Published:Updated:

இன்ஜினீயரிங் டு இன்ஸ்டா ஃபேம்... பேபி போட்டோகிராபியில் கலக்கும் தம்பதி

மைனா நந்தினி
பிரீமியம் ஸ்டோரி
News
மைனா நந்தினி

மூன்றாவது கண்

`சரவணன் மீனாட்சி’ நெடுந்தொடரில் ‘மைனா’ என்ற கேரக்டரின் வழியே அனைவரின் மனத்தையும் கட்டிப்போட்டவர் நந்தினி. ரசிகர்களால் மைனா நந்தினி என்று அழைக்கப்பட்ட இவரின் முதல் திருமணம் கசப்பில் முடிந்தாலும், சக நடிகரான யோகேஸ்வரனுடனான இரண்டாம் திருமணம் இவரின் வாழ்வில் வசந்தத்தைக் கொண்டுவந்தது. சமீபத்தில் இந்த ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மைனா நந்தினி
மைனா நந்தினி

இதையடுத்து மைனா நந்தினி தன் கர்ப்பகாலத்தில் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் இணையத்தில் வைரலானது. வயிற்றில் குழந்தையுடன் வெள்ளை நிற உடையில் இருக்கும் மைனாவை மெட்டர்னிடி போட்டோஷூட் எடுத்த போட்டோகிராபர்கள் நித்யா - துர்கேஷ்நந்தி தம்பதியிடம் பேசினோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 துர்கேஷ்நந்தி - நித்யா - கியோஷிகா மித்ரா
துர்கேஷ்நந்தி - நித்யா - கியோஷிகா மித்ரா

“நாங்க ரெண்டு பேரும் இன்ஜினீயரிங் ஸ்டூடன்ட்ஸ். ஒரே காலேஜ்லதான் படிச்சோம். அவர் எனக்கு சீனியர். எங்களுக்குள்ள மலர்ந்த காதல் கல்யாணத்துல முடிஞ்சது. அவர் பேங்க்ல மேனேஜரா இருந்தார். நான் இன்ஃபோசிஸ்ல வொர்க் பண்ணிட்டு இருந்தேன். போட்டோகிராபியில அவருக்கு இருந்த காதலால பேங்க் வேலையை விட்டுட்டு முழு நேர போட்டோகிராபரா ஆகப் போறேன்னு சொன்னாரு. அவரோட இந்த முடிவுக்கு வீட்டுல யாருமே சம்மதிக்கல. ஆனா, நான் முழு சப்போர்ட் பண்ணினேன். அவர் வேலையை விட்டாலும் நான் வேலைக்குப் போறதால எப்படியும் சமாளிச்சிடலாம்னு ஒரு நம்பிக்கை இருந்துது. வேலையை விட்டுட்டு போட்டோகிராபி சம்பந்தமா நிறைய படிக்க ஆரம்பிச்சார். நிறைய இடங்களுக்குப் போய் இயற்கைக் காட்சிகளை போட்டோ எடுப்பார். ஆனா, போட்டோகிராபில எங்களுக்குத் தனியா ஓர் அடையாளம் வேணும்னு தோணுச்சு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அப்போதான் பேபி போட்டோகிராபியைத் தேர்வு செஞ்சோம். ரெண்டு பேரும் சேர்ந்தே போட்டோகிராபி பண்ணலாம்னு முடிவு செஞ்சோம். எங்க குழந்தை பேரு கியோஷிகா மித்ரா. ‘கியோஷூட்’-னு அவ பேர்லேயே பேபி போட்டோகிராபி பயணத்தைத் தொடங்கினோம். அவரோட வேலை குழந்தைகளை அழகா போட்டோ எடுக்குறது, என்னோட வேலை போட்டோஷூட்டுக்கு குழந்தைகளைத் தயார்படுத்துறதும் போட்டோஷூட்டுக்கான செட்டை ரெடி பண்றதும்.

இன்ஜினீயரிங் டு இன்ஸ்டா ஃபேம்... பேபி போட்டோகிராபியில் கலக்கும் தம்பதி
இன்ஜினீயரிங் டு இன்ஸ்டா ஃபேம்... பேபி போட்டோகிராபியில் கலக்கும் தம்பதி

மெட்டர்னிடி போட்டோஷூட் எடுக்கணும்னு யோசிச்சிட்டிருந்த நந்தினிகிட்ட எங்களைப் பத்தி அவங்க ஃபிரெண்ட்ஸ் யாரோ சொல்லியிருக்காங்க. இன்ஸ்டாவுல எங்க போட்டோஸைப் பார்த்துப் பிடிச்சுப்போனதால நந்தினி எங்களை கான்டாக்ட் பண்ணினாங்க. அவங்களோட எட்டாவது மாசத்துல போட்டோஷூட் பண்ணினோம். அவங்களை போட்டோ எடுக்குற ஒவ்வொரு முறையும் கேமராவுல இருந்து வர்ற சத்தத்தைக் கேட்டு அவங்க வயித்துல இருந்த குழந்தை உதைக்க ஆரம்பிச்சிடுச்சு. போட்டோஷூட் செம ஜாலியா போச்சு.

இன்ஜினீயரிங் டு இன்ஸ்டா ஃபேம்... பேபி போட்டோகிராபியில் கலக்கும் தம்பதி
இன்ஜினீயரிங் டு இன்ஸ்டா ஃபேம்... பேபி போட்டோகிராபியில் கலக்கும் தம்பதி

அவர்களுக்கு நல்லபடியா குழந்தை பிறந்த செய்தியைக் கேட்டப்போ ரொம்ப சந்தோஷமா இருந்துது. அடுத்ததா அவங்க குழந்தையை பேபி போட்டோஷூட் பண்றதுக்காகக் காத்துக்கிட்டு இருக்கோம். குழந்தை பிறந்த முதல் 15 நாள்களுக் குள்ளேயே பேபி போட்டோஷூட் பண்ணிடணும். அப்போதான் குழந்தையோட உடம்பு நல்லா வளையக்கூடியதா இருக்கும்.

இன்ஜினீயரிங் டு இன்ஸ்டா ஃபேம்... பேபி போட்டோகிராபியில் கலக்கும் தம்பதி
இன்ஜினீயரிங் டு இன்ஸ்டா ஃபேம்... பேபி போட்டோகிராபியில் கலக்கும் தம்பதி

குழந்தை பிறந்து ஒரு மாசம் வரை இருக்குற முகம் வளர வளர மாறிடும். அந்த முகத்தைப் பதிவு பண்றதுதான் பேபி போட்டோகிராபியில ஸ்பெஷல். நானும் இப்போ பேபி போட்டோகிராபி கத்துக்கிட்டு இருக்கேன். நிறைய பேருக்கு பேபி போட்டோகிராபி மேல ஆர்வம் இருக்கு. ஆனா, அவங்களுக்கு வழிகாட்ட ஆட்கள் இல்லை. அதனால நானும், என் கணவரும் பேபி போட்டோகிராபியை ஆர்வமுள்ளவர்களுக்கு கற்றுக்கொடுக்கவும் திட்டம் வெச்சிருக்கோம்.''