Published:Updated:

பிட்ஸ்

பிட்ஸ்

பிட்ஸ்

பிட்ஸ்

Published:Updated:
பிட்ஸ்

• ‘NOTABLE PERSONS’ என சிலர் விளம்பரப்படுத்தப்படுகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர்

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உருப்படியானவர்களாக இருக்க மாட்டார்கள்! இந்த வாசகத்தை சிறிது மாற்றி அமைத்தாலே போதும்; இந்த உண்மை விளங்கிவிடும். எப்படி மாற்ற வேண்டும்? இதோ, இப்படித்தான்.

NOT ABLE PERSONS!
 

- 'உலக சரித்திர நூலில்’ ஜவஹர்லால் நேரு

பிட்ஸ்

நானும் பாட்டாளியே!

கலைவாணர் அரங்கத்தில் தொழிலாளர் சங்க விழாவில் ஒரு கவியரங்கம். அதற்குத் தலைமை: கி.வா.ஜ. - தலைப்பு: 'பாட்டாளி.’ தொழிலாளர்கள் திரண்டு வந்திருந்தனர். ''நானும் உங்களைப் போல ஒரு பாட்டாளி தான். காரணம், பாட்டால் (கவிதையால்) உங்கள் மனத்தை ஆளவந்திருக்கிறேன்'' என்று தன் உரையைத் துவக்கினார் கி.வா.ஜ.

• 'காமகோடி வீணா’ என்ற இதழில் என்னைக் கவர்ந்த ஒரு வாசகம்:

God gives and forgives.
Man gets and forgets!

- எஸ்.எஸ்.என்.

பிட்ஸ்

• 'செக்ஸ்’ என்ற ஆங்கில வார்த்தையை அப்படியே தமிழில் எழுதிவிடுகிறோம். சிலர் 'பால் உணர்வு’ என்று மொழி பெயர்க்கின்றனர். சங்க காலத்திலேயே செக்ஸுக்கு நேரான தமிழ்ச் சொல்லாக 'நலம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி யிருக்கின்றனர். இச்சொல்லே கல்வெட்டுக்களிலும் காணப்படுகிறது.

பிட்ஸ்

• சிறு குழந்தைகளைச் சிரித்த முகத்தோடு பார்க்கிற காட்சியே ஒரு ஆனந்தம். அவர்களை அடித்துச் சித்திரவதை செய்து கல்வி கற்பிப்பது மிக மிகத் தவறு. பயமுறுத்தி அடித்துச் சொல்லித் தருகிற கல்வி பயனுள்ள கல்வியாகாது. அறிவிற் சிறந்த பெரியவர்கள் யாரும் அந்தக் கல்வியை ஆதரித்ததே கிடையாது.

இராமலிங்க சுவாமிகள், அவ்வாறு அடித்துப் பாடம் சொல்லித் தந்த சுந்தரர் என்ற ஆசிரியரைக் கண்டித்து ஒரு பாடலே எழுதியிருக்கிறார் என்றால், அடிப்பது எவ்வளவு தவறு என்று பாருங்கள்.

'துடிப்பதிலாத் தூய மனச் சுந்தரப்          பேர்

உடையாய் என் தோழ கேள் நீ

அடிப்பதும் அச்சிறுவர்களை நீ

அடிப்பது நன்

றல என்மேல் ஆணை... ஆணை’

- முத்தையன், சென்னை

பிட்ஸ்

• 'சுதந்திர இந்துஸ்தான்’ என்ற பத்திரிகையின் ஆசிரியருக்கு 1908 டிசம்பர் மாதம் டால்ஸ்டாய் ஒரு நீண்ட கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் அவர் ஆறு திருக்குறள்களை மேற்கோள் காட்டினார். 'இன்னா செய்தாரை ஒறுத்தல், பிறர்க்கு இன்னா முன்பகல் செய்யின்’ என்ற குறள்கள் அவற்றில் அடங்கும். பரபரப்பூட்டிய அந்தக் கடிதத்தை மகாத்மா காந்தி ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் பிரசுரித்தார்.

பிட்ஸ்

• நூறு தாமரை இதழ்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி அவற்றினூடே ஊசியைச் செலுத்தினால் அவ்வூசி முனை ஓரிதழுக்கும் மற்றோரிதழுக்கும் இடையே கடந்து செல்லும் கால அளவுதான் கண நேரம் என்பது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism