Published:Updated:

வெள்ளைத் தோலுக்கு மட்டுமா வெளிச்சம்?

வெள்ளைத் தோலுக்கு மட்டுமா வெளிச்சம்?
பிரீமியம் ஸ்டோரி
வெள்ளைத் தோலுக்கு மட்டுமா வெளிச்சம்?

மோகமுள்னு திராவிட சீரிஸ் என் பர்சனல் வொர்க். சேலை ஷூட்டிலும், நகை ஷூட்டிலும் மாடல்ஸ், ‘என்னைப் பார், என் அழகைப் பார்’னு சொல்றதைத் தாண்டி நிறைய விஷயங்கள் இருக்கு.

வெள்ளைத் தோலுக்கு மட்டுமா வெளிச்சம்?

மோகமுள்னு திராவிட சீரிஸ் என் பர்சனல் வொர்க். சேலை ஷூட்டிலும், நகை ஷூட்டிலும் மாடல்ஸ், ‘என்னைப் பார், என் அழகைப் பார்’னு சொல்றதைத் தாண்டி நிறைய விஷயங்கள் இருக்கு.

Published:Updated:
வெள்ளைத் தோலுக்கு மட்டுமா வெளிச்சம்?
பிரீமியம் ஸ்டோரி
வெள்ளைத் தோலுக்கு மட்டுமா வெளிச்சம்?
வெள்ளைத் தோலும் வடக்கத்திய முகங்களும் ஆட்சிசெய்யும் விளம்பரத் துறையில், திராவிடத் தோற்றத்தையும் கொஞ்சம் கவனிக்க வைத்திருக்கிறார் கபில் கணேஷ். விளம்பர உலகின் முன்னணி போட்டோகிராபர்.
வெள்ளைத் தோலுக்கு மட்டுமா வெளிச்சம்?
வெள்ளைத் தோலுக்கு மட்டுமா வெளிச்சம்?

‘‘பேட்டி கொடுக்குற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லீங்க’’ என அநியாய அடக்கத்துடன் சொன்னாலும், டாப் பிராண்டுகள், முன்னணி மாடல்களின் பிரியத்துக்குரிய புகைப்படக் கலைஞர் கபில்.

வெள்ளைத் தோலுக்கு மட்டுமா வெளிச்சம்?

‘‘மதுரைக்காரப் பையன் நான். அப்பா, அண்ணன், அண்ணி, அவங்க குடும்பம்னு திரும்பின பக்கமெல்லாம் டாக்டர்கள். அவங்களில் பலருக்கு குடும்பத்தோடு செலவிட நேரமே இருந்ததில்லை. ஏழாவது வரைக்கும் ஸ்கூல் டாப்பரா இருந்த எனக்கு, ‘என்னையும் மெடிசின்ல சேர்த்து விட்ருவாங்களோ’ன்னு திடீர்னு பயம் வந்தது. அதுலேருந்து, ‘தேவையான அளவு மட்டும் படிச்சாப் போதும்’னு முடிவு பண்ணிட்டேன். ஓரளவு சுமாரா வரைவேன். அது சம்பந்தப்பட்ட படிப்பா இருக்குமேன்னு லயோலால விஸ்காம் சேர்ந்தேன். அங்க சீனியர்ஸோடு ஏற்பட்ட நட்பு, அவங்களோடு அடிக்கடி ஷூட்டிங் போக ஆரம்பிச்சதுன்னு மெல்ல மெல்ல என் கவனம் போட்டோகிராபி பக்கம் திரும்புச்சு.

வெள்ளைத் தோலுக்கு மட்டுமா வெளிச்சம்?
வெள்ளைத் தோலுக்கு மட்டுமா வெளிச்சம்?

சின்னச் சின்னதா மனசுக்குப் பிடிச்ச மாதிரி போட்டோஷூட்ஸ் பண்ணிட்டிருந்தபோது பெங்காலி ஆர்ட் டைரக்டர் ஆலோக் கோஷுடன் சேர்ந்து பிளாட்டினம்னு ஒரு பப் (PUB) ஷூட்ல வொர்க் பண்ணினேன். லே அவுட் கொடுத்து அதை ரெப்ளிகேட் பண்றது எப்போதுமே என் ஸ்டைல் கிடையாது. எனக்கு சுதந்திரம் கொடுத்து, இப்படி வேணும்னு சொன்னா போதும். பிளாட்டினம் போட்டோஷூட் என் ஸ்டைல்ல அமைஞ்சது. அதுல என் வொர்க்கைப் பார்த்த அந்த ஆர்ட் டைரக்டர் ‘இதுதான் உன் ஸ்டைல், இதுலயே ஸ்பெஷலைஸ் பண்ணு’ன்னு சொன்னார். அதையே வேதவாக்கா எடுத்துட்டு ஓட ஆரம்பிச்சேன். இப்பவரைக்கும் என் வேலையில காம்ப்ரமைஸ் பண்ணுனதில்லை. இதுதான் நான், இதுதான் என் அடையாளம்’’ என்கிற கபில், பிரபல நட்சத்திரங்கள், டாப் மாடல்களுடன் பணிபுரிந்திருக்கிறார். ஆனாலும் தன் சாய்ஸ் நட்சத்திர முகங்கள் அல்ல என்கிறார்.

வெள்ளைத் தோலுக்கு மட்டுமா வெளிச்சம்?
வெள்ளைத் தோலுக்கு மட்டுமா வெளிச்சம்?

‘‘ஜூனியர் என்டிஆர் உட்பட நிறைய பிரபலங்களுடன் வொர்க் பண்ணியிருக்கேன். மாடலா இருந்ததுல இருந்தே சமந்தாவை எனக்குத் தெரியும். அதனால ஒரு கம்பர்ட் லெவல் இருந்தது. அது எல்லா செலிபிரிட்டீஸ்கிட்டயும் கிடைக்காது. தன் முகத்தை இப்படித்தான் காட்டணும்னு நினைப்பாங்க. இவங்கதான் ஸ்டைலிஸ்ட், இவங்கதான் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்னு ஒரு டீமோடு வருவாங்க. அது நல்ல டீமாகூட இருக்கலாம். ஆனா என்னைப் பொறுத்தவரை போட்டோகிராபரை முழுமையா நம்பற மாடல்தான் எனக்கு வேணும். செலிபிரிட்டீஸ் விஷயத்துல அது கொஞ்சம் கஷ்டம். எனக்கு பிரபலமான முகங்களைவிடவும் பிரமாதமான பாடி லாங்வேஜ்தான் முக்கியம்...’’ நியாயமான காரணத்துடன் விளக்குபவருக்கு, திராவிடச் சாயல் கொண்ட முகங்களின்மீது அதீத ஈர்ப்பு.

வெள்ளைத் தோலுக்கு மட்டுமா வெளிச்சம்?
வெள்ளைத் தோலுக்கு மட்டுமா வெளிச்சம்?

‘‘2015-ல என்.ஏ.சி ஜுவல்லர்ஸுக்காக ஆன்ட்டிக் ஜுவல்லரி போட்டோஷூட் பண்ணினேன். வழக்கமா சேலை, நகை விளம்பரங்களுக்கு போட்டோஷூட் பண்ணும்போது பெருசா எக்ஸ்பெரிமென்ட் பண்ண முடியாது. ஏஜென்சி கொடுக்கும் லே அவுட்டுக்கு ஏற்றபடி பண்ணணும். ஆனா, அதுல வழக்கமான கண்டிஷன்ஸ் இல்லை. 1920 மூடு வரணும்னு மட்டும் சொன்னாங்க.

கறுப்புங்கிறது திராவிட நிறம். ஆனாலும் சேலை விளம்பரத்துலயும் நகை விளம்பரத்துலயும் சிவப்பா இருக்கும் மாடல்களைத்தான் யூஸ் பண்றோம். இந்தப் பிம்பத்தை உடைக்கலாம்னு தோணுச்சு. ஸ்டூடியோவும் வேண்டாம், லொகேஷன்ல டிரை பண்ணலாம்னு சொன் னேன். பெங்களூரைச் சேர்ந்த மாடல் பல்லவி சிங்கை வெச்சு பண்ணின அந்த ஷூட் ரொம்பத் திருப்தியா அமைஞ்சது. அதுலேருந்து என் தேடல் இன்னும் அதிகரிக்க ஆரம்பிச்சது.

கபில் கணேஷ்
கபில் கணேஷ்

மாடல்னா வெள்ளையா இருக்கணும், குட்டை முடி கூடாது... இப்படி பேஷன் இண்டஸ்ட்ரியில எழுதப்படாத ரூல்ஸ் நிறைய இருக்கு. உலகம் முழுக்க இதே நிலைதான். என் வொர்க் மூலமா இங்கே நிலவும் ஸ்டீரியோடைப்பைத் தகர்க்கும் முயற்சிகளைத் தொடர்ந்திட்டிருக்கேன்...’’ நிதர்சனம் பகிர்பவர், அப்படியொரு முயற்சியாகக் கையில் எடுத்ததுதான் ‘மோகமுள்.’

‘‘மோகமுள்னு திராவிட சீரிஸ் என் பர்சனல் வொர்க். சேலை ஷூட்டிலும், நகை ஷூட்டிலும் மாடல்ஸ், ‘என்னைப் பார், என் அழகைப் பார்’னு சொல்றதைத் தாண்டி நிறைய விஷயங்கள் இருக்கு. தமிழ் படிச்சவன் நான். தமிழ் இலக்கியத்துல இல்லாத கதைகளோ, பெண்ணைப் பற்றிய உருவகங்களோ வேற எதுலயும் இல்லை. அதை இன்ஸ்பிரேஷனா வெச்சு ஆரம்பிச்சதுதான் மோகமுள். வள்ளி, மாதவி, வைகைன்னு ரசிச்சு ரசிச்சுப் பண்ணிட்டிருக்கேன். எல்லா போட்டோகிராபர்களுக்கும் தனித்துவமான அடையாளம்னு ஒண்ணு இருக்கும். மோகமுள் எனக்கு அப்படியானது. வெளிநாட்டுக் காரங்களோடு அதிகம் வொர்க் பண்றேன். கடந்த ரெண்டு, மூணு மாசமா உக்ரைன், கென்யாகாரங்களோடு வேலை. புதுப்புது ஆட்கள், புதுப்புது ஐடியாக்களோடு வர்றாங்க. விஸ்காம்ல கத்துக்க முடியாத பல விஷயங்களை பயணங்களில் சந்திக்கிற மனிதர்கள் மூலமா கத்துக்கறேன். நானா தேர்ந்தெடுத்த துறை இது. சவால்களைக் கடந்து ரொம்ப சந்தோஷமா வொர்க் பண்றேன்...’’ நிறைவாகச் சொல்கிறார். கேமரா மட்டுமல்ல, கபிலின் வாழ்க்கையும் ரசனையானது!