Published:Updated:

'எம்.கே.டி'யை பாகவதர் ஆக்கியவர்!

'எம்.கே.டி'யை பாகவதர் ஆக்கியவர்!

'எம்.கே.டி'யை பாகவதர் ஆக்கியவர்!

'எம்.கே.டி'யை பாகவதர் ஆக்கியவர்!

Published:Updated:
'எம்.கே.டி'யை பாகவதர் ஆக்கியவர்!

தற்கொலை முடிவு வரைக்கும் போய், நல்லவேளையாக, கடைசி தருணத்தில் தன் முடிவை

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாற்றிக்கொண்டிருக்கிறார் ராமநாதன்.

1938-ல் கீழ்ப்பாக்கத்தில் நியூடோன் ஸ்டூடியோவை ஆரம்பித்தவர் இந்த ராமநாதன் செட்டியார். அவரின் பாகஸ்தர்களில் எம்.கே.தியாகராஜ பாகவதரும் ஒருவர்.

'திருச்சி தியாகராஜன்’ என்ற பெயரில் பாடிக் கொண்டிருந்த எம்.கே.டி-க்கு, 'பாகவதர்’ என்ற அடைமொழிப் பட்டத்தை அளித்ததே இந்த ராமநாதன் செட்டியார்தான்! இவர்கள் வீட்டு முக்கிய விசேஷத்திற்குப் பாட ஒப்பந்த மாகியிருந்த எம்.கே.டி-யை 'பாகவதர்’ என்று சேர்த்து முதன் முதலாக அழைப்பிதழில் அச்சிட்டவர் இவர்தான்.

17 ஆண்டுகள் அல்லும் பகலும் உழைத்து, ஸ்டூடியோவுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தார்.

'எம்.கே.டி'யை பாகவதர் ஆக்கியவர்!

படங்களையும் தயாரித்துக்கொண்டு, ஸ்டூடியோவையும் பார்த்துக்கொள்வது சிரமமாக இருக்கவே, 1954-ல் இவராகவே ஸ்டூடியோவிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு வெளியே வந்து, படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார்.

இவர் தயாரித்த ஏழு படங்களில், 'சக்கரவர்த்தித் திருமகள்’ வெற்றி பெற்றது. ஆனால், இவர் ஏற்கெனவே அந்தப் படத்தை ஒருவருக்கு விற்றுவிட்டபடியால், லாபம் பூராவும் அவருக் குப் போய்ச் சேர்ந்துவிட்டது. இதுதான் இவருடைய வீழ்ச்சிக்கு முதல் கட்டமாக அமைந்தது.

அடுத்து, அப்போது கதை- வசனகர்த்தாவாக இருந்த திரு.ஸ்ரீதர் ஒரு கதையைக் கொண்டு வந்தாராம். அதுதான் 'கல்யாண பரிசு’. ''இதில் 'ஆர்ட்டிஸ்ட் வால்யூ’ இருந்தால்தான் நன்றாக எடுபடும்'' என்று கருத்து கூறினாராம் ஸ்ரீதர். அப்போது, கூட இருந்தவர்கள், ''ஆர்ட்டிஸ்ட் வால்யூ என்றால், நாம் ஒரு சரித்திரப் படமே எடுக்கலாமே!'' என்று கூற, அதன்படி உருவாக்கப் பட்டதுதான் 'சித்தூர் ராணிபத்மினி’ படம்.

எதிர்பார்த்தபடி அந்தப் படம் ஓடாமல் தோல்வி அடைய, செட்டியாருக்கு எட்டு லட்ச ரூபாய் நஷ்டம். ஐந்து கார்கள், பங்களா எல்லாம் போன இடம் தெரியவில்லை.

எந்தக் கல்யாண பரிசை இவர்கள் எடுக்காமல் விட்டார்களோ, அந்தப் படத்தை ஸ்ரீதர் எடுத்து, 'போடு போடு’ என்று போட்டபோது, செட்டியாரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்?!

சென்னை தெருக்களில் கம்பீரமாகக் காரில் சென்றவர், இன்று ஹைகோர்ட் வரை செல்வதானாலும், மாம்பலத்திலிருந்து கால் நடையாகவே தான் செல்கிறார்.

ரேடியோ இன்ஜினீயரிங், எலெக்டிரிகல் இன்ஜினீயரிங்கில் தேர்ச்சி பெற்றிருக்கும் இவர், அது சம்பந்தமாக வைத்திருந்த புத்தகங்களையெல்லாம்  கைச் செலவுக்காக  மூர்மார்க்கெட்டில் விற்றுவிட்டார்.

''நியூடோன் ஸ்டூடியோவின் 'வெள்ளி விழா’வை சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டாடினார்கள். அந்த ஸ்டூடியோவைத் துவக்கி வைத்த எனக்கு மறக்காமல் ஒரு அழைப்புகூட அனுப்பாமல் இருந்துவிட்டார்கள். உலகத்திலேயே இதைவிடப் பெரிய நன்றிக் கடன் என்ன இருக்கமுடியும்?!'' என்று வருத்தப்படுகிறார் ராமநாதன் செட்டியார்.

- சுந்தரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism