Published:Updated:

பறவைப் பார்வையில் நிலக்காட்சி!

டிரோன் போட்டோகிராபி
பிரீமியம் ஸ்டோரி
டிரோன் போட்டோகிராபி

டிரோன் போட்டோகிராபி

பறவைப் பார்வையில் நிலக்காட்சி!

டிரோன் போட்டோகிராபி

Published:Updated:
டிரோன் போட்டோகிராபி
பிரீமியம் ஸ்டோரி
டிரோன் போட்டோகிராபி

நாம் தினமும் பயணிக்கிற பாதை... நாம் தினமும் பார்க்கிற வானம்... நாம் தினமும் பார்த்துப் பழகிய மரம்... ஒரு பறவையின் கண்கள் இவற்றையெல்லாம் எப்படிப் பார்க்கும்... நமக்கு மேலேயும் நம்மைச் சுற்றியும் இருக்கிற நாமறியாத புற உலகம் எப்படிப்பட்டது..? அந்த ஆச்சர்யங்களை நம் கண்களுக்கும் உணர்வுகளுக்கும் நெருக்கமாக்குகிறது டிரோன் போட்டோகிராபி. நவீனத் தொழில்நுட்பம் உருவாக்கித் தந்திருக்கிற அதீத கலைவடிவம். நமக்குப் பழகிய நிலத்தை, நதியை, வனத்தை, மலையை நாமறியாத ஒரு கோணத்தில் பேரழகாகக் காட்சிப்படுத்துவதே டிரோன் போட்டோகிராபி.

டிரோன் போட்டோகிராபியில் ஈர்ப்பு கொண்டு நம் நாட்டின், நம் ஊரின் அழகைத் தேடித் தேடிப்பதிவு செய்யும் நான்கு கலைஞர்களின் படைப்புகள் இங்கே.

இன்ஸ்டாகிராமில் பெரும் ஃபாலோயர் கூட்டத்தைக் கொண்டுள்ள இவர்கள், தங்களின் டிரோன் காமிரா மூலம் தமிழகத்தின் முக்கியமான பகுதிகளை, யாரும் இதுவரை பார்த்திராத கோணத்தில், வான்வழிப் பார்வைப் புகைப்படங்களாகக் காட்சிப்படுத்தியுள்ளனர். கலைஞர்கள் பற்றிய அறிமுகமும் அவர்கள் பதிவு செய்த காட்சிகளும் அடுத்தடுத்த பக்கங்களில்..!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஆரோவில், 
விழுப்புரம்
ஆரோவில், விழுப்புரம்
ஆலப்புழா, கேரளா
ஆலப்புழா, கேரளா
காசிமேடு, 
சென்னை
காசிமேடு, சென்னை
பறவைப் பார்வையில் நிலக்காட்சி!

தினேஷ் ( @Aerial Holic )

சேலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சிவில் இன்ஜீனியர். ஏரியல் ஷாட்டில் நிலக்காட்சிகளைப் படம் எடுப்பது தினேஷின் விருப்பத்துக்குரிய பணி. தன் டிரோன் காமிராவோடு தமிழகத்தைச் சுற்றிவருகிறார் இந்த இளைஞர். சென்னையில் வேலை பார்த்துக்கொண்டே மாதம் ஓர் ஊரைத் தேர்வு செய்து கலைப்பயணம் மேற்கொள்கிறார். ``புதிய கோணத்தில் நான் எடுத்த மகாபலிபுரம் புகைப்படங்கள் அதிக வரவேற்பைப் பெற்றன. அந்தப் பாராட்டுதான் என்னை அடுத்தடுத்த ஊர்களுக்கு நகர்த்திக்கொண்டிருக்கிறது'' என்கிறார் தினேஷ். மனிதர்களால் அதிகம் சிதைவுறாத இயற்கையான நிலக்காட்சிகளை அதிகம் விரும்புகிறார். இவர் எடுத்த கன்னியாகுமரி படகுத்துறையின் ஏரியல் படம் சமூக வலைதளத்தில் வைரலாகி, யார் இவரென்று எல்லோரையும் தேட வைத்தது.

ஏற்காடு, சேலம்
ஏற்காடு, சேலம்
ராமேஸ்வரம்
ராமேஸ்வரம்
ஸ்ரீலங்கா
ஸ்ரீலங்கா
பறவைப் பார்வையில் நிலக்காட்சி!

அஜய்(@ajai_al_dop)

அஜயின் பூர்வீகம் சென்னை. விஸ்காம் முடித்துவிட்டுத் திரையுலகில் ஒளிப்பதிவாளராக வலம்வருகிறார். பரபரப்பான பணிச்சூழலுக்கு மத்தியிலும்் புகைப்படம் எடுப்பதற்கென்று நாள்களை ஒதுக்குகிறார். தன் கலையில் தனித்துவத்தை விரும்பிய அஜய், அதற்காகக் கையில்் எடுத்ததுதான்் டிரோன்் போட்்டோகிராபி. ``என் படங்களில் மினிமிலாஸ்டிக் சார்ந்த காட்சிப்பதிவுகளை அதிகம் பதிவு செய்ய விரும்புகிறேன்'' என்கிற அஜய், பெரும்பாலும் டாப்-டௌன் ஷாட்ஸ் மட்டுமே எடுக்கிறார். இன்ஸ்டாவில்் இவரைக் கொண்டாடுகிறது இளைஞர் பட்்டாளம்.

கங்கைகொண்டான், சோழபுரம்
கங்கைகொண்டான், சோழபுரம்
மைசூர், 
இன்போசிஸ்
மைசூர், இன்போசிஸ்
நேப்பியர் பாலம் சென்னை
நேப்பியர் பாலம் சென்னை
பறவைப் பார்வையில் நிலக்காட்சி!

பீமா (@my_shutter_life)

சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜீனியர். “இந்தியாவில் சுற்றுலாத் தலங்கள் என்றால், வட இந்தியப் பெருநகரங்கள், கோயில்கள், இமயமலைச் சிகரங்களைத்தான் காட்டுகிறார்கள். தென்னிந்தியாவில் பேரழகான பல இடங்கள் இருந்தும் அவற்றை யாரும் முழுமையாகக் காட்சிப்பபடுத்தவோ கொண்டாடவோ இல்லை. அதை உணர்ந்தே தென்னிந்திய சுற்றுலாத் தலங்கள், கிராமங்களின் ஏரியல் ஷாட்களைப் பதிவுசெய்ய ஆரம்பித்தேன்..." என்கிறார் பீமா. நான்கு வருடங்களாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் டிரோன் காமிராவுடன் கிராமங்களை நோக்கிக் கிளம்பிவிடுகிறார். தீபாவளி இரவில், இவர் எடுத்த Hyperlapse படங்கள் செம வைரலாயின.

ஏற்காடு மலைகள்
ஏற்காடு மலைகள்
வேளச்சேரி
ஏரி
வேளச்சேரி ஏரி
பறவைப் பார்வையில் நிலக்காட்சி!

ராஜ் மோகன் (@rajograpy)

சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினீயர். முதலில் மொபைலில்தான் படம் எடுக்க ஆரம்பித்தார். இவர் எடுத்த ஒரு படத்துக்காக கூகுள் நிறுவனம், மொபைல் அறிமுக நிகழ்வுக்கு இவரையும் அழைத்து கௌரவித்தது. கடந்த இரண்டு வருடங்களாக டிரோன் புகைப்படக்கலையிலும் தீவிரமாக இயங்குகிறார் ராஜ்மோகன். ``தினமும் அலுவலகம் போகும்போது பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வழியாகவே செல்வேன். ஒருநாள் அதை எனது டிரோன் காமிராவில் எடுத்தேன். என்னாலேயே நம்ப முடியவில்லை. இப்படி ஒரு அழகான பிரமிப்பூட்டும் பகுதி வழியாகத்தான் நாம் தினமும் சென்று வருகிறோமா என்று ஆச்சர்யமாக இருந்தது. இதுவே என்னை இன்னும் நம் ஊர்களின் அழகான பகுதிகளைத் தேடித்தேடிப் படம் எடுக்கவைத்தது. டிரோன் காமிரா என்பதால், முழு சுதந்திரத்துடன் நான் நிலப்பரப்புகளைக் காட்சிப்படுத்த முடிந்தது. அதிகாலை நேரங்களில் இயற்கையாக ஒளியும் நிழலும் சேர்ந்து செய்யும் அழகான காட்சிகளையே பெரிதும் விரும்புகிறேன்” என்கிறார் ராஜ்மோகன்.