Published:Updated:

நவீன ஓவியங்களின் பிரம்மா! Vikatan App Exclusive

Vikatan

ஓவிய உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக புகைப்படக்கலை மாறிக்கொண்டிருந்த சமயம், மாடர்ன் ஆர்ட் என்ற தனது புதிய ஸ்டைலால் ஓவிய உலகத்திற்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியவர் பிக்காஸோ. இளம்வயதில் ஓவியக் கலையில் நாட்டம் கொண்டிருந்த ஹிட்லர் பிக்காஸோவின் ஓவியங்களைத் தடை செய்தார். காரணம் உள்ளே!

'உங்களுக்குத் தெரிந்த ஓவியர் ஒருவரின் பெயரைச் சொல்லுங்கள்' என்று யாரைக் கேட்டாலும் பெரும்பாலானவர்கள் முதலில் குறிப்பிடும் பெயர் பிக்காஸோ!

பிக்காஸோவின் உலகம் தழுவிய புகழுக்கு என்ன காரணம்?

ஆரம்பக் காலங்களில் ஓவியங்களை அகலம் - நீளம் என்ற எல்லைகளுக்குள் மட்டும் - அதாவது Two Dimension-ல் மட்டுமே வரைந்து கொண்டிருந்தார்கள். மைக்கேல் ஏஞ்சலோவும், லியோனார்டோ டாவின்சியும் ஓவியங்களுக்கு ஆழம் கொடுத்து Three Dimension - எஃபெக்ட் கொடுக்க... ஓவியக் கலை ஒரு மிகப்பெரிய மாற்றம் அடைந்தது. இவர்கள் வாழ்ந்து மறைந்து பல நூற்றாண்டுகள் ஆன பிறகும்... ஓவியக் கலைக்கு யாராலுமே ஒரு புதிய திருப்பத்தைக் கொடுக்க முடியவில்லை. இன்னொருபுறம் காமிராவின் வருகை ஓவியங்களின் முக்கியத்துவத்தைக் குறைக்க ஆரம்பித்தது.

ஓவியர்கள் தாங்கள் பார்க்கும் காட்சிகளை என்னதான் தத்ரூபமாக வரைந்தாலும், போட்டோவின் வேகத்துக்கும், தரத்துக்கும் ஓவியர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஓவியக் கலை தனது முக்கியத்துவத்தை இழந்து விடுமோ என்ற அச்சம் முளைவிட ஆரம்பித்தது. அந்த சமயம் - அதாவது, 1907-ம் ஆண்டு - பிக்காஸோ வரைந்த Les Demoiselles d' Avignon என்ற ஐந்து பெண்களின் ஓவியம்... ஓவியக் கலைக்கு ஒரு மிகப்பெரிய திருப்பு முனையைக் கொடுத்தது.

Pablo Picasso's Les Demoiselles d' Avignon art
Pablo Picasso's Les Demoiselles d' Avignon art
"ஒரு காட்சியைக் கண்கள் எப்படிப் பார்க்கிறதோ அதை அதே மாதிரி வரைவதில் என்ன புதுமை இருக்கிறது? அந்தக் காட்சி மனதில் ஏற்படுத்தும் உணர்ச்சிகளைத்தான் ஓவியம் பிரதிபலிக்க வேண்டும்."

இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!

நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.

முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.