Published:Updated:

''மடியில் விழுந்தது ஒரு கனி..''

தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர்.மு.கருணாநிதி

''மடியில் விழுந்தது ஒரு கனி..''

தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர்.மு.கருணாநிதி

Published:Updated:
''மடியில் விழுந்தது ஒரு கனி..''

எம்.ஜி.ஆர். அவர்கள் இந்த ஆண்டின் இந்தியச் சிறந்த நடிகர் விருதினைப் பெறுவதற்கு மத்திய அரசின்

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குழுவினரால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் என்ற இனிக்கும் செய்தி பற்றி என் கருத்துக்களைக் கேட்கிறது விகடன்.

எனதருமை உடன்பிறப்பனையார் எம்.ஜி.ஆர். அவர்கள் இந்தப் பெருமைக்கு முற்றிலும் தகுதி யானவர். தமிழகக் கலைத் துறையின் ஒளிமிகுந்த கதிராக அவர் விளங்கி வருகிறார். அவர் நடிப் பில் தென்றலின் சுகத்தையும், அவர் ஈடுபடும் சண்டைக் காட்சிகளில் மின்வெட்டுக்களின் உயிர்ப்பையும் உணரலாம்.

திரையுலகில், நாடக உலகில் அவர் ஏற்படுத் திய புதிய திருப்பத்தின் காரணமாக, திருச்சியில் நடைபெற்ற ஒரு விழாவில், 'புரட்சி நடிகர்’ எனும் பட்டத்தை நான் அவருக்கு வழங்கினேன். அதற்கு முன்பே அவரும் நானும் கோவை ராம நாதபுரத்தில் ஒரு சிறிய வீட்டில் சில நாட்கள் ஒன்றாக வாழ்ந்துகொண்டிருந்தோம். ஜூபிடர் பிக்சர்ஸார் தயாரித்து, அவர் முதன்முதலாகத் திரு. ஏ.எஸ்.ஏ.சாமி டைரக்ஷனில் கதாநாயகனா கத் தோன்றிய 'ராஜகுமாரி’ படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அன்று எங்களிடையே முகிழ்த்த மகிழ்ச்சியின் விரிவான பெருமிதமாக இன்று அவர் சிறப்பிக் கப்பட்டிருப்பது கண்டு, வாழ்த்துக்களைக் குவிக்கிறேன்.

''மடியில் விழுந்தது ஒரு கனி..''

புரட்சி நடிகராக, பொன்மனச் செம்மலாக, மக்கள் திலகமாக, எங்கள் கழகப் பொருளாள ராக, அண்ணாவின் தம்பியாக, என் சகோதர ராகத் திகழும் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு வழங் கப்படுகின்ற இந்தச் சிறப்பு, தாயகத்து மக்கள் அனைவருக்கும் பூரிப்பு தரும் நற்செய்தியா கும். கலை ஆர்வம் - கழக ஆர்வம் - மக்கள் நலனில் குன்றாத ஆர்வம் கொண்ட அவரைப் பாராட்டிச் சிறப்பித்துள்ள தேர்வுக் குழுவினரை நான் பாராட்டுகிறேன்.

''மடியில் விழுந்தது ஒரு கனி; அதனை எடுத்து இதயத்தில் வைத்துக்கொண்டேன்'' என்று அண்ணா அவர்கள் எம்.ஜி.ஆர். பற்றிக் குறிப் பிட்டதை இப்போது எண்ணி மகிழ்கிறேன்.

இது போல் இன்னும் பல சிறப்புக்களுக்கும் பொருத்தமான புரட்சி நடிகர், பல்லாண்டு வாழ்ந்திடுக என வாழ்த்துகிறேன்.

அன்பு, மு.கருணாநிதி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism