாக டி.எஸ்.துரைராஜ் நடித்து, அத்தனை பேரிடமும் ஒருமுகமாக 'சபாஷ்! சபாஷ்!’ என்று பட்டம் வாங்கிக்கொள்கிறார்.

பக்ஷிராஜா ஸ்டூடியோவில் தயாரான இப் படத்தில், பிரமிப்பு அளிக்கும் கட்டங்கள் அநேகம் இருக்கின்றன. மலைப்பாதை வழியே புலியும் காட்டுப் பன்றியும் எதிர்ப்படுதல், கரடியும் புலியும் சண்டை போடுதல், ஒளிந்திருந்து தாக்கும் கள்ளர் களை மலைக்கள்ளன் ஒண்டியாகச் சிலம்பமாடிச் சமாளித்தல், மலை மேலே ஓடும் கம்பிப் பாலம், அபாயகரமாக அந்தப் பாலம் அறுந்தும் மலைக் கள்ளன் தப்பித்துக்கொள்ளுதல், சரியான சந்தர்ப்பங் களில் மலைக்கள்ளன் பூங்கோதையையும் அவன் தந்தையையும் காப்பாற்ற வருதல்... எல்லாம் நிச்சய மாக ஹிருதய வேகத்தைத் துரிதப்படுத்தும்படி அமைந்திருக்கின்றன. இவை ஒவ்வொன்றிலும் மலைக்கள்ளன் மீது அனுதாப உணர்ச்சியை அதிகப்படுத்தி, அவன் நன்மையைக் கோரும்படி செய்து விட்டார்கள். மற்றும் சிலம்ப விளையாட்டுகள், கத்திச் சண்டைகள், கணீர் என்று ஒலிக்கும் ஸ்ரீமதி பி.ஏ.பெரியநாயகியின் பாட்டிற்கேற்றபடி சாயி, சுப்புலக்ஷ்மி ஆகிய இளம் நடன மணிகளின் விறுவிறுப்பான நடனங்கள், ஹாஸ்ய சம்பவங்கள் என அனைத்தும் படத்தில் பல பாகங்களில் ரஞ்சகமாகப் பரவியுள்ளன.