Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்

மந்திர எண் 2000..!

ஒன்-டே மாட்ச் வந்த பிறகு கிரிக்கெட்டில் எத்தனையோ விஷயங்கள் மாறிவிட்டாலும், மாறாமல் இருப்பது, ஒரு பேட்ஸ்மேன் செஞ்சுரி அடிக்கும்போது அவருக்கும் நமக்கும் ஏற்படும் பரவசமும் சந்தோஷமும்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தலையங்கம்

அதே போன்ற உற்சாகத்தை நமக்கு அளித்திருக்கிறது, 2000 என்ற மந்திர எண்!

புது வருடமான 2000, இந்த நூற்றாண்டுக்கும் இந்த மில்லினியத்துக்கும் கடைசி வருடம் என்றாலும், நடைமுறையில் அடுத்த நூற்றாண்டும் அடுத்த மில்லினியமும் இப்போதே ஆரம்பித்துவிட்ட உணர்வு எல்லாருக்குமே ஏற்பட்டுவிட்டது.

ஒரு விதத்தில் இதுவும் நல்லதுதான்! அடுத்த நூற்றாண்டில் இந்தியா எப்படியெல்லாம் மாற வேண்டும் என்று நாம் வைத்திருக்கிற கனவுகளையெல்லாம் ஒரு வருடம் தள்ளிப் போடாமல், இப்போதே செயல்படுத்தத் தொடங்கிவிடலாமே!

புதிய நூற்றாண்டில், நம் முன் உள்ள முக்கிய சவால் என்ன? நமக்கு இயற்கை அன்னை அளித்த வளங்கள் அழியாமல் தழைக்கும் விதத்தில், நவீன தொழில்நுட்பமும் அறிவியலும் முழுமையாக வளரவேண்டும். அவற்றின் பயன் ஒரு சிலருக்கு மட்டுமல்லாது, கடைக்கோடி ஏழைக்கும் சென்று அடையவேண்டும்.

இதற்குத் தடையாக உள்ளவற்றை எல்லாம் அரசியலில் இருந்தும், சமூகத்திலிருந்தும், நம்முடைய உள்ளங்களிலிருந்தும் அகற்றும் பணி, 2000-ம் வருடத்தில் ஆரம்பமாகட்டும்.

நம்முடைய ஒவ்வொரு வாசகர் வீட்டிலும் வளமும் நலமும் தழைத்தோங்க, விகடன் வாழ்த்துகிறான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism