Published:Updated:

“யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம்!” - நெகிழும் அம்ரிதா

சுரேஷ் ரெய்னா
பிரீமியம் ஸ்டோரி
சுரேஷ் ரெய்னா

புகைப்படக்கலை

“யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம்!” - நெகிழும் அம்ரிதா

புகைப்படக்கலை

Published:Updated:
சுரேஷ் ரெய்னா
பிரீமியம் ஸ்டோரி
சுரேஷ் ரெய்னா
“குழந்தைகளின் ஒவ்வோர் அசைவுகளும் அழகு நிறைந்தவை. அழுகை, சிரிப்பு, கோபம் எனக் குழந்தைகள் வெளிப்படுத்தும் உணர்வுகள் ஒவ்வொன்றும் கவித்துவமானவை. இதுவரை நான் 1,500-க்கும் அதிகமான குழந்தைகளை புகைப்படம் எடுத்திருக்கிறேன். ஒவ்வொரு ஷூட்டின்போதும் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் என்பது யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம்” - நெகிழ்ச்சி பொங்க பேசுகிறார் பேபி போட்டோகிராபர் அம்ரிதா.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
“யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம்!” - நெகிழும் அம்ரிதா

இந்தியாவில் தற்போது பிரபலமாகிவரும் பேபி போட்டோகிராபியில், ஏழு வருடங்களாக இயங்கி வரும் அம்ரிதா தனக்கென தனி தடம் பதித்திருக்கிறார்.

அம்ரிதா
அம்ரிதா

கிரிக்கெட்டர் சுரேஷ் ரெய்னா, சினேகா - பிரசன்னா, சுஜா வருணி உள்ளிட்ட திரை பிரபலங்கள் எனப் பல செலிபிரிட்டிகளுடைய குழந்தைகளின் பொன்னான தருணங்களை புகைப்பட மாக்கியுள்ளார். அவருடைய க்ளிக்குகளும் அதன் பின்னணியும் இங்கே...

“யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம்!” - நெகிழும் அம்ரிதா

அஞ்சன் தேவ்

கன்னட நடிகர் அஞ்சன் தேவ் திடீர்னு ஒரு நாள் கூப்பிட்டு குழந்தையை போட்டோ ஷூட் பண்ணணும்னார். அங்கே போய் பார்த்துட்டு நான் மெய்சிலிர்த்துப்போயிட் டேன். பாசிட்டிவிட்டி நிறைந்த சந்தோஷமான குடும்பம். எல்லோருமே அந்தக் குழந்தையைக் கொண்டாடுற விதம் ரொம்பவே அழகா இருந்தது. தன் குழந்தையோடு விளையாடும்போது அஞ்சன் தேவும் குழந்தையாகிவிடுவார். அதைப் பார்க்கும்போது நம் மனமும் குழந்தை போலாகிவிடும்.

“யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம்!” - நெகிழும் அம்ரிதா

சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னாவின் மகளை புகைப்படம் எடுக்க முதலில் சென்னையில்தான் திட்டமிட்டிருந்தோம். ஆனால், அவங்க நெதர்லாந்தில் இருந்த நேரம், நானும் நெதர்லாந்துக்குச் சென்றிருந்ததால அங்கேயே போட்டோ ஷூட் பண்ணிட்டோம். ரெய்னாவின் மகள் கிரேஸியா எல்லார்கிட்டையும் ஈஸியா ஒட்டிப்பா. நான் அவங்க வீட்டுக்குப் போன கொஞ்ச நேரத்திலேயே என்கிட்ட ரொம்ப ஃபிரெண்ட் ஆயிட்டா. தன்னோட ப்ளே ரூம், ஸ்டடி ரூம்னு எல்லாத்தையும் ஒவ்வொண்ணா அறிமுகப்படுத்தினா. ரெய்னா குடும்பம் வெகு இயல்பாக இருந்த நேரத்தில் எடுத்த புகைப்படம்தான் இது. இந்த போட்டோவால் ரெய்னா ரொம்ப ஹேப்பி.

“யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம்!” - நெகிழும் அம்ரிதா

சமீரா ரெட்டி

நடிகை சமீராவோட இணைந்து நிறைய ஷூட் பண்ணியிருந்தாலும், அவங்களை குழந்தையோட சேர்த்து வெச்சு ஷூட் பண்ணது வித்தியாசமான அனுபவமா இருந்தது. நான் கேமராவை கையில் எடுத்து, ‘ஸ்மைல் ப்ளீஸ்’னு சொல்வதற்கு முன்னாடியே சமீராவின் கணவர் அக்‌ஷய், கிட்டாரை எடுத்து வாசிக்க ஆரம்பிச்சுட்டார். எல்லோரும் தங்களை மறந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாங்க. அந்த அழகான தருணத்தை என் கேமராவில் சிறைபடுத்திட்டேன்.

ராதிகா - சரத்குமார்

நான் ராதிகா மேடத்தின் மிகப்பெரிய ரசிகை. அவங்களை முதன்முதலில் நேரில் பார்க்கும்போது அப்படியே ஸ்டக் ஆகி நின்னுட்டேன். ஆனா, அவங்க ரொம்ப யதார்த்தமானவங்க. கொஞ்ச நேரத்திலேயே என்னை கம்ஃபர்ட்டபிளா ஃபீல் பண்ண வெச்சாங்க. ராதிகா மேடமும் சரத் சாரும் ரேயானின் பாப்பாவை கேஷுவலாகக் கையில் வைத்திருக்கும்போது லைட்டிங், ஆங்கிள்னு எதையுமே யோசிக்காமல் ‘கேண்டிட்’டா க்ளிக் செய்தேன். அது க்யூட்டா இருப்பதாக நிறைய பாராட்டுகள் கிடைத்தன.

“யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம்!” - நெகிழும் அம்ரிதா

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி

ஜி.வி.பிரகாஷ் சாரின் பொண்ணு ‘அன்வி’ பாப்பா ரொம்பவே சமத்து. தூக்கத் திலேயே ரொம்ப அழகா போஸ் கொடுத்தாங்க. அவங்க கொடுத்த போஸ் சோஷியல் மீடியாக்களில் பயங்கர டிரெண்ட் ஆச்சு.

சுஜா வருணி

சுஜா வருணியோட ப்ரெக்னென்சி போட்டோ ஷூட்டிலிருந்து குழந்தையின் முதல் பிறந்த நாள் போட்டோ ஷூட் வரை அவங்க கூடவே பயணம் செய்யறேன். அதனால், அவங்க வீட்டுக்கு போட்டோ எடுக்கப் போகும்போது பதற்றம் இருக்காது. ஏதோ என் வீடு போன்ற உணர்வோடத்தான் போவேன். சுஜா வருணியைப் பொறுத்தவரை வித்தியாச வித்தியாசமான கான்செப்ட் டிரை பண்ணச் சொல்லுவாங்க. லைட்டிங், ஆங்கிள்னு அவங்களே நிறைய ஐடியாக்கள் கொடுப்பாங்க.

“யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம்!” - நெகிழும் அம்ரிதா

சினேகா - பிரசன்னா

சமீபத்தில் நடிகை சினேகா, பிரசன்னா குழந்தையின் போட்டோ ஷூட்டின்போது லைட்டிங்கில் ஆரம்பிச்சு, பாப்பாவை துணியில் சுத்துறது, ஒவ்வொரு போஸுக்கு ஏற்றதுபோல படுக்க வைக்கிறது வரை கூடவே இருந்து பிரசன்னா சார் பாப்பாவை பார்த்துக் கிட்டார். பெண் குழந்தைகள் எப்போதும் அப்பாக்களுக்கு தேவதைகள்னு உணர்ந்த நிமிடம் அது.