உப்புமா செய்ய ஒரு பாட்டு!
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பல்லவி
உப்பு மாவைக் கிண்டி வையடி
உத்தமி பத்தினி
சித்தஜ ரத்தினமே (உப்புமா)
கண்ணே பெண்ணே
மயிலே குயிலே நீ (உப்புமா)
அனுபல்லவி
அப்படியே பாணாதன்னை
அடுப்பி லேற்றி தீயைக்
கப்பிய ஜலமும் விட்டு
கொப்பெனக் கொதிக்கவும்
உப்பைப் போட்டு
உடனே ரவையைப் போட்டு
உளுத்தம் பருப்பைப் போட்டு
சிறியதாய் மிளகாய்
கிள்ளிப் போட்டு

அரியகடுகு வெங்காயம் போட்டு
சரியாயதனை கொதிக்கப் போட்டு
கருகக் காயம் கூடப் போட்டு
களைந்து போட்டு
கிளறிப் போட்டு
மிளகாய் கரிக்கப் போட்டு
அப்படி இப்படி திருப்பிப் போட்டு
அனைவர்க்கும்
சூடாயிருக்கப் போட்டு...
தள தள தள பொள பொள பொள
சரி கம பத நிஸ நிஸ நிஸ
(உப்புமா)
(இது ஸ்திரீபார்ட் பி.எஸ்.பரமேஸ்வர ஐயர் பாடியது!)
தோசைக்கு ஒரு வெண்பா!
திருநெல்வேலிப் பதியில் 136 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த தண்டபாணி சுவாமிகள் தவ வலிமை பெற்ற அடியவராவார். அன் னார் ஒரு முறை தேவகோட்டைக்குச் சென்ற நேரத்தில், சுவாமிகளின் அன்பர் தோசை சுட்டுக் கொடுத்தார். உடனே அத்தோசையைப் பார்த்து வியந்து, ஒரு வெண்பாவைப் பாடி முடித்துவிட்டார் தண்டபாணி சுவாமிகள்.
இதோ, அந்தப் பாட்டு:
தென்னர்புகழ் சீர்குலவு தேவகோட் டைப்பதியிற்
சொன்னமையர் வீட்டுள்ள தோசையே!- உன்னைஅயன்
கண்(டு)ஆ லிலைவகுத்த காரணமோ? நீஅதைக்கண்(டு)
உண்டாயி னாயோ? உரை.''
தகவல்: நெல்லை ந.சொக்கலிங்கம்
இது காபி வெண்பா!
தோசையை உள்ளே தள்ளிய பிறகு காபி வேண்டுமல்லவா? இதோ, சூடான ஒரு 'காபி வெண்பா’ ரெடி! திராவிடக் கவிமணி வே.முத்து சாமி ஐயர் அவர்கள், காபி யைத் திரிவேணியுடன் ஒப் பிட்டு இயற்றிய வெண்பா இது:
பாலங்குக் கங்கையாப் பண்பார் கஷாயந்தான்
ஏலுங் கரிய யமுனையாச் - சாலக்
கரந்துறை சீனி சரஸ்வதியாக் காபி
தரந்தெரிமுக் கூடற் றலம்.
- ஆர்.தீனதயாளன்